search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Twitter Blue"

    • டுவிட்டர் புளூ சந்தா முறையில், பயனர்களுக்கு ஏற்கனவே ஏராளமான அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    • இந்த அம்சம் டுவிட்டர் ஐஒஎஸ் வெர்ஷன் மற்றும் வலைதளத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.

    டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க், தனது சமூக வலைதள சேவையில் புது வசதியை அறிமுகம் செய்து இருக்கிறார். இந்த வசதி டுவிட்டர் புளூ பயனர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா முறையில், பயனர்களுக்கு ஏற்கனவே ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் புதிய அம்சம் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி பயனர்கள் 2 மணி நேரத்திற்கு ஓடும் அல்லது 8 ஜிபி வரையிலான அளவு கொண்ட வீடியோக்களை டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். தற்போது இந்த அம்சம் டுவிட்டர் ஐஒஎஸ் வெர்ஷன் மற்றும் வலைதளத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு சாதனஙகளில் டுவிட்டர் பயன்படுத்துவோர் பத்து நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

    டுவிட்டரில் அதிக நேரம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்வது எப்படி?

    டுவிட்டர் புளூ சந்தாதாரர்கள் அதிக நேரம் ஓடும் வீடியோக்களை பதிவற்றம் செய்ய கம்போஸ் (compose) பட்டனை க்ளிக் செய்து, சாதனத்தில் இருந்து பதிவேற்றம் செய்ய வேண்டிய வீடியோவை க்ளிக் செய்ய வேண்டும். இனி டுவிட் செய்யக்கோரும் பட்டனை க்ளிக் செய்தால், வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். ஒரு நாளில் எத்தனை வீடியோக்களை வேண்டுமானாலும் அப்லோடு செய்து கொள்ளலாம்.

    முன்னதாக டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யாக்கரினோ பதவியேற்க இருப்பதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். லிண்டா யாக்கரினோ என்பிசியுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர பிரிவு தலைவராக பணியாற்றி வந்தார். இவர் பதவியேற்ற பின், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் பிராடக்ட் டிசைன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பிரிவு தலைவராக பணியாற்ற இருக்கிறார்.

    • ட்விட்டர் தளத்தில் எடிட் பட்டன் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
    • தற்போதைய தகவல்களின் படி ஒரு வழியாக இந்த வசதி வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் தனது சேவையில் எடிட் பட்டன் வழங்குவதற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. நிறுவனத்திற்குள் எடிட் பட்டன் டெஸ்டிங் துவங்கி இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. மேலும் விரைவில் எடிட் ட்விட் அம்சத்தை விரைவில் ட்விட்டர் புளூ சந்தாதாரர்கள் பயன்படுத்த முடியும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    புதிய எடிட் ட்விட் அம்சம் மூலம் யார் வேண்டுமானாலும், ட்விட் எடிட் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். ட்விட் செய்த முதல் அரை மணி நேரத்திற்குள் அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.


    இவ்வாறு எடிட் செய்யப்பட்ட ட்விட்களில், உண்மையான பதிவு எடிட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை உணர்த்தும் ஐகான், டைம்ஸ்டாம்ப் மற்றும் லேபல் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கும். இதன் மூலம் ட்விட்டர் பதிவு எத்தனை முறை எடிட் செய்யப்பட்டு இருக்கிறது, எந்த நேரத்தில் எடிட் செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

    ட்விட்டர் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக எடிட் பட்டன் இருந்து வந்த நிலையில், ஒரு வழியாக இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. எனினும், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும்.

    ×