search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுதிமொழி"

    • சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்.
    • அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிஏஏ 2019-ன் கீழ், இந்திய குடியுரிமை கோருவோா், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டு களுக்கு குறையாமல் விண்ணப்பதாரா் இந்தியாவில் தங்கியிருந்தால், அவா் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவா்.

    சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவ தாகவும், இந்தியாவை தங்கள் நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் விண்ணப்பதாரா் உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தியாவை பூா்வீகமாக கொண்டவா், இந்திய குடியுரிமை பெற்ற வரைத் திருமணம் செய்தவா், இந்திய குடியுரிமை பெற்ற வரின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை, இந்திய பெற்றோருக்குப் பிறந்தவா், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவா் தனி விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும்.

    சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் நடத்தை குறித்து இந்திய குடிமகன் ஒருவரின் பிரமாண பத்திரத்தையும் இணைக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பதாரா்கள் அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால், 'இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டி ருப்போம்', 'இந்திய சட்டங் களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்', 'இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூா்த்தி செய்வோம்' என்று விண்ணப்பதாரா் உறுதி மொழி ஏற்க வேண்டும். விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), தங்கும் அனுமதி, வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். எனினும் இந்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல.

    இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னா், சிஏஏ 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்ப தாரருக்கு அதற்கான எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வழங்கப்படும். ஆவண வடிவில் இந்திய குடியுரிமை சான்றிதழ் கோருவோா் அதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

    • கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் இறையாண்மையையும், சமநல சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகம் அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குநர் (இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (பேப்பர் புரொடக்சன்) மகேஷ், துணைப் பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர்(மனித வளம்) சிவக்குமார், மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன், துணை மேலாளர் (பாதுகாப்பு) சங்கிலி ராஜன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    • தாய்மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.
    • முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தனித்தமிழ் ஆர்வலர், தமிழாசிரியர் முதுமுனைவர் பி.விருத்தாசலனார் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தஞ்சாவூர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி அறங்காவலர் முனைவர் இளமுருகன் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர் (ஓய்வு) முனைவர் குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் . நாட்டார் கல்லூரி ஆட்சி குழு செயலாளர் கலியபெரு மாள், கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மக்கள் ஒருங்கிணைப்பு மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் மதச்சார்பின்மை, சோசலிசம், குடியரசு என்ற தலைப்பிலும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மக்களுக்கான கல்வி என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் புலவர்களும் தமிழ் பண்டிதர்களும் தேர்வு எழுத அரசாணை வெளியிட வேண்டும்.

    தமிழ் வழியில் படித்த வர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது, தாய் மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.

    நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி ,இயக்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், பேரா சிரியர்கள், அலுவ லர்கள்,மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் பாரி, தமிழ்ச்செல்வன், மருத்துவர் தென்றல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்

    • தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு வார விழா நடந்தது.
    • விழாவில் உறுதிமொழி எடுத்தல் மரம் நடுதல் விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    70- வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கடந்த 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் 7 நாட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

    கூட்டுறவு வார விழாவின் முதல் நாள் நிகழ்வாக கூட்டுறவு கொடியேற்றுதல், உறுதிமொழி எடுத்தல் மற்றும் மரம் நடுதல் விழா தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர், வார விழா குழு தலைவர்பழனீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் வார விழா குழு துணை தலைவருமான பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் அப்துல்மஜீத், பொது விநியோகத் திட்ட துணைப்ப திவாளர் கருப்பையா, மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள்சந்தான லட்சுமி, அன்புச்செ ல்வன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சிய ர்பன்னீர்செல்வம், மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர்கண்ணன் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
    • தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும்.

    சுவாமிமலை:

    தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மற்றும் கார்த்தி வித்யாலயா கல்விக் குழுமம் ஆகியவை இணைந்து விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடந்தது.

    இதில் தீயணைப்பு துறை நிலைய அதிகாரி பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பருத்தி ஆடைகள் அணிந்து கொண்டு மாணவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

    மேலும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பின்னர், மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்காக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பள்ளி தலைவர் கார்த்திகேயனை, மாணவர்களின் பெற்றோ ர்கள் பாராட்டினர்.இதில் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கலந்துகொண்டு மாணவர்கள் பட்டாசு வெடிக்கும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அருகில் வைத்துக்கொள்ள கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் பேசினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அம்பிகாபதி செய்திருந்தார்.

    இதில் தீயணைப்பு துறை பணியாளர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அறுவை சிகிச்சை அரங்கத்தை உடனே சீரமைக்க உத்தரவு
    • பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும்.

    கன்னியாகுமரி:

