என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெய்யூர் பேரூராட்சியில் இன்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
- மாலை தொடங்கிய இந்த போராட்டம் இரவும் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
- கவுன்சிலர்களுடன் இரணியல் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கன்னியாகுமரி :
நெய்யூர் பேரூராட்சியில் வாயில் கறுப்பு துணிகட்டி 8 கவுன்சிலார்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாலை தொடங்கிய இந்த போராட்டம் இரவும் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி போராட்டம் நடத்திய கவுன்சிலர்களுடன் இரணியல் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாவட்ட பஞ்சாயத்து கண்காணிப்பு நிர்வாகி அதிகாரி நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இன்று காலை வார்டு கவுன்சிலர்கள் எழில் டைசன் (7 வது வார்டு) ததேயு ராஜா (10) விஸ்வாசம் (13) மேரி லில்லி (3) ராஜாகலா (4) கவிதா (12) உட்பட ஆறு பேர் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர் இரணியல் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.






