search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே சிறப்பு கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்
    X

    கோவை அருகே சிறப்பு கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்

    • கிராம சபை கூட்டத்தில் 5 வகையான பழ நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
    • கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் 3 பேர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது.அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடை பெற்றது. இதையொட்டி கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் செல்வி நிர்மலா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் சிறு தானிய ஆண்டை முன்னிட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு தானி யங்களின் உற்பத்தியினை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதுகுறித்து பலகட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து வீடுகளிலும் இரு உறிஞ்சு குழிகளுடன் கூடிய கழிப்பறை அமைக்க வேண்டும். மேலும் அனைத்து குடிமக்களும் இ - சேவை மையம் தொடங்க பொதுமக்களுக்கு ஊராட்சி வாயிலாக அழைப்பும் விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தின் போது கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை மூலமாக 65 பயனாளிகளுக்கு மா, நெல்லி, சீதா, எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட 5 வகையான பழ நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    இதேபோல் பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் சிவக்குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் லட்சுமணன் ஆகியோர் முறையாக வார்டு உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் 3 பேர் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது. மற்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

    இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    Next Story
    ×