search icon
என் மலர்tooltip icon

    கணினி

    புளூ சந்தாதாரர்களுக்கு எடிட் ட்விட் வசதி - எப்போ கிடைக்கும் தெரியுமா?
    X

    புளூ சந்தாதாரர்களுக்கு எடிட் ட்விட் வசதி - எப்போ கிடைக்கும் தெரியுமா?

    • ட்விட்டர் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் ட்விட் வசதி ஒருவழியாக வழங்கப்பட இருக்கிறது.
    • முதற்கட்டமாக எடிட் ட்விட் வசதி ட்விட்டர் புளூ சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எடிட் ட்விட் வசதியை செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் வழங்க இருக்கிறது. முதற்கட்டமாக எடிட் ட்விட் வசதி புளூ சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ட்விட்டர் புளூ சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 4.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 397.4 ஆகும்.

    எடிட் ட்விட் வசதி மூலம் பயனர்கள் பதிவிட்ட ட்விட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு எடிட் செய்யப்பட்ட ட்விட்ள் மாற்றப்பட்ட விவரம் ஐகான், டைம்-ஸ்டாம்ப் மற்றும் லேபல் மூலம் மற்ற பயனர்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் ட்விட் எடிட் செய்யப்பட்டு இருப்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.


    இதோடு எடிட் செய்யப்பட்ட ட்விட் வரலாற்றை பார்க்கும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் ட்விட் பதிவிடப்பட்ட நேரம், எடிட் செய்யப்பட்ட நேரம், எத்தனை முறை எடிட் செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். "ட்விட்டர் தளத்தில் எடிட் ட்விட் வசதி செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் பொது மக்களிடையே சோதனைக்கு வழங்கப்பட இருக்கிறது" என பிளாட்பார்மர் கேசி நியூடன் தெரிவித்து இருக்கிறார்.

    புது அம்சம் மூலம் ட்விட்களை எடிட் செய்து மாற்றிக் கொள்ள முடியும், ஆனாலும் அவற்றை எத்தனை முறை எடிட் செய்ய முடியும் என்பதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக ட்விட் செய்த முப்பது நிமிடங்கள் கழித்தே அவற்றை எடிட் செய்ய முடியும். கூடுதலாக அடுத்த முப்பது நிமிடங்களில் ட்விட்களை ஐந்து முறை மட்டுமே எடிட் செய்ய முடியும்.

    Next Story
    ×