search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்கள்"

    • கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார்.
    • நகராட்சி பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கவுன்சிலர் வசந்தன் கோரிக்கை வைத்தார்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், ஆணையாளர் முகமது சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கவுன்சிலர்கள் மாரியப்பன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சுரண்டை பஸ் நிலைய விரிவாக்கத்திற்கு இடம் கொடுத்தவரும், சுரண்டை நகரில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவருமான எஸ்.வேலாயுத நாடார் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    சுரண்டை நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன் சுரண்டை பஸ் நிலையத்தில் கலைஞர் படிப்பகம், பொன்ரா மருத்துவமனை அருகில் கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கவுன்சிலர் வசந்தன் பேசு கையில், சுரண்டை 6-வது வார்டு மற்றும் சுரண்டை நகராட்சி பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை வைத்தார்.கவுன்சிலர் அமுதா சந்திரன் பேசுகையில், கட்டிட அனுமதி நிலுவை இல்லாமல் விரைந்து வழங்க வேண்டும் என்றார்.கவுன்சிலர் வேல்முத்து பேசுகையில், சுரண்டை காமராஜர் மார்க்கெட் அருகில் காமராஜர் பெயரில் நுழைவு வாயில் அமைக்க வேண்டும் மற்றும் கடைகளு க்கான உரிம கட்டணங்களை அபராதம் இல்லாமல் வசூலிக்க வேண்டும் அதற்கு இந்த மன்றம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    தொடர்ந்து பேசிய நகராட்சி தலைவர் வள்ளி முருகன் மேற்கண்ட கோரிக்கைகள் மன்றத்தில் விவாதத்திற்கு விடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • குடிநீர் இணைப்பு துண்டிப்பை கண்டித்து நடந்தது
    • குளச்சல் நகராட்சி கவுன்சிலர்கள் 15 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி

    குளச்சல் நகராட்சியில் வீட்டு வரி வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதில் நடப்பு வீட்டு வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை நகராட்சி எடுத்தது.

    இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று குளச்சல் நகராட்சி கவுன்சிலர்கள் 15 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குளச்சல் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் வீட்டு வரி கட்டாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • கிராம சபை கூட்டத்தில் 5 வகையான பழ நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
    • கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் 3 பேர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது.அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடை பெற்றது. இதையொட்டி கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் செல்வி நிர்மலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சிறு தானிய ஆண்டை முன்னிட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு தானி யங்களின் உற்பத்தியினை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுகுறித்து பலகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து வீடுகளிலும் இரு உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறை அமைக்க வேண்டும். மேலும் அனைத்து குடிமக்களும் இ - சேவை மையம் தொடங்க பொதுமக்களுக்கு ஊராட்சி வாயிலாக அழைப்பும் விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தின் போது கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலமாக 65 பயனாளிகளுக்கு மா, நெல்லி, சீதா, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட 5 வகையான பழ நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    இதேபோல் பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் சிவக்குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முறையாக வார்டு உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் 3 பேர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது. மற்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

    இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    • மாலை தொடங்கிய இந்த போராட்டம் இரவும் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
    • கவுன்சிலர்களுடன் இரணியல் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    கன்னியாகுமரி :

    நெய்யூர் பேரூராட்சியில் வாயில் கறுப்பு துணிகட்டி 8 கவுன்சிலார்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாலை தொடங்கிய இந்த போராட்டம் இரவும் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி போராட்டம் நடத்திய கவுன்சிலர்களுடன் இரணியல் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மாவட்ட பஞ்சாயத்து கண்காணிப்பு நிர்வாகி அதிகாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இன்று காலை வார்டு கவுன்சிலர்கள் எழில் டைசன் (7 வது வார்டு) ததேயு ராஜா (10) விஸ்வாசம் (13) மேரி லில்லி (3) ராஜாகலா (4) கவிதா (12) உட்பட ஆறு பேர் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர் இரணியல் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை வாகித்தார்.ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கி மன்ற தீர்மானங்களை ஆணையாளர் வாசித்து கொண்டிருந்த போது குறுக்கிட்டு பேசிய பாமக கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய திட்டப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தினசரி மார்க்கெட் சுங்க வசூல் கட்டணத்திற்கு சீல் வைக்கப்பட்ட முறையான ரசீது வழங்கவேண்டும். ஆனால் தினசரி மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் செய்து வியாபாரிகளை மிரட்டி வருவதாக கூறினர். தொடர்ந்து கவுன்சிலர்கள் தனபால், குமரேசன், பழனிசாமி, பாலசுந்தரம் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

    பாமக உறுப்பினர்களை தொடர்ந்து சுயேட்சை உறுப்பினர் சுமதியும் இதே குற்றசாட்டை முன்வைத்து வெளியேறினார். அதனை தொடர்ந்து கூட்டதில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டது.

    • பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் இன்று கழுத்தில் ‘மப்ளர்’ அணிந்து வந்திருந்தனர்.
    • பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    நாகர்கோவில்:

    மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் மீனா தேவ், முத்துராமன், வீர சூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் இன்று கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசுகையில், நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்து வதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.

    இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்து உள்ளது. தேசியக் கொடி ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்து உள்ளது, இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

    அப்போது மற்ற பா.ஜ.க. கவுன்சிலர்கள் நாகர்கோவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை சீவி விடுவதாக கூறிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க. கவுன்சி லர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்ட த்தில் ஈடுபட்டனர். கையில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி
    • மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம், பலவஞ்சிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இதற்கு 4-வது மண்டல தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ள நிலையில், மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

     அதன்படி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுகளுக்கும் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வார்டு உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான நிதியை பெற்று, வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளலாம். முதல்முறையாக மண்டல தலைவர்களுக்கு என தனி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறி அதனை சரி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல தலைவர் பத்மநாபன் உறுதி அளித்தார்.

    • நகர்மன்ற கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
    • தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நேற்று நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) மனோகர், நகர்மன்ற துணை தலைவர் ஹரிபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள், கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

    தங்களது வார்டு பகுதியில் குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத காரணத்தாலும், மேலும் தங்களது வார்டு பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை தங்களிடம் கேட்டு தீர்மானத்தில் சேர்க்காத காரணத்தாலும் மாதாந்திர கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்ததாக கூறப்பட்டது. அவர்களை தவிர்த்து, கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மற்றும் சில தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களை கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர்மன்ற கூட்டத்தை தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணித்ததால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது."

    • சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஆணயைாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார. கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது-

    சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு வி ருது வழங்க காரணமாக இருந்த அனைத்து மாநகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

    அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி , கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார். அதனால் அ.தி.மு.க.வுக்கும் பங்களிப்பு உள்ளது, மேலும் அனைத்து வார்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும், 'என்றார்.

    அப்போது குறுக்கிட்ட மேயர் அனைத்து வார்டுகளையும் சமமாகவே கருதுகிறோம் என்றார்.

    கவுன்சிலர் கே.சி. செல்வராஜ் பேசுகையில், பனமரத்துப்பட்டி ஏரி டென்டர் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றார்.

    வாக்கு வாதம்

    அதற்கு பதில் அளித்து பேசிய சாந்த மூர்த்தி, பாதாள சாக்கடை திட்டம் உள்பட பல்வேறு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் முடங்கி கிடந்தன. கடந்த 5 மாதத்தில் நடந்த பணிகளால் தான் சிறந்த மாநகராட்சி விருது கிடைத்தது என்றார். இதனால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கார சார மோதல் உருவானது. அதனால் மாநகராட்சி கூட்டத்தில் அமளி ஏற்பட்டது .

    இதற்கிடையே அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சி கவுன்சிலர் இமயவர்மன் மேயர் முன்பு தரையில் அமர்ந்த தர்ணாவில் ஈடுபட்டார். அவரை தி.மு.க. கவுன்சிலர்கள் சமரசம் செய்து இருக்கைக்கு அனுப்பி வைத்தனர்.

    தி.மு.க. மாநகராட்சி ஆளும்கட்சி தலைவர் ஜெயக்குமார் பேசியதாவது-

    திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்தது தான் இந்த விருது, அதனை திசை திருப்பி கொச்சை படுத்த முடிவு செய்துள்ளனர். இது தவறான செயல், இதற்கெல்லாம் தி.மு.க. அஞ்சாது, மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும், தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனைக்கு கிடைத்த விருது என்றார்.

    கவுன்சிலர் ஈசன் இளஙகோ பேசுகையில், 5 மாத கவுன்சிலர்களின் செயல்பாட்டிற்கு கிடைத்த விருது தான் இது என்றார். அப்போது அ.தி.மு.க. மற்றும் தி.முக. கவுன்சிலர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில், தனது வார்டில் மின் மயானம் அமைப்பதாக கூறி 6 ஆண்டு ஆகியும் நிறைவேற்றாமல் உள்ளது. மேலும் தாதாகப்பட்டி பகுதியில் மூடப்பட்ட மானா சில்லி கடையை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ராமச்சந்திரன் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • கவுன்சிலர்கள் தங்களது தேவை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதில்லை
    • நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

    ஊட்டி

    ஊட்டி நகரசபை கூட்டம் அதன் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆணையா் காந்திராஜன், பொறியாளா் இளங்கோவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது-

    ஜாா்ஜ்: கவுன்சிலா்கள் பெயரை பயன்படுத்தி நகராட்சி அதிகாரிகள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணம் வசூல் செய்கின்றனா். இதை தடுக்க வேண்டும்.

    வனிதா: வளா்ச்சிப் பணிகள் சம்பந்தமாக பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட விஷயங்களை நகராட்சி நிா்வாகத்திடம் கேட்டால் உடனடியாக கிடைப்பதில்லை.

    ரஜினி: எட்டின்ஸ் சாலையில் அலங்காா் பகுதியிலுள்ள மழை நீா் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால் தண்ணீா் வீடுகளுக்குள் செல்கிறது. முருகன் நகா் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

    தம்பி இஸ்மாயில்: ஹவுஸிங் யூனிட் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது

    அபுதாகீா்: நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அரசு உயா் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கவுன்சிலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ரவி: எல்க்ஹில் பகுதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் மண் புகுந்துள்ளது.

