செங்கோட்டை அரசு பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு

காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது.
செங்கோட்டை அரசு பள்ளியில் தூய்மை உறுதிமொழி ஏற்பு
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியா் சுடர்மணி வரவேற்று பேசினார்.

அதனைதொடா்ந்து வளாகத் தூய்மை, கட்டிடங்கள் பராமரித்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது. மேலும் மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக உடல் தூய்மை, வீடு, கழிவறை, பூங்கா, சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் தூய்மையைப் பேணிக் காப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளியல் முதுகலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com