search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "affidavit"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்
    • ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டு வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.

    அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.

    இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாஜக வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் சமர்ப்பித்த சொத்து விவரங்களை சரிபார்க்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (CBDT) தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
    • ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இதற்கிடையே, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அதில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.

    அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.

    இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பா.ஜ.க. மந்திரிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் செல்லாது. அவை எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான். பாஜகவிற்காகவும், மோடிக்காகவும் இப்படித்தான் இந்திய ஏஜென்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்.
    • அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிஏஏ 2019-ன் கீழ், இந்திய குடியுரிமை கோருவோா், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டு களுக்கு குறையாமல் விண்ணப்பதாரா் இந்தியாவில் தங்கியிருந்தால், அவா் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவா்.

    சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவ தாகவும், இந்தியாவை தங்கள் நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் விண்ணப்பதாரா் உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தியாவை பூா்வீகமாக கொண்டவா், இந்திய குடியுரிமை பெற்ற வரைத் திருமணம் செய்தவா், இந்திய குடியுரிமை பெற்ற வரின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை, இந்திய பெற்றோருக்குப் பிறந்தவா், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவா் தனி விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும்.

    சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் நடத்தை குறித்து இந்திய குடிமகன் ஒருவரின் பிரமாண பத்திரத்தையும் இணைக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பதாரா்கள் அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால், 'இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டி ருப்போம்', 'இந்திய சட்டங் களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்', 'இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூா்த்தி செய்வோம்' என்று விண்ணப்பதாரா் உறுதி மொழி ஏற்க வேண்டும். விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), தங்கும் அனுமதி, வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். எனினும் இந்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல.

    இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னா், சிஏஏ 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்ப தாரருக்கு அதற்கான எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வழங்கப்படும். ஆவண வடிவில் இந்திய குடியுரிமை சான்றிதழ் கோருவோா் அதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

    • கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • கண் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உலக பார்வை தினத்தை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமை தாங்கி விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே கம்ப்யூட்டர் மூலம் பணி செய்ததாலும், குழந்தைகள் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் படித்ததாலும் அவர்களுக்கு பார்வை குறைபாடு பிரச்சனை அதிகரித்துள்ளது.

    எனவே, குறிப்பிட்ட சில மணி நேரம் ஓய்வு அளித்தால் தான் கண்களை பாதுகாக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து, கண் பாது காப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன், கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் பா.ம.க. கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வருகை தந்துள்ளனர். அந்தக் குழுவில் உள்ள சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளிடம் ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க. மாவட்ட செயலாளர் தேனிசை. அக்கீம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் ராமநாதபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை எளிதாக்க வேண்டும்.

    ராமநாதபுரம் நகர் வெளியே புதிய ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் முனியசாமி, ராமநாதபுரம் நகர செயலாளர் பாலா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.எல்.ஏ. அருளுக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

    • அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார்.
    • வங்கி ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் பாரதியார் வீதியில் தனியார் (கரூர் வைஸ்யா) வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு கடந்த 25-ந் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர், வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி அதிலிருந்து பணத்தை திருட முயற்சித்தார். இயந்திரத்தை முழுமையாக உடைத்து பணம் எடுக்க முடியாததால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், அங்கிருந்த சிசிடிவி மற்றும் மின்சாதனங்களை இரும்பு பைப்பால் அடித்து உடைத்துவிட்டு தப்பிவிட்டார். இது தொடர்பாக வங்கி மேலாளர் ஸ்ரீதர் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி ஏடிஎம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஏ.டி.எம். இயந்திரம் அருகே, மது போதையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒருவரை, இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த விக்னேஷ் (வயது 24) என்பதும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். மேலும் தான் வேலையில்லாமல் சுற்றி வருவதாகவும், சகோதரி திருமணத்திற்கு பணம் இல்லாமல், மது அருந்திவிட்டு யோசித்த பொழுது, போதையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து விட்டதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதன் பெயரில் போலீசார் விக்னேஷை கைது செய்து சிறையில அடைத்தனர்.

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சிந்த்வாரா தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்த முதல் மந்திரி கமல்நாத் மகன் நகுல் நாத்துக்கு 660 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019 #Chhindwara #NakulNath
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக பதவி வகிப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத். இவரது மகன் நகுல் நாத் வரும் பாராளுமன்ற தேர்தலில் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், சிந்த்வாரா பாராளுமன்ற தொகுதியில் நகுல் நாத் வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்புக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்துக்களின் விவரம் வருமாறு:

    அசையும் சொத்துக்களின் மதிப்பு 615 கோடி எனவும், அசையா சொத்துக்களின் மதிப்பு 42 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தனக்கு 869 கிராம் எடையில் தங்க கட்டிகளும், 7 கிலோ வெள்ளி நகைகளும் உள்ளது. மேலும் 147 காரட் வைரம் மற்றும் கல் நகைகள் உள்ளிட்ட நகைகள் 78 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Chhindwara #NakulNath
    ×