    மேரி புளோரினா மாா்ட்டின்: டெண்டா் விடுவது குறித்து கவுன்சிலா்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆனால் நகராட்சி கையேட்டில் எந்த டெண்டரும் வருவதில்லை.

    ரகுபதி: எச்.எம்.டி. பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்.

    செல்வராஜ்: 32-வது வாா்டில் பழுதடைந்து குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜெயலட்சுமி: குப்பை அள்ள வாகனங்கள் முறையாக வருவதில்லை.

    குமாா்: வி.சி.காலனி பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

    துணைத் தலைவா் ரவிக்குமாா்: புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளுக்கான அனுமதியை மாவட்ட கலெக்டரிடம் இருந்து பெறப்படும் முறையை மாற்றி நகராட்சி பகுதிக்குள் நகராட்சி நிா்வாகமே அனுமதியளிக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

    கவுன்சிலர்கள் தங்களது தேவை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதில்லை. மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை அவர்கள் அவமானப்படுத்துகின்றனர் என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி ஆணையாளரிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கவுன்சி லர்களுக்கும் அதிகா ரிகளுக்கும் சரியான ஒருங்கி ணைப்பு இல்லாததால் நகராட்சி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

    • செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.

    சென்னிமலை:

    செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக பவானி அருகே காவிரி ஆற்றில்உள்ள கிணறுகளில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் கருமாண்டி செல்லி பாளையம், பெருந்துறை பேரூராட்சி வழியாக கொண்டு வரப்பட்டு சென்னிமலை, ஈங்கூர் ரோ ட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது.

    சென்னிமலை பேரூராட்சிக்கு தினமும் 22.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவேண்டும். இதில் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை என்று வார்டு வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 22 நாட்கள் ஆகியும் தண்ணீர் வருவதில்லை. இதனால், மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். தண்ணீர் விட்டால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல முடியும் என கூறி அமர்ந்து கொண்டனர்.

    தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் 15 பேரும் மதிய உணவு உண்ணாமல் மிக பிடிவாதமாக போரா ட்டத்தில் இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் அமைச்சர் சாமிநாதனின் பரிந்துறையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செ ல்வம், தமிழ்நாடு குடிநீ ர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (பராமரிப்பு பிரிவு) முத்து லிங்கம், உதவி பொறியாளர் புவனேஸ்வரி, பெருந்துறை தாசில்தார் (பொறுப்பு) அமுதா ஆகியோர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    அப்போது சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு மின் தடை மற்றும் குழா ய் உடைப்பு இல்லாத சமயங்களில் தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீ ர் வி நியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாலை 6.30 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

    பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு பேராட்டம் 6½ மணி நேரம் நீடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

    • அரசு விதிமுறைகளை அறிவித்து வெளியிடும் போது அதுபற்றி மக்கள் பிரதிநிதிகளுக்கு புரிய வைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்ததில் இல்லை என்பதே தெரிய வந்துள்ளது.
    • 75 சதவீதம் கவுன்சிலர்கள் ஏரியா சபை என்றால் அது என்ன என்று திருப்பி கேட்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

    சென்னை:

    நம்ம கவுன்சிலர்கள் எப்படி இருக்கிறார்கள்? மாநகராட்சி விதிமுறைகள் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்களா? என்பது பற்றி 'வாய்ஸ் ஆப் பீப்பிள்' என்ற குடிமக்கள் குழு அமைப்பு ஒரு சர்வே நடத்தி இருக்கிறது.

    சென்னை மாநகராட்சியில் உள்ள 200 கவுன்சிலர்களில் 110 பேர் மட்டுமே போன் தொடர்பில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் மட்டும் கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

    அரசு விதிமுறைகளை அறிவித்து வெளியிடும் போது அதுபற்றி மக்கள் பிரதிநிதிகளுக்கு புரிய வைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்ததில் இல்லை என்பதே தெரிய வந்துள்ளது.

    75 சதவீதம் கவுன்சிலர்கள் ஏரியா சபை என்றால் அது என்ன என்று திருப்பி கேட்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

    2010 மாநகராட்சி சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வாக்கு கமிட்டி பற்றி அவர்களுக்கு புரிதல் இல்லை. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (வார்டு கமிட்டிகள் மற்றும் ஏரியா சபை) விதிகள் 2022-ன் படி கவுன்சிலர்கள், வார்டு கமிட்டிகள், பகுதி கவுன்சில்களின் தலைவர்கள் மற்றும் கவீனர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

    அரசு, மக்கள் பிரதிநிதிகள், மக்களை ஒருங்கிணைக்கும் தளம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கிராம சபைகள் பற்றி கூறியபோது அதைப்பற்றி திருப்பி கேட்டு இருக்கிறார்கள். 25 சதவீதம் பேர் ஊடகங்கள் வாயிலாக அறிந்ததாக கூறி இருக்கிறார்கள்.

    ×