search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிச்சாமி"

    • எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    அ.தி.மு.க., பொது ச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜைகள் செய்தும் நலத்திட்ட உதவிகள் அன்னதானம், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீடுடி வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் அவைத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பகுதி செயலாளர் கண்ணப்பன் ஏற்பாட்டின் பெயரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காங்கேயம் ரோடு ராக்கியாபாளையம் பிரிவு பட்டத்தரசி அம்மன் கோவிலில்ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு டேபிள் மற்றும் சேர் வழங்குதல் வழங்கப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து திருமுருகன் பூண்டி,பெரி யாயிபாளையம், சிவசர்மிளா கருனை இல்லத்திற்கு டேபிள் மற்றும் சேர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா கவுன்சிலர் கண்ணப்பன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீத சந்திரசேகர், பகுதி செயலாளர் கருணாகரன், ஹரிஹரசுதன், கே.பி.ஜி. மகேஷ்ராம், கேசவன், குமார், தொழிற்சங்க செயலாளர் கண்ண பிரான், வக்கீல் அணி செய லாளர் முருகேசன், நிர்வாகிகள் உஷா ரவிக்குமார், ஆண்டவர் பழனிச்சாமி, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சிகளையும் இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதி பட தெரிவித்துள்ளார்.
    • கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நேற்று முதன் முதலாக டெல்லி சென்றதும், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மற்ற கட்சிகளும் ஆவலுடன் உற்று நோக்கின.

    மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தல், கூட்டணி, தொகுதி பங்கீடு என்று எல்லா விஷயங்களையும் அவர்கள் அலசி ஆராய்ந்தனர்.

    இதுபற்றி டெல்லி வட்டாரம் மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி முதலில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிதான் பேசப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. தே.மு.தி.க. உள்பட அனைத்து கட்சிகளையும் இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதி பட தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் எடப்பாடி பழனிசாமி அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

    ஆனால் தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வந்தபோது தான் சற்று நெருடல்கள் ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு பாதி தொகுதியும், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுக்கு பாதி தொகுதியும் என்று தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம் என்று அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இதற்கு சம்மதம் தெரிவிக்கப் படவில்லை. தேர்தல் சமயத்தில் இதுபற்றி விரிவாக பேசலாம் என்று அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர். என்றாலும், பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் திட்டத்தை கைவிடவில்லை.

    அமித்ஷா தொடர்ந்து பேசுகையில், 'அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 20 தொகுதிகளை தாருங்கள். அதை நாங்கள் பிரித்து கொள்கிறோம். அதில் பா.ஜ.க. எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதையெல்லாம் நாங்கள் தீர்மானித்து கொள்கிறோம்' என்று கூறி இருக்கிறார்.

    இதைக் கேட்டதும் அ.தி.மு.க. தலைவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனினும் அமித்ஷா தொடர்ந்து பேசுகையில், 'கூட்டணி உறுதியாகிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதை விரைந்து முடிக்க வேண்டும். அதில் கவனம் செலுத்துங் கள்' என்று அறிவித்து இருக்கிறார்.

    அவர் மேலும் கூறுகையில், 'எந்தெந்த தொகுதிகளை தருவீர்கள் என்பதை முன்கூட்டியே உறுதிபடுத்தினால்தான் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்து களப்பணி செய்வதற்கு எங்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தடவை குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்பதில் பா.ஜனதா தீவிரமாக உள்ளது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கோவை, வேலூர், ராமநாதபுரம் உள்பட 9 தொகுதிகளை பா.ஜனதா இப்போதே தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதை வலியுறுத்தும் வகையில் தான் அமித்ஷா அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சிகளுக்கு 20 இடங்கள் வேண்டும் என்று கேட்டு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. தலைவர்கள் இதில் பதில் சொல்ல ஆர்வம் காட்டாத நிலையில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி செயல்படும் என்று அமித்ஷாவும், நட்டாவும் உறுதிபடுத்தி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் அ.தி.மு.க. தலைவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து தி.மு.க. கூட்டணியின் பலம்-பலவீனம் பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள். அடுத்து ஓ.பன்னீர் செல்வம் பிரிவதால் பாதிப்பு ஏற்படுமா? என்றும் விவாதித்து இருக்கிறார்கள். மேலும் பிரசாரம் பற்றியும் ஆய்வு செய்து இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதை பிரசாரத்திற்கு கையில் எடுக்கலாமா? என்பது பற்றியும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவாதம் நடந்த போது மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்துள்ளார். இதுவரை டெல்லி மேலிட தலைவர்களை பார்க்கும் போது மாநில தலைவர் உடன் இருந்ததில்லை.

