search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்விட்டர்"

    • ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கும் முழு நடவடிக்கைகள் கடந்த வாரம் நிறைவு பெற்றன.
    • ட்விட்டர் தலைமையகத்திற்கு சென்ற எலான் மஸ்க் கையில் சின்க் ஒன்றை எடுத்து செல்லும் வீடியோ வைரலானது.

    ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர பணியை சரியான காலக்கெடுவுக்குள் செய்து முடிக்க தவரும் ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த வாரம் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். ட்விட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதன் படி ட்விட்டர் புளூ சந்தாவுக்கான மாதந்திர கட்டணம் 19.99 டாலர்கள் என மாறும் என கூறப்படுகிறது.

    வெரிபைடு பயனர்கள் 90 நாட்கள் வரை புளூ டிக் வைத்திருக்க முடியும். அதற்குள் சந்தா செலுத்தாத பட்சத்தில் புளூ டிக் நீக்கப்பட்டு விடும். இதற்கான வசதியை ட்விட்டரில் செயல்படுத்த நவம்பர் 7 ஆம் தேதி கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை செய்ய தவறும் பட்சத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர் என தகவல் வெளியாகி உள்ளது.

    • பலகட்ட சோதனைகளை அடுத்து ட்விட்டர் வலைதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் பட்டன் வழங்கப்பட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்களில் கட்டணம் செலுத்துவோருக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் நிறுவனம் அமெரிக்காவில் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டும் எடிட் பட்டன் வசதியை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் எடிட் பட்டன் வழங்குவதாக ட்விட்டர் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து தான் அமெரிக்காவில் முதற்கட்டமாக எடிட் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.

    எடிட் ட்விட் அம்சத்தின் சோதனை அமெரிக்காவில் நீட்டிப்பதாக ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த வசதி முதற்கட்டமாக ட்விட்டர் புளூ பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ட்விட்டர் தளத்தில் எடிட் செய்யும் வசதியை வழங்க அதன் பயனர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த வசதி மூலம் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளை அதன் பின் எடிட் செய்ய முடியும்.

    இந்த வசதியை கொண்டு ட்விட்டர் பதிவுகளில் தவறுதலாக ஏற்படும் பிழைகளை திருத்த முடியும். எனினும், இந்த அம்சம் போலி தகவல்கள் பரவ உதவும் என கூறி ட்விட்டர் இத்தனை ஆண்டுகளாக எடிட் வசதியை வழங்காமல் இருந்து வந்தது. எனினும், தற்போது இந்த நிலை மெல்ல மாற துவங்கி உள்ளது.

    மாதத்திற்கு 4.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 410 செலுத்தி ட்விட்டர் புளூ சேவையை பயன்படுத்துவோருக்கு எடிட் ட்விட் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் கொண்டு ட்விட் செய்த முப்பது நிமிடங்களில் சில முறை ட்விட்டர் பதிவுகளை மாற்ற முடியும். இவ்வாறு எடிட் செய்யப்படும் ட்விட்களில் ஐகான் மற்றும் டைம்ஸ்டாம்ப் வழங்கப்படும். இதை கொண்டு ட்விட் எடிட் செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    • ட்விட்டர் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் ட்விட் வசதி ஒருவழியாக வழங்கப்பட இருக்கிறது.
    • முதற்கட்டமாக எடிட் ட்விட் வசதி ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் ட்விட் வசதியை செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் வழங்க இருக்கிறது. முதற்கட்டமாக எடிட் ட்விட் வசதி புளூ சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ட்விட்டர் புளூ சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 4.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 397.4 ஆகும்.

    எடிட் ட்விட் வசதி மூலம் பயனர்கள் பதிவிட்ட ட்விட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு எடிட் செய்யப்பட்ட ட்விட்ள் மாற்றப்பட்ட விவரம் ஐகான், டைம்-ஸ்டாம்ப் மற்றும் லேபல் மூலம் மற்ற பயனர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ட்விட் எடிட் செய்யப்பட்டு இருப்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.


    இதோடு எடிட் செய்யப்பட்ட ட்விட் வரலாற்றை பார்க்கும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ட்விட் பதிவிடப்பட்ட நேரம், எடிட் செய்யப்பட்ட நேரம், எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். "ட்விட்டர் தளத்தில் எடிட் ட்விட் வசதி செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பொது மக்களிடையே சோதனைக்கு வழங்கப்பட இருக்கிறது" என பிளாட்பார்மர் கேசி நியூடன் தெரிவித்து இருக்கிறார்.