    தமிழக சட்டமன்ற உறுதிமொழி குழு அதன் தலைவரும், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று இரவு கார் மூலம் கன்னியாகுமரி வந்தனர். இந்த குழுவில் அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ. அருள், நாமக்கல் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராமலிங்கம், ஆம்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர்கள் கருணாநிதி, துணை செயலாளர் ரவி, பிரிவு அலுவலர் பியூலா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த குழுவினர் நேற்று இரவு கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினர். இன்று காலையில் இந்த குழுவினர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் கன்னியாகுமரியில் உள்ள வட்டார தலைமை மருத்துவமனைக்கு சென்று "திடீர்" ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பெண்கள் பிரசவ வார்டு, பெண் உள்நோயாளிகள் பிரிவு, ஆப்ரேஷன் தியேட்டர் உள்பட அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த நோயாளிகளிடமும் குறைகளை கேட்டறிந்தனர். அங்கு தற்போது பரவி வரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் யாரும் உள்ளனரா? என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். உள்நோயாளிகள் வார்டில் உள்ள ஜன்னல்களில் கொசு வலைகளை உடனடியாக பொருத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன் பிறகு இந்த குழுவினர் கன்னியாகுமரியில் பாழடைந்து கிடக்கும் புதிய பஸ் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். இந்த குழுவினர் அந்த பஸ்நிலையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் தேங்காய்பட்டணத்தில் ரூ.253 கோடி செலவில் நடைபெற்று வரும் துறைமுக விரிவாக்க பணிகளை இந்த குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், கட்டிட பிரிவு செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி ராஜா, உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் மாரிதுரை, மருத்துவத்துறை இயக்குனர் பிரகலாதன், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அதிகாரிகள் கலந்துகொண்டனர். சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி ஆஸ்பத்திரியில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லை. இங்கு வருகிற நோயாளிகளை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டை பொதுமக்கள் அளிப்பதன் அடிப்படையில் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது. அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடத்தின் மோசமான தன்மையின் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தான் பிரசவ அறுவை சிகிச்சை மற்றும் வேறு அறுவை சிகிச்சைகள் இங்கு நடைபெறவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கத்தை சீரமைத்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு வருபவர்களை மட்டும் மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 5 டாக்டர்கள், 10 செவிலியர்கள் உள்ளனர். சில பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறியுள்ளார்கள். அந்த காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.20 லட்சம் செலவில் ஆஸ்பத்திரி சீரமைக்கப்படுகிறது. இந்த பணியை 2 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஜன்னல்களில் கொசுவலைகளை பொருத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மிக முக்கியமான பகுதி கன்னியாகுமரி ஆகும். இங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீனவர்கள் அவசர தேவைக்கு வருகின்றபோது மருத்துவர்கள் பணியில் இருந்து பணியாற்ற வேண்டும். வட்டார தலைமை மருத்துவமனை யில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கன்னியாகுமரி பஸ் நிலையம் மிக மோசமான நிலையில் உள்ளதாக புகார் வந்துள்ளது. பஸ் நிலையயத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கையை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தகுழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
    • மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    தமிழக சட்டமன்ற உறுதி மொழி குழு அதன் தலைவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நாளை இரவு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறது. இந்தகுழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் 3-ந்தேதி காலையில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை யில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் காமராஜர் மணி மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் ரூ.7 கோடி செலவில் கூடுதல் படகு தளம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள திருவள்ளு வர் சிலைக்கு தனிபடகு மூலம் செல்கின்றனர். அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளு வர் சிலைக்கும் இடையே கண்ணாடி இழையிலான இணைப்பு கூண்டு பாலம் அமைக்கும் பணியை பார்வையிடுகின்ற னர். அதன் பிறகு இந்த குழுவினர் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப் பணிகளை ஆய்வு செய்கின்றனர்.தொடர்ந்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    • புகளூர் காகித ஆலை நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
    • தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு கூறும் விதமாக தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் நடைபெற்றது. உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் பொது மேலாளர் நாகராஜன், பாதுகாப்பு பிரிவு துணைப் பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், மனிதவளம் பிரிவு முதுநிலை மேலாளர் சிவக்குமார், மேலாளர் வெங்கடேஷ், பாதுகாப்பு பிரிவு துணை மேலாளர் சங்கிலி ராஜன் ஆகியோர் தலைமையில் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்

    • தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி இன்று நடந்தது.
    • இதில் 75-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    இந்திய அரசு கலாச்சா ரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் ஏக் திவாஸ் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி மற்றும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் கோபால கிருஷ்ணன் முன்னிலையிலும் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மை பாஸ்கரன் தலைமையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 75-க்கும் மேற்பட்ட இந்திய குழந்தைகள் நல சங்கம் மாணவர்கள் கலந்து கொண்டு கலைஞர் நகரிலிருந்து தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு தேசிய ஒற்றுமைக்கான ஓட்டம் ஓடி வந்தனர்.

    பின்னர் தென்னகப் பண்பாட்டு மையம் வந்தடைந்தவுடன் மாணவர்கள் மற்றும் தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர்கள் அனைவரும் ஏக் திவாஸ் தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவர்களுக்கு தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் சான்றிதழ் வழங்கினார்.

    • புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு வார உறுதி மொழி ஏற்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்

     புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு வார உறுதி மொழி ஏற்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், தனித்துணை ஆட்சியர் செய்யது முகம்மது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

    • மருதுபாண்டியர் நினைவிடத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் மரியாதை செலுத்தினர்.
    • வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பரமக்குடி

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருது சகோதரர்கள் நினைவிடத்தில் 222-வது குருபூஜையையொட்டி முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் அவர்கள் வீரவணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் மேற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கார்த்தி, கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பசும்பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், துணைச் செயலாளர் பசும்பொன் சௌந்தர், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.ராமு உட்பட சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

    நெல்லை:

    நாடு முழுவதும் இன்று உலக விபத்து தடுப்பு தினத்தையொட்டி நெல்லை அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை நெல்லை மாநகர தலைமையிடத்து போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணியில் மருத்துவ கல்லூரி செவிலியர் மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஊர்வலமாக சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விபத்து தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. பின்னர் செவிலியர், மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றது.

    தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் முகமது ரபி, டாக்டர் அமலன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.

    பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அனிதா கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. அருகில் அரசு மருத்துவ கல்லூரி டீன் ரேவதி மற்றும் பலர் உள்ளனர்.


     


    ×