சமூக நீதி நாள் அனுசரிப்பு

அரியலூர் அரசு கல்லூரிகளில் சமூக நீதி நாள் அனுசரிக்கப்பட்டது சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்
சமூக நீதி நாள் அனுசரிப்பு
Published on

அரியலூர்,

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 ஆம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் முன்னதாக இந்த சமூக நீதிநாள் அனுசரிக்கப்பட்டது.அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அக்கல்லூரி முதல்வர் ஜோ.டோமினிக் அமல்ராஜ் தலைமை வகித்து, சமூக நீதிநாள் உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ,மாணவியர்கள் என அனைவரும் உறுமொழியை எடுத்துக் கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வெ.கருணாகரன், மேரி வைலட் கிருஸ்டி ஆகியோர் செய்திருந்தனர்.இதே போல் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரியில், முதல்வர் ரமேஷ் தலைமையில் அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com