search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கபிலர்மலை வட்டார கிளையின் செயற்குழு கூட்டம்
    X

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஜேடர்பாளையத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கபிலர்மலை வட்டார கிளையின் செயற்குழு கூட்டம்

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.
    • கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் கபிலர்மலை வட்டார கிளையின் வட்டார செயற்குழு கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டாரத் துணைத் தலைவர் சரவணன் வரவேற்றார்.வட்டாரச் செயலாளர் கண்ணன் தீர்மானங்களை விளக்கி இயக்க உரையாற்றி னார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வகுப்பறை கற்றல் கற்பித்தலில் நடைமுறை சாத்தியமற்ற மாணவர்க ளிடையே கற்றல் இடை வெளியை உருவாக்கும் எண்ணும்-எழுத்தும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்க ளுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தமிழக அரசு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணை யான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்.

    கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு சரண்டர், அக விலைப்படி உயர்வு, நிலுவைத் தொகை போன்றவற்றை தமிழக அரசு திருப்பி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்டார பொருளாளர் ஜோதி நன்றி கூறினார்.

    Next Story
    ×