search icon
என் மலர்tooltip icon

    கணினி

    எடிட் வசதி கொடுத்து கூடவே ட்விஸ்ட் வைத்த ட்விட்டர்
    X

    எடிட் வசதி கொடுத்து கூடவே ட்விஸ்ட் வைத்த ட்விட்டர்

    • ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
    • தற்போது ட்விட்டர் எடிட் அம்சத்தை பயன்படுத்துவது பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.

    ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் ட்விட்களை எடிட் செய்யும் வசதியை சமீபத்தில் அறிவித்தது. இது ட்விட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த அம்சமாகும். இது பற்றிய வலைதள பதிவில் ட்விட்டர் நிறுவனம் எடிட் வசதி வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களை வைத்து எடிட் வசதி சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த அம்சம் வெளியீட்டுக்கு தயாராகி விட்டது.

    ட்விட்களை எடிட் செய்ய முடியும், ஆனாலும் அவற்றை எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ட்விட் செய்த முப்பது நிமிடங்கள் கழித்தே அவற்றை எடிட் செய்ய முடியும். கூடுதலாக அடுத்த முப்பது நிமிடங்களில் ட்விட்களை ஐந்து முறை மட்டுமே எடிட் செய்ய முடியும். இத்துடன் ட்விட் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.


    எடிட் செய்யப்பட்ட ட்விட்களை தெரியப்படுத்தும் வகையில் டைம்ஸ்டாம்ப், ஐகான் மற்றும் லேபல் இடம்பெறும். உண்மையான ட்விட்டர் பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை வாசகரக்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். அந்த லேபிலை க்ளிக் செய்ததும், ட்விட்களின் எடிட் வரலாற்றை பார்க்க முடியும். அதில் ட்விட் எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போதைக்கு இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    முதற்கட்டமாக எடிட் செய்யும் வசதி ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும். அதன் பின் தளத்தில் அனைவருக்கும் இந்த வசதியை வழங்குவது பற்றி ட்விட்டர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. பயனர்கள் இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை பொருத்து, மேலும் அதிக பகுதிகளில் இந்த அம்சத்தை வழங்குவது பற்றி ட்விட்டர் முடிவு செய்ய இருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

    இந்தியாவில் ட்விட்டர் புளூ சந்தா வசதி இன்னும் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதால், ட்விட்களை எடிட் செய்யும் வசதி தற்போதைக்கு கிடைக்கவில்லை. அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டுமே ட்விட்டர் புளூ சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளிலும் இந்த சேவை வழங்கப்படுமா என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

    Next Story
    ×