search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளிருப்பு"

    • சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.
    • ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுமிதாசிவக்குமார் உள்ளார். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டதால் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. எப்போதும் வறட்சியே ஏற்படாத பெரியகுளம் நகரில் வேண்டுமென்றே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஆணையாளரின் செயல்பாடே காரணம் என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் இன்று நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க என அனைத்து உறுப்பினர்களும் சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆனால் ஆணையாளர் இதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால் கவுன்சிலர்கள் கோசமிட்டபடி இருந்தனர்.

    ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார். அவரை வெளியேற விடாமல் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு கோசம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆணையாளருடன் சுகாதார ஆய்வாளர், மேலாளர் ஆகியோரும் மன்றத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் ஆணையாளர் உரிய விளக்கம் அளிக்கும் வரை உறுப்பினர்கள் யாரும் வெளியே செல்ல மாட்டோம் என நகராட்சி அரங்கிலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைவர் சுமிதா ஆணையாளருடன் பேசி மன்றத்திற்கு வந்து விளக்கம் அளித்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து வராததால் உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

    • ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் காரணமாக ஜவஹர் தெருவில் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வாதம்
    • ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகிறது என மேயர் மகேஷ் விளக்கம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி 5-வது உறுப்பினர் உதயகுமார் பேசும்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட அதன் காரணமாக ஜவஹர் தெருவில் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதற்கு மேயர் மகேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது மேயர் மகேஷ் கூறுகையில், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது.ஆக்கிரமிப்புகள் பாரபட்ச மின்றி அகற்றப்பட்டு வருகிறது .அனைத்து கவுன்சிலர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் தொழிலாளி இறந்ததாக கூறுவது நியாயமற்றது. உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.முதல் தகவல் அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு பேசவேண்டும். வேண்டு மென்றே குற்றசாட்டுகளை தெரிவிக்க கூடாது என்று மேயர் மகேஷ் தெரிவித்தார். உதயகுமார் பேச்சுக்கு கவுன்சிலர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து கவுன்சிலர் உதயகுமார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கருத்துக்களை பதிவு செய்ய மன்றத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட் டுள்ளார்.

    • நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனா்.
    • இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பணியைப் புறக்கணித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பெரியகிணறு பகுதியில் ஒரு வாரத்துக்கு முன் அப்பகுதியைச் சோ்ந்த ஊராட்சி வாா்டு உறுப்பினா் புதியதாக 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் தொட்டியைக் கட்டியுள்ளாா். இந்த நிலை யில் கடந்த 23-ந் தேதி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட பாப்பாத்தி (வயது 50) என்பவா் அங்கு தண்ணீா் பிடிக்க சென்றபோது தொட்டி இடிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.

    மேலும் ஒருவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவின்பேரில் விரிவான விசாரணை மேற்கொள்ள ப்பட்டது. இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலத்திடம் உரிய அனுமதியில்லாமல் கட்டியதற்கு உதவியதாக ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட அனுமதியளித்ததாக அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் தங்கராஜிடம், விளக்கம் அளிக்கக் கோரி ஆர்.டி.ஓ. நோட்டீஸ் வழங்கி உள்ளாா்.

    இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பணியைப் புறக்கணித்து, நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனா்.

    இதையடுத்து கோட்டாட்சி யா் த.மஞ்சுளா வுடன், கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை. மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கோட்டாட்சியா் தெரிவித்துள்ளாா். இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்க நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கொல்லங்கோடு நகராட்சியில் அவசர கூட்டம் நேற்று தொடங்கியது.
    • உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் நீடித்தது.

    கன்னியாகுமரி:

    கொல்லங்கோடு நகராட்சியில் அவசர கூட்டம் நேற்று தொடங்கியது.இதில் நகராட்சித் தலைவர் ராணி ஸ்டீபன் மற்றும் ஆணையர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் ஆணையர் மீது பல்வேறு புகார்களை கூறினர்.

    குறிப்பாக பல்வேறு வளர்ச்சி பணிகள் கிடப்பில் உள்ளதாகவும் தற்காலிக ஊழியர்களை மிரட்டுவதாகவும் கூறினர்.இதனால் கோபமடைந்த ஆணையர் ஒரு கட்டத்தில் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே சென்றார். இதனால் ஆத்திரமடைந்த தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தின் முன்பக்கத்தில் வரிசையாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபன் கூறியதாவது:-

    நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பல மாதங் களாக டெண்டர் விடப்பட்ட வளர்ச்சிப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கான ஆணை பிறப்பிக்காமல் உள்ளது. ஆணையர் நகராட்சி சம்பந்தமான பணிகள் தொடர்பாக தலைவரிடம் எந்த கலந்தா லோசனையும் செய்வதில்லை.சுமார் 20 ஆண்டுகளாக கலெக்டர் வழிகாட்டுதல் படி தற்காலிக ஊழியராக செயல்பட்டு வருபவர்களை வேலையை விட்டு நீக்குவேன் என மிரட்டுகிறார்.

    இவை குறித்து பேச அவசர கூட்டம் கூட்டப்பட்டது.ஆனால் கூட்டத்திற்கு வந்த ஆணையர் உடனடியாக புறக்கணிப்பு செய்து விட்டார். இதனை கண்டித்து அனைத்து கட்சியை சேர்ந்த 33 கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இரவிலும் இந்த போராட்டம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.நேரமாகியும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை இதனால் உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் நீடித்தது. இன்றும் 2-வது நாளாக போராட்டம் நடக்கிறது.

    • செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர்.

    சென்னிமலை:

    செ ன்னிமலை நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீ ர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக பவானி அருகே காவிரி ஆற்றில்உள்ள கிணறுகளில் தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு குழாய்கள் மூலம் கருமாண்டி செல்லி பாளையம், பெருந்துறை பேரூராட்சி வழியாக கொண்டு வரப்பட்டு சென்னிமலை, ஈங்கூர் ரோ ட்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்படுகிறது.

    சென்னிமலை பேரூராட்சிக்கு தினமும் 22.50 லட்சம் லிட்டர் தண்ணீர் வரவேண்டும். இதில் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தான் வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பல இடங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை என்று வார்டு வாரியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 22 நாட்கள் ஆகியும் தண்ணீர் வருவதில்லை. இதனால், மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் 13 தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் மற்றும் ம.தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் செயல் அலுவலர் அறையில் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். தண்ணீர் விட்டால் மட்டும் தான் வீட்டுக்கு செல்ல முடியும் என கூறி அமர்ந்து கொண்டனர்.

    தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் 15 பேரும் மதிய உணவு உண்ணாமல் மிக பிடிவாதமாக போரா ட்டத்தில் இருந்த நிலையில் மாலை 5 மணி அளவில் அமைச்சர் சாமிநாதனின் பரிந்துறையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செ ல்வம், தமிழ்நாடு குடிநீ ர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் (பராமரிப்பு பிரிவு) முத்து லிங்கம், உதவி பொறியாளர் புவனேஸ்வரி, பெருந்துறை தாசில்தார் (பொறுப்பு) அமுதா ஆகியோர் டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் மற்றும் வார்டு கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள்.

    அப்போது சென்னிமலை பேரூராட்சி பகுதிக்கு மின் தடை மற்றும் குழா ய் உடைப்பு இல்லாத சமயங்களில் தினமும் 18 லட்சம் லிட்டர் குடிநீ ர் வி நியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாலை 6.30 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

    பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு பேராட்டம் 6½ மணி நேரம் நீடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.

    ×