search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதிமொழி"

    • மருதுபாண்டியர் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் மரியாதை செலுத்தினர்.
    • வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பரமக்குடி

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் 222-வது குருபூஜையையொட்டி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் அவர்கள் வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் மேற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கார்த்தி, கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், துணைச் செயலாளர் பசும்பொன் சௌந்தர், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராமு உட்பட சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

    நெல்லை:

    நாடு முழுவதும் இன்று உலக விபத்து தடுப்பு தினத்தையொட்டி நெல்லை அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை நெல்லை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஊர்வலமாக சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. பின்னர் செவிலியர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

    தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் முகமது ரபி, டாக்டர் அமலன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.

    பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.


     


    • கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கண் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கி விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே கம்ப்யூட்டர் மூலம் பணி செய்ததாலும், குழந்தைகள் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்ததாலும் அவர்களுக்கு பார்வை குறைபாடு பிரச்சனை அதிகரித்துள்ளது.

    எனவே, குறிப்பிட்ட சில மணி நேரம் ஓய்வு அளித்தால் தான் கண்களை பாதுகாக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து, கண் பாது காப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி நகராட்சி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை பணியை தொடங்கினர்.
    • என். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சி 22 வது வார்டில் சீர்காழி ரோட்டரி சங்கம் சீர்காழி நகராட்சி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ் மாணவர்கள் மற்றும் நகர் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து தூய்மை சேவை பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.

    நகரமன்ற உறுப்பினர் வேல்முருகன், இன்ஜினியர் சுப்பிரமணியன் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.

    நகராட்சி ஆணையர் ஹேமலதா நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    என். எஸ். எஸ் மாணவர்கள் ஆசிரியர் பரணி தலைமையில் தூய்மை பணி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நகர் நல சங்கத் தலைவர் சீனிவாசன், வீரசேனன், சங்கர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    நகர் நல சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி பொருளாளர் கண்ணன் , பெஸ்ட் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் ரோட்டரி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    நகர் முழுவதும் தூய்மைப் பணியை என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் செய்து முடித்தார்கள். முடிவில் செயலாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார்.

    • காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியா் சுடர்மணி வரவேற்று பேசினார்.

    அதனைதொடா்ந்து வளாகத் தூய்மை, கட்டிடங்கள் பராமரித்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது. மேலும் மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக உடல் தூய்மை, வீடு, கழிவறை, பூங்கா, சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் தூய்மையைப் பேணிக் காப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளியல் முதுகலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

    • சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது
    • தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் நேற்று தூய்மை பணி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன் தலைமை தாங்கி தூய்மை சேவைபணியை தொடங்கி வைத்தார்.பேரூராட்சி செயல் அலுவலர் குமார் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மை சேவைபணிக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    பின்பு பேரூராட்சியில் உள்ள பஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி வளாகம், அனைத்து வீதிகளிலும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து நாட்டுநல பணிதிட்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியும் தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.

    தூய்மை பணி குறித்து ஓவியப்போட்டி பனப்பாக்கம் அரசு மாதிரி பள்ளியில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என்.ஆர்.சீனிவாசன், கோகிலா, ராஜேஸ்வரி, சஞ்சீவி, சகிலா விநாயகமூர்த்தி, சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா, சுகாதார மேற்பார்வை யாளர் பிரவீன்குமார், உதவி தலைமை ஆசிரியர் செந்திக்குமார் மற்றும் தூய்மை பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

    • போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    சீர்காழி போக்குவரத்து காவல்துறை சார்பில் நகரில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வா ளர்கள் பிறைச்சந்திரன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் ஆய்வாளர் சிவக்குமார் பேசுகையில், ஆட்டோ ஓட்டுனர்கள் பணியின்போது சீருடை அணிந்து வாகனங்களை இயக்கிடவேண்டும், மதுஅருந்திவிட்டோ, செல் போன் பேசிக்கொண்டோ, வாகனங்களை இயக்ககூடாது.அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்லவேண்டும் நகரில் ஒருவழிப்பாதையை கட்டாயம் பின்பற்றி,போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து ஆட்டோக்களை இயக்கவேண்டும் என்றார். அப்போது போக்குவரத்து முதல்நிலை காவலர்கள் தேவேந்திரன், பூபாலன், அண்ணாமலை மற்றும் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பங்கேற்றனர். முடிவில் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல் அவைகளை பாதுகாக்க வேண்டும்.
    • முன்னதாக லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து அனைவரையும் வரவேற்றார்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கம், பட்டுக்கோட்டை ஹோஸ்ட் லயன் சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா வார விழா மற்றும் மரம் நடும் துவக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பட்டுக்கோ ட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி கோட்ட ரெயில்வே உபயோகிப்போர் குழு உறுப்பினருமான ஜெயராமன் தலைமை வகித்தார்.

