search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரிவு"

    • பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார்
    • நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்தது.இந்நிலையில்

    நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் நேற்று பகிர்ந்தார். 

    "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்". தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்" என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு இருந்தார்.




    இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று இணைய தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் - நயன்தாரா ஜோடியாக கட்டிப்பிடித்து அன்போடு தழுவும் படங்கள், இரட்டை குழந்தைகளை பாசத்துடன் கொஞ்சுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார். 

    நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பிற்காக வீட்டை விட்டு பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார். நயன்தாரா இணையத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    'சிங்கப்பூரில் இருந்து 20 நாடுகளுக்குப் பிறகு திரும்பிய உங்களை ( விக்னேஷ்) பார்த்தபோது நாங்கள் மூவரும் எப்படி உணர்ந்தோம் என்பதை விளக்க முடியவில்லை. நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்கியும்,நயன்தாரா பிரிகிறார்கள் என ரசிகர்கள் குழப்பம்
    • 2 மகன்களை அன்போடு வளர்ப்பதில் நயன்தாரா தீவிரம்

    நடிகை நயன்தாரா தமிழ்பட உலகின் முன்னணி நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா 75- வது படமான 'அன்னபூரணி' படத்தில் நடித்து இருந்தார்.

    இந்த படம் நயன்தாராவுக்கு ஏமாற்றம் கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டபின்குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா, தனது 2 மகன்களை அன்போடு வளர்ப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை நயன்தாரா 'அன்பாலோ' செய்துவிட்டார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதனால் 2 பேரும் பிரிகிறார்கள் என்று கூறப்பட்டது.

    ரசிகர்களிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ஒரு 'போஸ்ட்' போட்டிருக்கிறார். அதில் தனது 9 ஸ்கின் நிறுவனத்துக்காக தான் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால், விக்கியும், நயன்தாராவும் பிரிகிறார்கள் என்பது வதந்தியா அல்லது இருவரும் பிரிவது உண்மையா என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

    • இரட்டையர் டென்னிஸ் விளையாட்டில் பல உயரங்களை தொட்டவர், சானியா
    • 2010ல் சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணம் முடித்தார்

    மும்பையில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்து, இந்திய பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர், சானியா மிர்சா (Sania Mirza).

    குறிப்பாக, இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் பல உயரங்களை தொட்டவர், சானியா.

    தனது 6-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா, 17 வயதிலிருந்து தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார்.

    2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.


    ஆனால், 2022 ஆண்டில் இருந்தே சானியா-சோயிப் ஜோடிக்குள் கருத்து வேற்றுமை நிலவுவதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன.

    2023ல் சோயிப் மாலிக், "ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்" என மனைவியை குறித்து அதுநாள் வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதியை நீக்கினார்.

    இந்நிலையில், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் சானியா மிர்சா கவிதை வடிவில் சில மறைமுக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    திருமணம் கடினமானது.

    விவாகரத்து கடினமானது.

    உங்களுக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு சானியா பதிவிட்டுள்ளார்.

    மேலும் அந்த நீண்ட பதிவில், எடை குறைப்பு, சிக்கனமாக வாழ்தல், பிறருடன் உரையாடுவது உள்ளிட்ட விஷயங்களை குறித்தும் இதே போல் பதிவிட்டுள்ள சானியா, இறுதியாக, "வாழ்க்கை சுலபமாக இருக்கவே இருக்காது. எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் நமக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதனை தேர்வு செய்ய முடியும். அதை அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள்" என முடித்துள்ளார்.

    கணவர் சோயிப் மாலிக் உடனான பல புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

    • நவாஸ் என்பவரை கவுதம் சிங்கானியா திருமணம் செய்து கொண்டார்
    • அவர்கள் வீட்டிற்கு உள்ளே செல்ல நவாஸிற்கு அனுமதி மறுக்கப்பட்டது

    இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர், கவுதம் சிங்கானியா (58).

    பல கோடிகள் வருவாய் ஈட்டும் உயர்ரக ஆடைகளை விற்பனை செய்யும் ரேமண்ட்ஸ் குழுமத்தின் தலைவரான இவர், அதன் நிர்வாக இயக்குனராகவும் செயல்படுகிறார். அதி வேக கார்களை விரும்பி வாங்கும் பழக்கமுடைய இவர், கார் போட்டிகளிலும் கலந்து கொள்ள விருப்பமுடையவர்.

    கவுதம் சிங்கானியா, நவாஸ் மோடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களாகவே சிங்கானியா தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன.

    சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில, தானே (Thane) நகரில் உள்ள சிங்கானியா குழுமத்திற்கு சொந்தமான மிக பெரிய பண்ணை வீட்டில் தீபாவளி விருந்து நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள கவுதமின் மனைவி நவாஸிற்கு அனுமதி மறுக்கப்பட்டு கேட் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோவை நவாஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்நிலையில், கவுதம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் செய்தி பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எங்கள் 32 வருட மண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்புடன் வாழ்ந்து வந்த எங்கள் வாழ்வு குறித்து பலர் விரும்பத்தகாத வதந்திகளை பரப்பி வந்தனர். இனி நானும், நவாஸும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் இரு குழந்தைகளுக்கும் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வோம். எங்கள் தனிப்பட்ட இந்த முடிவை மதித்து நிலைமை சீரடைய ஒத்துழையுங்கள். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளை கோருகிறேன்.

    இவ்வாறு கவுதம் பதிவிட்டுள்ளார்.

    32 வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்த கோடீசுவர தம்பதியினரின் விவாகரத்து செய்தி ,சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.
    • நகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    சேலம்:

    சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக இருந்த கற்பகம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாறுதல் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து காலியாக இருந்த நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் பதவிக்கு கிச்சிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.அவர் இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டு மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் துணை கமிஷனர்கள் மதிவாணன், கவுதம் கோயல், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்.

    • கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இவரது மனைவி 2 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே முளவிளை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஜோஸ் (வயது 38). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அனிதா 2 குழந்தைகளுடன் பிரிந்து அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

    மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மெர்லின் ஜோஸ் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் படுத்து இருந்தார்.

    இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மெர்லின் ஜோஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கைரேகை பிரிவு, புகைப்பட பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு
    • பூதப்பாண்டியில் சிறுவன் குளத்தில் விழுந்து மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு

    நாகர்கோவில் :

    நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் கைரேகை பிரிவு, புகைப்பட பிரிவு மற்றும் தடயவியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு நடத்தினார்.

    முன்னதாக பூதப்பாண்டியில் சிறுவன் குளத்தில் விழுந்து மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    • அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் சுப்பராயன் எம்.பி. முன்னிலையில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, தலைமை டாக்டர் விஸ்வேஸ்வரன், டாக்டர்கள் செல்வம், சுரேந்திரன், விஜயா, கலைவாணி, ஆத்மாதன், ராம்குமார், தலைமை செவிலியர் மலர்விழி, அல்ட்ரா தொண்டு நிறுவன நிறுவனர் தண்டாயுதபாணி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜா, வட்டாரத் தலைவர் பழனிமுத்து, நகர தலைவர் ஜலாலுதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் கவிதா அனைவரையும் வரவேற்றார்.

    ×