search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டிப்பு

    • உயர்நீதிமன்றத்தில் நேற்று ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது
    • 9 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

    சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது.

    இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நேற்று நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அப்போது மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இந்த நிலையில் இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இதனுடன் 9 முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×