    லயன் சங்கத் தலைவர் அன்பழகன் ரெட் கிராஸ் சங்கத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து வரவே ற்றார். புதுடில்லி காவல்துறை கூடுதல் ஆணையாளர் சத்தியசுந்தரம் ஐ.பி.எ.ஸ். தூய்மை பணியையும் மரம் நடும் விழாவையும் துவக்கி வைத்து பேசுகையில் :

    மக்கள் ஆரோக்கியமாக வாழ தூய்மை மிக அவசியம். எனவே பொது இடங்களையும் , நமது நாட்டையும் தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.

    அதுபோல நம் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகா க்கவும் நல்ல காற்றினை நாம் சுவாசிக்கவும் நிறைய மரங்களை நாம் வளர்க்க வேண்டும்.

    மரக்கன்றுகளை நடுவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சியில் அனைவரும் தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .

    அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் 100 பேர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பாதைகள், சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பை களை அகற்றினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நிலைய தலைமை அதிகாரி மருது பாண்டியன் விதை அறக்கட்டளை நிறுவனர் சக்தி காந்த், பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கத்தின் மரம் வளர்ப்பு ஒருங்கிணை ப்பாளர்கள் ராமமூர்த்தி, சுப்பிரமணி, சங்கர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

    முடிவில் பட்டுக்கோ ட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் விவேகானந்தம் நன்றி கூறினார்.

    • கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி மேலாண் இயக்குனர்மோகன் தலைமையில் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

    பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு தெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்.

    சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுப் பார்வையும கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன்.

    சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன் என மேலாண்இயக்குனர் கூற அனைவரும் வாசித்து ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள், துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • தூய்மையே சேவை சிறப்பு முகாம் திருப்புகலூர் வவ்வாலடியில் தொடங்கியது.
    • தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    தூய்மை பாரத இயக்க ஊரகம் விழிப்புணர்வு செயல்பாடுகளின் தூய்மையே சேவை சிறப்பு முகாம் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடியில் தொடங்கியது.

    இதில் வவ்வாலடி பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    மேலும் ஊராட்சியை தூய்மையாக வைக்க பாடுபடுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    முகாமை ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாம் வரும் அக்டோபர் 2-ம் தேதிவரை ஊராட்சி பகுதி முழுவதும் நடக்கிறது.

    அதேபோல் பனங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா செந்தில்குமார் கொடியசைத்து முகாமை துவக்கி வைத்தார்.

    • மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
    • நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் 74-வது நினைவு தினம் அவர் பிறந்த ஊரான நாகையில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நாகை ரெயில்வே நிலையத்திற்கு எதிரே உள்ள மறைமலை அடிகளாரின் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இதில் தஞ்சாவூரில் வசிக்கும் மறைமலை அடிகளாரின் மகன் 76 வயதான பச்சையப்பன் , அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    இதேப்போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

    அப்போது தமிழை வளர்த்த மறைமலை அடிகளாருக்கு நாகையில் மணிமண்டபம் கட்டி அவருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன், நாம் தமிழர் கட்சி நாகை பாராளுமன்ற மண்டல ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் அற்புதராஜ் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மதியழகன், நாகை தொகுதி செயலாளர் ஆதித்தன், கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல், தமிழர் மீட்சி பாசறை மாவட்ட தலைவர் மதிவாணன், நாகை சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ், பொருளாளர் நாகராஜன், கீழ்வேளூர் தொகுதி தலைவர் அருள் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் அரசு கல்லூரிகளில் சமூக நீதி நாள் அனுசரிக்கப்பட்டது
    • சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முன்னதாக இந்த சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது.அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து, சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வெ.கருணாகரன், மேரி வைலட் கிருஸ்டி ஆகியோர் செய்திருந்தனர்.இதே போல் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில், முதல்வர் ரமேஷ் தலைமையில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×