தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 பலியான விசுவநாதன்
 பலியான விசுவநாதன்
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூத்தி யார்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் காசி விசுவநாதன்(26), கட்டிட தொழிலாளி.

இவர் இரவு நேரத்தில் வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது காசி விசுவநாதன் மீது அந்த வழியாக வந்த ரெயில் மோதியது.

இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் காசி விஸ்வநாதன் நீண்டநேர மாகியும் வீடு திரும்பாததால் காலையில் உறவினர்கள் தேடிப்பார்த்தனர். அப்போது காசி விசுவநாதன் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தது தெரியவந்தது. மதுரை ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோத னைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com