search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் கவுன்சிலர்கள் பெயரை பயன்படுத்தி பண வசூல்- பரபரப்பு புகார்
    X

    ஊட்டியில் கவுன்சிலர்கள் பெயரை பயன்படுத்தி பண வசூல்- பரபரப்பு புகார்

    • கவுன்சிலர்கள் தங்களது தேவை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதில்லை
    • நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

    ஊட்டி

    ஊட்டி நகரசபை கூட்டம் அதன் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆணையா் காந்திராஜன், பொறியாளா் இளங்கோவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது-

    ஜாா்ஜ்: கவுன்சிலா்கள் பெயரை பயன்படுத்தி நகராட்சி அதிகாரிகள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பணம் வசூல் செய்கின்றனா். இதை தடுக்க வேண்டும்.

    வனிதா: வளா்ச்சிப் பணிகள் சம்பந்தமாக பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட விஷயங்களை நகராட்சி நிா்வாகத்திடம் கேட்டால் உடனடியாக கிடைப்பதில்லை.

    ரஜினி: எட்டின்ஸ் சாலையில் அலங்காா் பகுதியிலுள்ள மழை நீா் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால் தண்ணீா் வீடுகளுக்குள் செல்கிறது. முருகன் நகா் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

    தம்பி இஸ்மாயில்: ஹவுஸிங் யூனிட் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது

    அபுதாகீா்: நகராட்சியில் தெருவிளக்குகள் எரிவதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அரசு உயா் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கவுன்சிலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    ரவி: எல்க்ஹில் பகுதியில் அண்மையில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் மண் புகுந்துள்ளது.

    மேரி புளோரினா மாா்ட்டின்: டெண்டா் விடுவது குறித்து கவுன்சிலா்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. ஆனால் நகராட்சி கையேட்டில் எந்த டெண்டரும் வருவதில்லை.

    ரகுபதி: எச்.எம்.டி. பகுதியில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும்.

    செல்வராஜ்: 32-வது வாா்டில் பழுதடைந்து குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜெயலட்சுமி: குப்பை அள்ள வாகனங்கள் முறையாக வருவதில்லை.

    குமாா்: வி.சி.காலனி பகுதியில் முறையான சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

    துணைத் தலைவா் ரவிக்குமாா்: புதிதாக கட்டப்படும் குடியிருப்புகளுக்கான அனுமதியை மாவட்ட கலெக்டரிடம் இருந்து பெறப்படும் முறையை மாற்றி நகராட்சி பகுதிக்குள் நகராட்சி நிா்வாகமே அனுமதியளிக்கும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

    கவுன்சிலர்கள் தங்களது தேவை குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டால் அவர்கள் கண்டு கொள்வதில்லை. மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்களை அவர்கள் அவமானப்படுத்துகின்றனர் என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி ஆணையாளரிடம் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கவுன்சி லர்களுக்கும் அதிகா ரிகளுக்கும் சரியான ஒருங்கி ணைப்பு இல்லாததால் நகராட்சி வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×