என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வத்தின் கடைசி நம்பிக்கை...!
- அ.தி.மு.க. சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றுவிட்டது. இனி அ.தி.மு.க.வில் சேரவே முடியாதா என்ற ஏக்கம் ஒரு பக்கம்.
- அ.தி.மு.க. எடப்பாடி கைக்கு சென்றதால் ஓ.பன்னீர் செல்வம் விரக்தி அடைந்ததை போல டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் கோபம் அடைந்துள்ளனர்.
சட்டி சுட்டதடா... கைவிட்டதடா... என்ற கதையில் நடத்திய போராட்டங்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் கையறு நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
அ.தி.மு.க. சட்ட ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி கைக்கு சென்றுவிட்டது. இனி அ.தி.மு.க.வில் சேரவே முடியாதா என்ற ஏக்கம் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் நமது அரசியல் பயணம் இனி எப்படி இருக்கும் என்ற கலக்கம் ஒரு பக்கம். தனது நெருங்கிய ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனைகள் எதுவும் உருப்படியாக தெரியவில்லையாம்.
ஒரு நிர்வாகி "அம்மா திராவிட முன்னேற்ற கழகம்" என்று தனிக்கட்சி தொடங்கலாம். அப்படியானால் நாமும் அ.தி.மு.க. என்ற பெயரோடு அரசியல் களத்தில் செல்ல முடியும். தென் மண்டலத்திலும், சமூக ரீதியாகவும் குறிப்பிட்ட அளவு வாக்குகளை பெற முடியும். நமது ஆதரவு இல்லாமல் அ.தி.மு.க. ஜெயிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கலாம் என்று சொன்னார்களாம். ஆனால் இதுவும் சரிப்பட்டு வராது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறி இருக்கிறார்.
அ.தி.மு.க. எடப்பாடி கைக்கு சென்றதால் ஓ.பன்னீர் செல்வம் விரக்தி அடைந்ததை போல டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் கோபம் அடைந்துள்ளனர். எனவே அவர்களோடு சேர்ந்து ஒரு தனி அணியை உருவாக்கலாமா என்றும் யோசனை கூறி இருக்கிறார்கள். அதுவும் சரிபட்டு வருமா என்று ஓ.பன்னீர்செல்வம் யோசித்து கொண்டிருக்கிறார். எல்லா நம்பிக்கைகளும் தளர்ந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை மட்டும் நம்பி இருக்கிறார்.