

கன்னியாகுமரி:
கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பண்டாரகாடு வீட்டை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். ஜார்ஜ் அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்டவர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அதிகமான மது போதையில் வீட்டிற்கு வந்த ஜார்ஜ் தனது அறையில் சென்று கதவை அடைத்துள்ளார்.நேற்று காலை வரை கதவு திறக்காததால் வீட்டில் உள்ளவர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து ஜார்ஜ் மனைவி சவுந்தர்யா (50) கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்