search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலி தொழிலாளி"

    • ஆனந்தன் கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பெரம்பலூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (36). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆனந்தன் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.

    இதனால் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி வந்துள்ளார். மேலும் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். வெளியூரிலிருந்து எப்போதாவது வீட்டுக்கு வரும் ஆனந்தன் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரிடம் ரூ.300 கடன் பெற்று கொண்டு வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் ஆனந்தன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அடுத்த கருக்கம்பாளையம் மாகாளியம்மன் கோவில் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து ஆனந்தன் மனைவி கீதாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

    • சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார்.
    • இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி சொர்ணாவூர் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கு காமாட்சி என்கிற மனைவி, ஒரு மகன் உள்ளனர் சம்பவத்தன்று அய்யப்பன் தனியார் பஸ்சில் மேல்பட்டாம்பாக்கத்திற்கு வந்தார். அப்போது சந்தத்தோப்பு திடலில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். இதனை தொடர்ந்து அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அய்யப்பன் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இவரது மனைவி 2 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே முளவிளை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஜோஸ் (வயது 38). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அனிதா 2 குழந்தைகளுடன் பிரிந்து அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

    மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மெர்லின் ஜோஸ் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் படுத்து இருந்தார்.

    இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மெர்லின் ஜோஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
    • கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பண்டாரகாடு வீட்டை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். ஜார்ஜ் அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அதிகமான மது போதையில் வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தனது அறையில் சென்று கதவை அடைத்துள்ளார்.நேற்று காலை வரை கதவு திறக்காததால் வீட்டில் உள்ளவர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து ஜார்ஜ் மனைவி சவுந்தர்யா (50) கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • சம்பவத்தன்று சாமிநாதன் இடைவிடாது வாந்தி எடுத்துள்ளார்.
    • உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், நம்பியூரை அடுத்துள்ள மொட்டனம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (41). இவரது கணவர் சாமி நாதன் (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சாமிநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சாமிநாதன் இடைவிடாது வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

    நேற்று அவருக்கு மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சாமி நாதன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து, விஜயலட்சுமி அளித்த புகாரின்பேரில் வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி வயது54. கூலி வேலை செய்யும் இவர் சில மாதங்களுக்கு முன்பு தக்கலை அருகே சாரோடு என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாள்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வேலைக்கு செல்லவில்லை.

    இதனால் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேனில் தூக்கு மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். சிறிது நேரம் கழித்து மனைவி வீட்டுக்கு உள் வந்து பார்த்த போது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குமாரசாமியை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். டாக்டர் இவரை பரிசோதனை செய்து கொண்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது சம்பந்தமாக மனைவி பிறேமபுனிதா தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனை செய்ய உடலை மருத்துவ மனையில் ஒப்படைத்தனர்.

    • வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த முடுக்கன்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (31). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜி (27). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    ராஜீவ்காந்தி எரங்கா ட்டூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி சென்று மனைவியை பார்த்து வந்தார்.

    பின்னர் எரங்காட்டூரில் ராஜீவ்காந்தி தங்கியிருந்த வீட்டு நீண்ட நேரமாக கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

    இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கோபிசெட்டிபாளையம் அருகே சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியதில் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலியானார்.
    • இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் குமார் (34). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் கோபிசெட்டிபாளையம் அடுத்த கெட்டிசெவியூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் நம்பியூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் சரக்கு வேன் அருகே இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. இதில் குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் சரக்கு வேனில் பாலகுமார் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி ஆகியோர் வந்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வாழப்பாடி அருகே சாலையை கடக்க முயன்ற கூலி தொழிலாளி விபத்தில் பலியானார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த பேளூரைச் சேர்ந்தவர் சிவகுமார் (29). கூலித் தொழிலாளி இவர் நள்ளிரவு இரவு வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்து வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சிவகுமார் மகன் அஜய் பிரசாத் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×