search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிய கோப்பை கிரிக்கெட்"

    • இது ஓரளவு நல்ல அணியாகும்.
    • என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன்.

    ஆசிய கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக ஷிவம் துபேவை அணியில் சேர்த்திருக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இது ஓரளவு நல்ல அணியாகும். என்னை பொறுத்த வரை இது நன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியாகவே பார்க்கிறேன். ஆனால் இதில் ஒரு லெக் ஸ்பின்னர் இருந்திருக்க வேண்டும்.

    ஏனெனில் தற்சமயத்தில் இது அதிக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ள அணியாக தெரிகிறது. எனவே அதில் நீங்கள் ரவி பிஷ்னோய் அல்லது சஹாலை தேர்வு செய்திருக்கலாம். தற்போது பிரசித் கிருஷ்ணா இருக்கும் பார்முக்கு நீங்கள் முகமது ஷமியை வெளியேற்றி விட்டு ஏதேனும் ஒரு லெக் ஸ்பின்னரை தேர்வு செய்திருக்கலாம்.

    மேலும், அதே போல ஷிவம் துபே இருக்கும் பார்முக்கு அவரையும் நீங்கள் கணக்கில் எடுத்திருக்கலாம். ஏனெனில் நீங்கள் ஏதோ ஒரு வகையில் ஹர்திக் பாண்டியாவுக்கு பேக்-அப் வீரரை வைத்திருக்க வேண்டும். தற்போதுள்ள ஷர்துல் தாக்கூர் ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த வகையிலும் பேக்-அப் வீரராக இருக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.
    • இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.

    ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த பிறகு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் நிருபர்களிடம் கூறுகையில், 'லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய வீரர். அவர் ஆசிய கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்துக்கு முன்பே முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறோம். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். இதில் லோகேஷ் ராகுலுக்கு புதிதாக ஏற்பட்டு இருக்கும் காயம் சிறிய பின்னடைவு தான். காயம் சரியாகி விடும் என்று நம்புகிறோம். அவர் மிகவும் முக்கியமான வீரர். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 1½ மாதம் இருக்கிறது. அதற்கு முன்பாக ராகுல், ஸ்ரேயாஸ்க்கு போதுமான அளவுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். இதேபோல் இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளார். இந்த தருணத்தில் இந்த 3 வீரர்களுக்கு தான் தொடக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க முடியும். அணியின் கலவையை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் அளிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹலை விட அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால் முன்னுரிமை அளிக்கப்பட்டது' என்றார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'இந்த அணியில் உள்ள எல்லோரும் எந்த வரிசையிலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அது தான் அணிக்கு நல்லது. எனக்கு குறிப்பிட்ட வரிசை தான் சவுகரியமாக இருக்கும் என்று யாரும் சொல்லக்கூடாது. அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும். ஒரே நாள் இரவில் எந்தவொரு பேட்ஸ்மேனின் வரிசையும் மாற்றம் செய்யப்படுவது கிடையாது.

    அணி தேர்வில் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. 17 பேரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் அளிக்க முடியவில்லை. அவரை சேர்க்க வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்க வேண்டியது வரும். அடுத்த 2 மாதங்களில் நடக்கும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 8-வது அல்லது 9-வது வரிசையில் ஆடும் பவுலரும் கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். சில வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    அணியில் யாருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு யுஸ்வேந்திர சாஹல் தேவைப்பட்டால், அவரை எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம், அஸ்வின், வாஷிங்டன் விஷயத்திலும் இது பொருந்தும்' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார்.
    • ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை நடக்கவுள்ளது.

    இந்நிலையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் தேர்வுக் குழு அஜித் அகர்கர், தேர்வுக் குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார். ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். வழக்கம் போல சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை

    ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ்.பிரதிஷ் கிருஷ்ணா.

    ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்

    இதே அணி தான் உலககோப்பைத் தொடருக்கும் பயணம் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
    • வங்காள தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயிம் தீ மிதித்து வேண்டிக் கொண்டுள்ளார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான ஆசிய அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் மற்றும் உலக கோப்பை போட்டிகளுக்கு அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சி பெற்று வரும் நிலையில் வங்காள தேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் முகமது நயிம் தனது பயிற்சியை வேறு நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

    அவர் வங்காளதேச அணி வெற்றி பெற தீ மிதித்து வேண்டி கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 



    • பாபர் அசாம் தலைமையிலான அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார்.
    • பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இலங்கைக்கு சென்று அங்கு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து 30-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கிறது. இவ்விரு தொடருக்கான பாகிஸ்தான் அணியை புதிய தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் தேர்வு செய்து நேற்று அறிவித்தார்.

    பாபர் அசாம் தலைமையிலான அந்த அணியில் ஷான் மசூத் நீக்கப்பட்டுள்ளார். பகீம் அஷ்ரப் இரு ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணி வருமாறு:- பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான், அஹா சல்மான், இப்திகர் அகமது, முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், தயாப் தாஹிர், சாத் ஷகீல், ஷதப் கான் (துணை கேப்டன்), முகமது நவாஸ், உசாமா மிர், பகீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவுப், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி.

    • கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
    • ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்நிலையில் வங்காளதேச அணி கேப்டன் யார் என்பது குறித்து பிசிபி இன்னும் வரை அறிவிக்கவில்லை. அந்த பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

    இது குறித்து பிசிபி தலைவர் நஸ்முல் கூறியதாவது:-

    இன்னும் சில நாட்களில் அணியை அறிவிப்போம். கேப்டனையும் அறிவிப்போம் என்றார். மேலும் ஷகிப்பை ஒருநாள் கேப்டனாக தேர்ந்தெடுப்பது எளிதான முடிவு என்றும் ஷகிப்பின் இறுதி முடிவுக்காக பிசிபி காத்திருக்கும் என்றும் கூறினார்.

    • இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது.
    • இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தியின் பரிந்துரைப்படி இந்த போட்டி தற்போது இரு நாடுகளில் நடத்தப்படுகிறது.

    ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடத்தப்படுகிறது.

    இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ள ஜாகா அஷ்ரப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது. எனக்கும் இது பிடிக்கவில்லை.

    ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் பாகிஸ்தானிடம் இருப்பதால் போட்டி முழுவதையும் பாகிஸ்தானிலேயே நடத்தும் வகையில் இன்னும் அதிக முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். அதுவும் இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.

    ஆனால் ஆசிய கோப்பை போட்டி குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டதால் இனி அதை பின்பற்றிதான் ஆக வேண்டும். அதற்கு இடையூறு செய்ய மாட்டேன்' என்றார்.

    • ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்கும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
    • ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றனர்.

    பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது. இதையடுத்து இந்தியாவுடனான போட்டிகளை பொதுவான இடத்திலும், மற்ற நாடுகளின் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தவும் பாகிஸ்தான் பரிந்துரை செய்திருந்தது.

    அதன்படி ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ளன. 4 லீக் போட்டிகள் பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது.

    • ஆசிய கோப்பையை பொதுவான இடமான இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் தான் நடைபெறும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் இலங்கையில் நடைபெறுவதை அந்த நாடு ஏற்றுக் கொள்ளவில்லை.

    கராச்சி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தப் போட்டியை பாகிஸ்தானில் நடத்தினால் பங்கேற்க மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்தது.

    இதை தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இதைதொடர்ந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர்.

    ஆசிய கோப்பையை பொதுவான இடமான இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பையை இலங்கையில் நடத்துவது என்று ஆசிய கவுன்சில் முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியானது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் தான் நடைபெறும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் இலங்கையில் நடைபெறுவதை அந்த நாடு ஏற்றுக் கொள்ளவில்லை.

    இதை தொடர்ந்து ஆசிய கோப்பையை புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜிம் சேதி சந்தித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்.

    • பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் ஆசிய கிரிக்கெட் தலைவருமான ஜெய்ஷா தெரிவித்தார்.
    • இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    துபாய்:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. 6 அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடர் ஒருநாள் போட்டி முறையில் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளரும் ஆசிய கிரிக்கெட் தலைவருமான ஜெய்ஷா தெரிவித்தார். ஆசிய கோப்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டியை நடத்தாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. சில நாட்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே கூட்டம் நடந்தது. இதில் ஆசிய கோப்பை போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா மோதும் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தாமல் பொதுவான இடத்தில் நடத்துவதற்கான யோசனை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்தவும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, இங்கிலாந்து, வங்காள தேசம், ஓமன் ஆகியவற்றில் ஏதாவது நாட்டில் இந்தியா- மோதும் போட்டிகள் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. பொதுவான இடம் பற்றிய முடிவு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த ஆட்டமும் பொதுவான இடத்திலேயே நடத்தப்படும். இது தொடர்பாக இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விரைவில் நடைபெற உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து, இந்தியா மோதும் போட்டிக்கான பொதுவான இடம் குறித்து தேர்ந்தெடுக்கப்படலாம்.

    • பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என பிசிசிஐ தெரிவித்தது.
    • நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

    பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்திருந்த போது இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் அணியை மிரட்டினார் என ஷாஹித் அப்ரிடி சுட்டிக் காட்டியுள்ளார்.

    ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டி இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற வேண்டுமென விரும்புகிறது.

    ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஷாஹித் அப்ரிடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சில வருடங்களுக்கு முன்பு இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியை இந்தியர் ஒருவர் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். ஆனாலும் நாங்கள் இந்தியா சென்று விளையாடினோம். மேலும், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடிவு செய்தால், அவர்கள் மீது பாகிஸ்தான் மிகுந்த கவனம் செலுத்தும் என உறுதியளிக்கிறேன்.

    நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இதற்கு முன், மும்பையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எங்களை மிரட்டினார். அதை எங்கள் அரசு பொறுப்பாக ஏற்று பாகிஸ்தான் அணி இந்தியா சென்றது. எனவே மிரட்டல்கள் எங்கள் உறவை சிதைக்கக்கூடாது.

    இந்தியா ஆசிய கோப்பைக்கு வர சம்மதித்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இது போர்கள் மற்றும் சண்டைகளின் தலைமுறை அல்ல. உறவுகள் நன்றாக இருக்க வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம்.

    நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது நினைவிருக்கிறது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள அழகான உறவு.

    என அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    • ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்துள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கூறியது.

    இவ்விவகாரம் தொடர்பாக நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தில் முடிவு எதுவும் செய்யப்படவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

    ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணி மோதும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த போட்டியையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இடம் மாற்றம் குறித்து அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×