search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயற்குழு கூட்டம்"

    • ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
    • அமைச்சர் ஆர். காந்தி அழைப்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் , கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் நாளை 10-ந்்தேதி மாலை 3 மணிக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே. சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் தி.மு.க.முப்பெரும் விழா, பவள விழா குறித்தும்,வாக்காளர் பட்டியல் , வாக்குச்சாவடி சரிபார்த்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ,தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தவறாது பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    விருதுநகர்

    விருதுநகர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுநகரில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞரணி கூட்டத்திற்கு வரவுள்ளதை முன்னிட்டு விருதுநகரில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அவைத்தலைவர் தங்கராஜ், செல்வமணி ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.

    தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட செயலாளர், நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பா ளர்கள், மாவட்ட பிரதி நிதிகள், கட்சி முன்னோடி கள் கலந்து கொள்கின்றனர்.

    கூட்டத்தில் விருதுநகரில் நடைபெற உள்ள இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குதல் ஆகியவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
    • பிரியங்கா உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய செயற்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மன்மோ கன்சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரியங்கா காந்தி வதேராவும் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து அவர் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோனி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், அஜய் மாக்கன், ப.சிதம்பரம் ஆகியோரும் புதிய செயற் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

    தீபாதாஸ் முன்ஷி, சையத் நஸீர் ஹுசைன், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட புதிய முகங்களுக்கும் செயற்குழுவில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. சோனியாவின் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பிய சசி தரூர், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சச்சின் பைலட் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

    • தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சேதுராமன் கலந்து கொண்டு அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.

    தருமபுரி, 

    தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சேதுராமன் கலந்து கொண்டு அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ் மாவட்ட செயற்குழு கூட்ட த்தின் செயல்பாடுகள் இனி மேற்கொள்ள வேண் டிய நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.

    கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் கிளைக் கூட்டங்கள் நடத்துவது , அறிவியல் மனப்பான்மை யும் அறிவியல் கண்ணோட்ட த்தையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தி யில் கொண்டு செல்வது, வானவில் மன்ற செயல் பாடுகள் பள்ளி அளவில் சிறப்பாக நடைபெறுவதற்கு வானவில் மன்ற கருத்தாளர் களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வானவில் மன்ற பொறுப்பாளர்கள் அருள் குமார், காவியா, மீரா, பிரியா, நவீனா, பவதாரணி, சோனியா, மஞ்சுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கார்த்தி நன்றி கூறினார். 

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டாரத் துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார்.வட்டாரச் செயலாளர் கண்ணன் தீர்மானங்களை விளக்கி இயக்க உரையாற்றி னார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வகுப்பறை கற்றல் கற்பித்தலில் நடைமுறை சாத்தியமற்ற மாணவர்க ளிடையே கற்றல் இடை வெளியை உருவாக்கும் எண்ணும்-எழுத்தும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தமிழக அரசு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணை யான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்.

    கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண்டர், அக விலைப்படி உயர்வு, நிலுவைத் தொகை போன்றவற்றை தமிழக அரசு திருப்பி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்டார பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.

    • கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூர்-தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
    • மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஓசூர்,

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவஅணி ஆகிய வற்றின் சார்பில் நாளை, தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், ஓசூர்-தளி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.பி.முருகன், பொருளாளர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் கட்சியினர் கட்சியினர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில், மேற்கு மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரகாஷ் எம்.எல்.ஏ.கூறினார்.

    • செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கடத்தூர்,

    தருமபுரி கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கடத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பா.ம.க .கவுரவ தலைவர் பென்னாகரம் எம்.எல்.ஏ. ஜி.கே மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அரசாங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தருமபுரி தேர்தல் பணிக்குழு தலைவர் ஸ்டீல்ஸ் சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி, செந்தில், ராமசுந்தரம், முத்துசாமி, ஜெயகுமார், சிவகுமார், வணங்காமுடி, இமயவர்மன், ராமலிங்கம் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் ஜி.கே. மணி பேசும் போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    கட்சியின் 35-வது ஆண்டு துவக்கவிழா எழுச்சியோடு கொண்டாட வேண்டும். ஆழுகின்றவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கட்சியாக பாமக உள்ளது என பேசினார்.

    • பா.ம.க செயற்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் தொண்டி பேரூராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ், தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப் பாளராக மாவட்ட செயலா ளர் தேனி.சை.அக்கிம் கலந்து கொண்டார்.மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் வர வேற்றார்.