    முதல் முறையாக அண்ணாமலையையும் அருகில் வைத்துக்கொண்டே அமித்ஷா பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வினருடன் சுமூகமான நிலையில் கட்சி பணியாற்ற வேண்டும் என்று அண்ணாமலையிடம் தெரிவித்து அமித்ஷா சமரசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை சலசலப்பு ஏற்பட்ட பிறகு பா.ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த அணி பக்கமும் சாயாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக எடப்பாடி பழனிசாமியை அழைத்து அங்கீகரித்துள்ளனர்.

    இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் அண்ணாமலையும் உடன் இருந்ததால் தமிழக பா.ஜ.க.வுக்கும் சம வெற்றியாக பேசப்படுகிறது.

    • ராஜேந்திரபாலாஜியின் தந்தை மறைவு: எடப்பாடி பழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    சிவகாசி

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தந்தை தவசிலிங்கம் ஆச்சாரி உடல்நல குறைவால் கடந்த 17-ந் தேதி காலமானார்.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியின் இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்து ஆறுதல் தெரிவித்தார். கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், டாக்டர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, காமராஜ், ராஜலட்சுமி, இன்பத்தமிழன், மருதுசேனை நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, மான்ராஜ், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கடையநல்லூர் எம்.எல்.ஏ. குட்டியப்பா, முன்னாள் எம்.எல்.ஏ.க சந்திரபிரபா, எதிர்கோட்டை சுப்பிரமணியன், சிவசாமி.

    விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • அ.தி.மு.க. சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றுவிட்டது. இனி அ.தி.மு.க.வில் சேரவே முடியாதா என்ற ஏக்கம் ஒரு பக்கம்.
    • அ.தி.மு.க. எடப்பாடி கைக்கு சென்றதால் ஓ.பன்னீர் செல்வம் விரக்தி அடைந்ததை போல டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் கோபம் அடைந்துள்ளனர்.

    சட்டி சுட்டதடா... கைவிட்டதடா... என்ற கதையில் நடத்திய போராட்டங்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் கையறு நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

    அ.தி.மு.க. சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றுவிட்டது. இனி அ.தி.மு.க.வில் சேரவே முடியாதா என்ற ஏக்கம் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் நமது அரசியல் பயணம் இனி எப்படி இருக்கும் என்ற கலக்கம் ஒரு பக்கம். தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைகள் எதுவும் உருப்படியாக தெரியவில்லையாம்.

    ஒரு நிர்வாகி "அம்மா திராவிட முன்னேற்ற கழகம்" என்று தனிக்கட்சி தொடங்கலாம். அப்படியானால் நாமும் அ.தி.மு.க. என்ற பெயரோடு அரசியல் களத்தில் செல்ல முடியும். தென் மண்டலத்திலும், சமூக ரீதியாகவும் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெற முடியும். நமது ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க. ஜெயிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கலாம் என்று சொன்னார்களாம். ஆனால் இதுவும் சரிப்பட்டு வராது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருக்கிறார்.

    அ.தி.மு.க. எடப்பாடி கைக்கு சென்றதால் ஓ.பன்னீர் செல்வம் விரக்தி அடைந்ததை போல டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் கோபம் அடைந்துள்ளனர். எனவே அவர்களோடு சேர்ந்து ஒரு தனி அணியை உருவாக்கலாமா என்றும் யோசனை கூறி இருக்கிறார்கள். அதுவும் சரிபட்டு வருமா என்று ஓ.பன்னீர்செல்வம் யோசித்து கொண்டிருக்கிறார். எல்லா நம்பிக்கைகளும் தளர்ந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை மட்டும் நம்பி இருக்கிறார்.

    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • அஜித் தந்தை மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை 3:15 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக விமர்சிப்பதை கட்டுப்படுத்துவதற்கு அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாக வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.
    • செந்தில் பாலாஜியிடம் புது அசைன்மெண்ட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எதிரும் புதிரும் என்பது தெரிந்ததே! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிப்பது அரசியல் களத்தில் நடப்பதுதான். சமீபகாலமாக எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக விமர்சிப்பதை கட்டுப்படுத்துவதற்கு அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாக வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம். அதற்காக செந்தில் பாலாஜியிடம் புது அசைன்மெண்ட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    பொதுவாக மாற்றுக்கட்சிகளில் இருந்து நிறைய பேரை அழைத்து வந்து தி.மு.க.வில் இணைப்பதில் முன்னணியில் இருப்பவர் செந்தில் பாலாஜி. அவருக்கு இப்போது ஒரு புது 'அசைன்மென்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.

