என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசினார்.
வேலங்குடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்- கலெக்டர் பங்கேற்பு
- கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே வேலங்குடி ஊராட்சியில் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
குடியரசு தினத்தை யொட்டி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு கிராம வளர்ச்சிக்கு தேவையான கருத்துக்களை வழங்கி, கோரிக்கைகளை தெரியப்படுத்திட வேண்டும்.
இதன்மூலம் கிராம ங்களின் வளர்ச்சிக்கு தேவை யான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும். வேலங்குடி ஊராட்சியில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு மற்றும் இதர தலைப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி மற்றும் பெண் குழந்தை காப்போம் ஆகிய உறுதிமொழிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் அனைவரும் எடுத்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒன்றி யக்குழுத்தலைவர் புலிவலம் தேவா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திட்ட இயக்குநர் மகளிர்திட்டம் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பொன்னியின்செல்வன், வேளாண்மை இணை இயக்குநர் ஆசீர் கனகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






