search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி"

    • வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியே எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    சென்னை:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என கடந்த ஜூன் 16-ந்தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இதையடுத்து இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அதில், "செந்தில் பாலாஜி விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து தமிழக முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தார்மிக ரீதியாக சரியானது அல்ல எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது மற்றும் அது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில் ஐகோர்ட்டு உத்தரவு சரியே என்றும் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிப்பது பற்றி முதலமைச்சர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜி கீழ் கோர்ட்டை நாடலாம். அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

    செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி 14-வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதன் வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஜனவரி 11ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.
    • அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜி கீழ் கோர்ட்டை நாடலாம். அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் தெரிவித்தார்.

    அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி விசாரணையை 8-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    • ஜூன் 13-ந்தேதி பலமணி நேரம் விசாரணைக்குப்பின் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    • ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஜூன் 13-ந்தேதி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில், விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்படுவதாக தெரிவித்தார். இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் காவேரி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்ததும் ஜூன் 21-ந்தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.

    அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்து இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவிட்டார்.

    என்னுடைய பரிந்துரை இல்லாமல் அமைச்சரை சேர்க்கவே, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார்.

    அறுவை சிகிச்சை முடிந்து அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பிறகு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தியது.

    செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டடு. ஆனால் மூன்று நீதிமன்றங்களும் ஜாமின் வழங்க மறுத்திவிட்டன. இதனால் தொடர்ந்து புழல் ஜெயலில் இருந்து வருகிறார்.

    சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இரண்டு முறை உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மீண்டும் ஜெயலில் அடைக்கப்பட்டார்.

    • ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார்.
    • தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஊழலை மட்டுமே தனது அரசியல் பிழைப்பாகக் கொண்டு, எதிர்ப்புக் குரல்களை அதிகார பலத்தின் மூலம் அடக்கிய ஒரு போலியான சித்தாந்தம், இன்று சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து கொண்டிருக்கிறது.

    ஏற்கனவே, இலாகா இல்லாத திமுக அமைச்சர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, ஊழல் குற்றச்சாட்டில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.

    தென் தமிழகத்தில், மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த துயரமான வேளையில், தமிழக முதல்வரோ, ஊழல்வாதிகள் மற்றும் குடும்ப அரசியல்வாதிகளின், இந்தி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்குச் சென்றிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • காலை 6.30 மணிக்கு சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    சென்னை:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ந்தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது செந்தில்பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    பின்னர் உடல் நலம் தேறியதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்ற காவல் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.

    இதற்கிடையே சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவ குழு, தேவையான சிகிச்சைகளை வழங்கி வந்தது.

    இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை, கண்காணிப்பு தேவைப்படுகிறது.
    • வழக்கை அடுத்த வாரம் நவம்பர் 28ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது.

    அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ அறிக்கை எங்கே என நீதிபதி திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளாார்.

    செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி," அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை தாக்கல் செய்துள்ளோம். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை, கண்காணிப்பு தேவைப்படுகிறது" என்றார்.

    மேலும், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் நவம்பர் 28ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி ஜெயச்சந்திரன் மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
    • ஜாமின் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது.

    இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதன் காரணமாக ஜாமின் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நவம்பர் 6-ந்தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    • சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அறிவிப்பு.

    சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது.

    இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதன் காரணமாக ஜாமின் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா. எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உயர்நீதிமன்றத்தில் நேற்று ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
    • 9 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

    சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது.

    இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அப்போது மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இந்த நிலையில் இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இதனுடன் 9 முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றியோ நீதியை பற்றியோ யாரும் பேசக்கூடாது.
    • தனித்து போட்டியிடுவோம் என்று வாய் சவடால் விடும் அண்ணாமலைக்கு தைரியும் இருந்தால் தனித்து போட்டியிட்டு பார்க்கட்டும்.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற 30-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறும் போது, அவர் அமைச்சராக நீடிப்பதால்தான் ஜாமின் கிடைக்கவில்லை. அமைச்சரவையில் இருந்து நீக்கினால் உடனடியாக ஜாமின் கிடைக்கும் என்றார்.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றியோ நீதியை பற்றியோ யாரும் பேசக்கூடாது.

    நீதிபதிகளுக்கு பதிலாக பேசும் தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. ஆனால் நீதிபதிகளுக்கு அறிவுரை சொல்லும், உத்தரவு போடும் அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது என்பதை மோடிதான் விளக்க வேண்டும்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டமிட்டு வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டவர். சேலம் முதல் கொங்குமண்டலம் முழுவதும் அவர் இருக்கும் வரை தி.மு.க. கூட்டணியை வெல்ல முடியாது என்பது தெரியும். அதனால் திட்டமிட்டு அவரை குறிவைத்து கைது செய்துள்ளார்கள்.

    பா.ஜனதா மாநில தலைவர்கள் ஐகோர்ட்டு நீதிபதிகளா? தனித்து போட்டியிடுவோம் என்று வாய் சவடால் விடும் அண்ணாமலைக்கு தைரியும் இருந்தால் தனித்து போட்டியிட்டு பார்க்கட்டும்.

    செந்தில் பாலாஜி வழக்கில் நீதி வெல்லும். அவர் ஜாமினில் மட்டுமல்ல வழக்குகளில் இருந்தும் விடுதலை ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை அமர்வு நீதிமன்றம் ஏற்கனவே ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருந்தது
    • ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது

    அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

    ஆனால் அவருக்கு அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவரிடம் உடனடியாக விசாரணை நடத்த இயலாத நிலை இருந்தது.

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டு மூலம் அனுமதி பெற்றனர். அதன்படி அவரிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையையும் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அங்கு அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு கடந்த 14-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை குறிப்பிட்டு வாதாடினார்.

    வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடியே 34 லட்சம் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் 10 ஆண்டுகள் வங்கிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளார். வருமான வரி கணக்குகளையும் தாக்கல் செய்துள்ளார். இதில் இருந்தே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபணம் ஆகிறது. எனவே, இந்த வழக்கில் அவர் உள்நோக்கத்துடன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றும் தெரிவித்தார்.

    அமலாக்கத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், "செந்தில் பாலாஜி அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் சேகரிக்கப்பட்ட தகவலின்படி வேலை பெற்று தருவதாக கூறி 67 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

    மேலும் சிறை மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான வசதி இல்லாத நிலையில் மட்டுமே ஜாமின் வழங்க முடியும். செந்தில் பாலாஜிக்கு அதுபோன்ற நிலை ஏற்படவில்லை.

    செந்தில் பாலாஜியின் கால் மரத்துப்போவது போன்ற நிலை சமீபத்தில் ஏற்பட்டது அல்ல. அறுவை சிகிச்சை செய்தது முதலே அவருக்கு இந்த பிரச்சினை இருந்து வருகிறது. மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியாது என ஏற்கனவே முதன்மை அமர்வு நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

    இந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவர்களின் அறிக்கைகளிலும் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை அவசியம் என குறிப்பிடவில்லை. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். எனவே, இந்த நிலையில், அவருக்கு ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைத்து விடுவார்" என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    ×