என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
  X

  உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்களை படத்தில் காணலாம். 

  இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர்.

  நாகர்கோவில்:

  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந்தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து 26-ந் தேதி அன்று உள்ளாட்சி அலுவலகங்கள், மாவட்ட பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உறுதிமொழி எடுக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

  அதன்படி குமரி மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

  நிகழ்ச்சிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சிவக்குமார், செயலாளர் முருகானந்தம், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜாண்சிலின் விஜிலா, அம்பிளி, லூயிஸ், பரமேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர்.

  Next Story
  ×