    பிற கட்சி தொண்டர்களை இணைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதே சமயம் பெரிய புள்ளிகளை வளைத்து வாருங்கள். குறிப்பாக சட்டமன்றத்தில் நமது பேச்சுக்கு எதிர்க்கட்சி வரிசையில் இருந்து சிலராவது மேஜையை தட்ட வேண்டும் அதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து எதிர்கட்சியில் அதிருப்தியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் லிஸ்ட்டை எடுத்து வருகிறார்களாம். எனவே விரைவில் தொகுதிப் பிரச்சினைக்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்திக்கலாம் என்கிறார்கள் ஒருவேளை அமைச்சர் துரைமுருகன் சொன்னது போல் நாங்கள் பகையாளிகளாக இருந்தாலும் பங்காளிகள் என்பது இப்படித்தானோ?

    • தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
    • மாநகர் மாவட்ட செயலாளர் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்..எல்.ஏ., கலந்துகொண்டு புதிய உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவை த்தலைவர் பழனிச்சாமி, விஜயகுமார் எம்.எல்.ஏ, அமைப்புச் செயலாளர் சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், என்.எஸ்.என். நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அடையாள அட்டையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படம் இடம் பெற்றுள்ளது. மேலும் அமைதி, வளம் ,வளர்ச்சி என்ற வாசகமும் இடம்பெற்று உள்ளது.

    நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட துணைச் செயலாளர் பூலுவபட்டி பாலு, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், கே.பி.ஜி. மகேஷ்ராம்,ஹரிஹரசுதன், திலகர், சுப்பு, தொழில் சங்க செயலாளர் கண்ணபிரான், நிர்வாகிகள் ஆண்டவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குமரன் சிலை முன்பு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாக கூறி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அதேபோல் திருப்பூரில் இன்று குமரன் சிலை முன்பு திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், கே.என்.விஜயகுமார், அமைப்புச் செயலாளர் சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், என்.எஸ்.என். நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பழிவாங்கும் நடவடிக்கையாக தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், அதிமுக. கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்தி மக்கள் விரோத ஆட்சி நடைபெறுவதாக கூறி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதிச் செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், கே.பி.ஜி.மகேஸ்ராம், ஹரிஹரசுதன், மாணவரணி செயலாளர் சதீஷ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தண்ணீர் பந்தல் தனபால், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் இருந்து வெளியே வருவதற்காக சிறிய பஸ்சில் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்தார். அப்போது அதே பஸ்சில் இருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசி தனது செல்போனில் படம் பிடித்தார்.

    இதனால் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர்கள் அவரை தடுத்தனர். அப்போது அங்கு மோதல் ஏற்பட்டது. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக இருதரப்பிலும் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அ.ம.மு.க. பிரமுகர் ராஜேசுவரன் அளித்த புகாரின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது, அ.தி.மு.க.வினர் கொடுத்த புகாரின்பேரில் ராஜேசுவரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 11 மணிக்கு மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கருப்புச்சட்டை அணிந்திருந்தனர். அவர்கள் தி.மு.க. அரசு மற்றும் போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், அண்ணாதுரை, பைக்காரா கருப்புசாமி, சோலைராஜா, முத்துவேல், கலைச்செல்வம், கே.வி.கே. கண்ணன், பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், பரவை ராஜா, வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், ராஜேந்திரன், ஓம்.கே. சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அ.தி.மு.க.வினர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர்.
    • கோமல், ஆர்.கே. அன்பரசன் ஆகியோர் அ.தி.மு.க.வின் இணைந்தனர்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை நிலைய செயலாளரும், திருப்பத்தூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.கே.உமாதேவன், அ.ம.மு.க. செய்தி தொடர்பாளர் கோமல் ஆர்.கே. அன்பரசன் ஆகியோர் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    • பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
    • கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவரும், அவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் (36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர். பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.

    அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும், கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதாகி உள்ள பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜி. சிகாமணி, (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
    • மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ‌. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மதுரை

    தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வழியாக வந்தார். அப்போது மதுரை வலையங்குளம் ரிங் ரோட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் ஏற்பாட்டில் சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மேளதாளம் முழங்க எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து டாக்டர் சரவணன் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றார்.

    பின்னர் அங்கு நடந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் தலைமையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். அப்போது டாக்டர் சரவ ணன், பழனிச்சாமிக்கு செங்கோல் கொடுத்தார்.

    விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தி.மு.க. தேர்தல் வாக்கு றுதியை 85 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக பொய் கூறி வருகிறார்கள். ஆனால் 10 சதவீத வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றவில்லை.

    ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. அரசு தான். இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் இருப்பதாக மு.க. ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உண்மையில் தமிழகம் ஊழலில் தான் முதன்மையாக இருக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க.வினர் நிறுத்திவிட்டார்கள். மதுரை மக்களுக்கு கொண்டுவரப்பட்ட ரூ. 1,296 கோடி மதிப்பிலான முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    தி.மு.க. கூறிய எந்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை மக்களுக்கு பட்டை நாமம் போட்டு விட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×