    புது அம்சம் மூலம் ட்விட்களை எடிட் செய்து மாற்றிக் கொள்ள முடியும், ஆனாலும் அவற்றை எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ட்விட் செய்த முப்பது நிமிடங்கள் கழித்தே அவற்றை எடிட் செய்ய முடியும். கூடுதலாக அடுத்த முப்பது நிமிடங்களில் ட்விட்களை ஐந்து முறை மட்டுமே எடிட் செய்ய முடியும்.

    • ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
    • தற்போது ட்விட்டர் எடிட் அம்சத்தை பயன்படுத்துவது பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.

    ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் ட்விட்களை எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிவித்தது. இது ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த அம்சமாகும். இது பற்றிய வலைதள பதிவில் ட்விட்டர் நிறுவனம் எடிட் வசதி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களை வைத்து எடிட் வசதி சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அம்சம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.

    ட்விட்களை எடிட் செய்ய முடியும், ஆனாலும் அவற்றை எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ட்விட் செய்த முப்பது நிமிடங்கள் கழித்தே அவற்றை எடிட் செய்ய முடியும். கூடுதலாக அடுத்த முப்பது நிமிடங்களில் ட்விட்களை ஐந்து முறை மட்டுமே எடிட் செய்ய முடியும். இத்துடன் ட்விட் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.


    எடிட் செய்யப்பட்ட ட்விட்களை தெரியப்படுத்தும் வகையில் டைம்ஸ்டாம்ப், ஐகான் மற்றும் லேபல் இடம்பெறும். உண்மையான ட்விட்டர் பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை வாசகரக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அந்த லேபிலை க்ளிக் செய்ததும், ட்விட்களின் எடிட் வரலாற்றை பார்க்க முடியும். அதில் ட்விட் எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போதைக்கு இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    முதற்கட்டமாக எடிட் செய்யும் வசதி ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும். அதன் பின் தளத்தில் அனைவருக்கும் இந்த வசதியை வழங்குவது பற்றி ட்விட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பயனர்கள் இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை பொருத்து, மேலும் அதிக பகுதிகளில் இந்த அம்சத்தை வழங்குவது பற்றி ட்விட்டர் முடிவு செய்ய இருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

    இந்தியாவில் ட்விட்டர் புளூ சந்தா வசதி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், ட்விட்களை எடிட் செய்யும் வசதி தற்போதைக்கு கிடைக்கவில்லை. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டுமே ட்விட்டர் புளூ சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளிலும் இந்த சேவை வழங்கப்படுமா என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

    • ட்விட்டர் தளத்தில் எடிட் பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
    • தற்போதைய தகவல்களின் படி ஒரு வழியாக இந்த வசதி வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் எடிட் பட்டன் வழங்குவதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. நிறுவனத்திற்குள் எடிட் பட்டன் டெஸ்டிங் துவங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் விரைவில் எடிட் ட்விட் அம்சத்தை விரைவில் ட்விட்டர் புளூ சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    புதிய எடிட் ட்விட் அம்சம் மூலம் யார் வேண்டுமானாலும், ட்விட் எடிட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ட்விட் செய்த முதல் அரை மணி நேரத்திற்குள் அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.


    இவ்வாறு எடிட் செய்யப்பட்ட ட்விட்களில், உண்மையான பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை உணர்த்தும் ஐகான், டைம்ஸ்டாம்ப் மற்றும் லேபல் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கும். இதன் மூலம் ட்விட்டர் பதிவு எத்தனை முறை எடிட் செய்யப்பட்டு இருக்கிறது, எந்த நேரத்தில் எடிட் செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    ட்விட்டர் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக எடிட் பட்டன் இருந்து வந்த நிலையில், ஒரு வழியாக இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும்.

    • அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
    • ஷாப்பிங் வசதியை பயனர்கள் பெறுவதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை ட்விட்டர் நிறுவனம் அதில் கொண்டுவர உள்ளது.

    உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். அந்நிறுவனம் தனது பயனர்களை கவரும் விதமாக பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது புது அப்டேட்டாக, ட்விட்டர் வாயிலாக அதன் பயனர்கள், நேரடியாக ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கும் வசதியை, அந்நிறுவனம் விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


    இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பிஃபை உடன் ட்விட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. ட்விட்டர் மூலம் இந்த ஷாப்பிங் வசதியை பயனர்கள் பெறுவதற்காக, தனியாக ஒரு ஆப்ஷனை அந்நிறுவனம் அதில் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் அனைத்து முன்னணி பிராண்ட்களின் பொருட்களையும், இனி ட்விட்டர் வாயிலாக வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடந்து வரும் நிலையில், இது தொடர்பான #NoConfidenceMotion மற்றும் #RahulGandhi ஆகிய இரு ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டிங் ஆனது.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், சமூக வலைத்தளமான ட்விட்டரில் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பலரும் கருத்து கூறி வருவதால் #NoConfidenceMotion என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. சுமார் 3 லட்சம் ட்வீட்டுகள் இது தொடர்பாக பதிவிடப்பட்டுள்ளன.

    அதேபோல், #RahulGandhi என்ற ஹேஷ்டேக்கும் உலகளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. ராகுல்கந்தி இன்று மக்களவையில் பேசிய பேச்சு மற்றும் அவர் மோடியை கட்டியணைத்து வாழ்த்து பெற்றது போன்ற செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் ட்வீட்டுகள் ராகுல் காந்தியை மையப்படுத்தி பதிவிடப்பட்டுள்ளன.
    திமுக செயல்தலைவர் ஸ்டாலின் லண்டனில் இருந்து நாடு திரும்பியதை கிண்டல் செய்து பதிவிடப்பட்ட #GoBackStalin ஹேஷ்டேக்-க்கு போட்டியாக திமுகவினர் ட்ரெண்ட் செய்த #WelcomeStalin தேசிய அளவில் இடம் பிடித்துள்ளது.
    சென்னை:

    திமுக செயல்தலைவர் ஸ்டாலின் லண்டனில் இருந்து நாடு திரும்புவதை ஒட்டி பாஜக மற்றும் வலதுசாரி ஆதரவாளர்கள் #GoBackStalin (திரும்பிப்போ ஸ்டாலின்) என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். 

    மோடி மற்றும் அமித்ஷா வருகையை ஒட்டி #GoBackModi மற்றும் #GoBackAmitShah ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரண்ட் ஆனதற்கு திமுக காரணம் என கருதி பாஜக இன்று ஸ்டாலினை எதிர்த்து கருத்து பதிவிட்டனர்.

    ஆனால், #GoBackStalin-க்கு போட்டியாக திமுகவினர் #WelcomeStalin என்ற ஹேஷ்டெக்கை டிரெண்ட் செய்ய தற்போது தேசிய அளவில் அந்த ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது. சுமார் 46 ஆயிரம் ட்விட்கள் #WelcomeStalin என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிடப்பட்டுள்ளன. 
    தனது மகள்களை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதியை குறிப்பிடவில்லை என கமல்ஹாசன் ட்வீட் செய்திருந்தற்கு, அவரது மகள் ஸ்ருதியின் பழைய பேட்டி ஒன்றை முன்வைத்து நெட்டிசன்கள் கமலை விமர்சித்து வருகின்றனர். #KamalHaasan #ShrutiHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விக்கு பதிலளித்து ட்வீட் செய்தார். சாதியை ஒழிக்க என்ன யோசனையை முன்னெடுக்கின்றீர்கள்? என ஒருவர் கேட்டிருந்தார்.

    அதற்கு பதிலளித்து ட்வீட் செய்த அவர், “எனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கான விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுத்தேன். அடுத்த தலைமுறைக்கு ஜாதியை எடுத்துச் செல்லாமல் தவிர்க்க இதுவே வழி. அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

    ‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், அங்கு நடந்த ஒரு சம்பவத்தை வைத்து #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. #Rajinikanth #Thoothukudi
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்புக்கு பின்னர் முதன்முறையாக நேரடியாக மக்களை சந்திக்கும் ஒரு முயற்சியாக இன்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் ரஜினிகாந்திடம், “யார் நீங்கள்?” என்று கேட்டார்.

    அதற்கு சிரித்துக்கொண்டே, “நான் ரஜினி” என அவர் பதிலளிக்க, “எங்கிருந்து வந்தீங்க?” என அந்த இளைஞர் கேட்க, “சென்னையிலிருந்து” என ரஜினி கூறினார். “சென்னையிலிருந்து இங்கே வர 100 நாட்கள் ஆச்சா” என அந்த இளைஞர் கேள்வி எழுப்ப ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார். 



    100 நாட்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் போராட்டம் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தற்போது அங்கு சென்றுள்ளதை மையமாக வைத்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
    ×