கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த முடுக்கன்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (31). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுஜி (27). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ராஜீவ்காந்தி எரங்கா ட்டூரில் வாடகை வீட்டில் தங்கி இருந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு ராஜீவ்காந்தி சென்று மனைவியை பார்த்து வந்தார்.

பின்னர் எரங்காட்டூரில் ராஜீவ்காந்தி தங்கியிருந்த வீட்டு நீண்ட நேரமாக கதவு திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் ராஜீவ்காந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ராஜீவ்காந்தி மனைவியை பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com