search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் மண்டல தலைவர் இல. பத்மநாதன் உறுதி
    X

    மண்டல தலைவர் இல. பத்மநாதன் தலைமையில் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.அருகில் துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளார்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் மண்டல தலைவர் இல. பத்மநாதன் உறுதி

    • மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி
    • மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல கூட்டம், பலவஞ்சிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. இதற்கு 4-வது மண்டல தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ள நிலையில், மண்டல தலைவர்களுக்கு என சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் தலா 45 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டுகளுக்கும் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வார்டு உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான நிதியை பெற்று, வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ளலாம். முதல்முறையாக மண்டல தலைவர்களுக்கு என தனி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை எடுத்துக்கூறி அதனை சரி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல தலைவர் பத்மநாபன் உறுதி அளித்தார்.

    Next Story
    ×