என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பையை புறக்கணிப்போம்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்
    X

    ஆசிய கோப்பையை புறக்கணிப்போம்- பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

    • ஆசிய கோப்பையை பொதுவான இடமான இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் தான் நடைபெறும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் இலங்கையில் நடைபெறுவதை அந்த நாடு ஏற்றுக் கொள்ளவில்லை.

    கராச்சி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தப் போட்டியை பாகிஸ்தானில் நடத்தினால் பங்கேற்க மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்தது.

    இதை தொடர்ந்து இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இதைதொடர்ந்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர்.

    ஆசிய கோப்பையை பொதுவான இடமான இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பையை இலங்கையில் நடத்துவது என்று ஆசிய கவுன்சில் முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியானது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் தான் நடைபெறும் என்று பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால் இலங்கையில் நடைபெறுவதை அந்த நாடு ஏற்றுக் கொள்ளவில்லை.

    இதை தொடர்ந்து ஆசிய கோப்பையை புறக்கணிக்கப்போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜிம் சேதி சந்தித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்.

    Next Story
    ×