    சென்னையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு கைகளை இழந்த ராமநாத புரம் மாவட்ட குழந்தைக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்க வேண்டும் அவர் களுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்க வேண்டும் மேலும் இது விஷயமாக மாநில சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீதி வேண் டும் என்றால் நீதிமன்றம் செல்லுங்கள் என்று கூறி யதை வன்மையாக கண்டிக் கிறோம்.

    அலட்சியமாக இருந்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெறும். தேவிபட்டினம் ஊராட்சி நவபாசானம் செல்லும் வழியில் மாநிலங் களவை உறுப்பினர் அன்பு மணி ராமதாஸின் நிதியி லிருந்து உயர் கோபுர விளக்கு அமைப்பது என்றும், வருகிற 25-ந் தேதி பசுமைத் தாயகம் நாளான பா.ம.க நிறுவனர் ராம தாஸின் பிறந்தநாளில் திரு வாடானை ஒன்றியம் பகுதி யில் 100 மரக்கன்றுகள் நட்டு, 10 இடங்களில் கட்சி கொடி ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    முடிவில் ஒன்றிய தலைவர் மணி என்ற ஞானப்பிரகாசம் நன்றி கூறினார்.

    திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம், ராம நாதபுரம் மாவட்ட செயலா ளர் பாலா, ராமநாதபுரம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்தி மற்றும் திருவாடானை ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
    • அப்போது பேசிய சரத் பவார், வயது ஒரு தடையல்ல, நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன் என்றார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் நேற்று தனித்தனியாக நடைபெற்றன.

    இதையடுத்து, அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் இன்று நடைபெற்றது.

    அப்போது பேசிய அவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் நான் தான். 82 ஆக இருந்தாலும் சரி, 92 ஆக இருந்தாலும் சரி, வயது ஒரு தடையல்ல. நான் இப்போதும் உத்வேகத்துடன் இருக்கிறேன். இன்றைய சந்திப்பு எங்களின் மன உறுதியை அதிகரிக்க உதவியுள்ளது என தெரிவித்தார்.

    செயற்குழு கூட்டம் முடிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி திடீரென அங்கு வந்து சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார்.

    • சரத் பவார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    • அஜித் பவார் தலைமையில் மும்பையில் நடந்த கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

    மும்பை:

    மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பையில் இன்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டங்கள் தனித்தனியாக நடைபெற்றன.

    இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்களும், அஜித் பவார் தலைமையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர்.

    இதையடுத்து, அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் ஜூலை 6-ம் தேதி (நாளை) தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.

    முன்னதாக, செய்தியாளர்களை இன்று சந்தித்த சரத் பவார், கட்சியின் பெயரும் சின்னமும் யாரிடம் செல்லப் போவது இல்லை என்றார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த கடப்பேரி கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் வாலாஜா இந்து முன்னணி ஒன்றிய செயற்குழுகூட்டம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வாலாஜா ஒன்றிய செயலாளர் பார்த்திபன் தலைமை வகித்தார். ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் இந்து முன்னணி கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் கலந்துகொண்டு பேசினார்.

    இதில் பள்ளி, கல்லூரிகளில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்து முன்னணி மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா வரவேற்றார். மாவட்ட இளைஞர் சங்க செயலாளர். மாவட்ட மாணவர் சங்கர் செயலாளர் சந்தோஷ் தீர்மானத்தை நிறைவேற்றி னார். துல்கர் நன்றி கூறினார்.

    சிறப்பு விருந்தினராக கவிஞர் செஞ்சி சின்னசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அலுவலகம் முன்பிருந்த டாஸ்மாக் கடையை அகற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வது, அதற்கு உறுதுணையாக இருந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

    மேலும் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகில், முருகன் கோவில் முன்புள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இந்நிகழ்விற்கு கீழக்கரை ஒன்றிய செயலாளர் லோகநாதன் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறி யாளர் ஷரீப், கடலாடி ஒன்றிய செய லாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளி முத்து ஒன்றிய துணைச் செயலா ளர் முனியசாமி, ராமநாத புரம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் இளைஞர் சங்கத் தலைவர் முனியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பின் கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்த நிர்வாகிகள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எழுதிய சுக்கா மிளகா சமூக நீதி? என்ற புத்தகத்தை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

    ×