திருவட்டார் அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இவரது மனைவி 2 குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோப்பு படம் 
கோப்பு படம் 
Published on

கன்னியாகுமரி:

திருவட்டார் அருகே முளவிளை பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ஜோஸ் (வயது 38). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அனிதா 2 குழந்தைகளுடன் பிரிந்து அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் மெர்லின் ஜோஸ் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் படுத்து இருந்தார்.

இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மெர்லின் ஜோஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com