search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஆசிய கோப்பை: இந்தியா மோதும் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம்- பாகிஸ்தான் யோசனை
    X

    ஆசிய கோப்பை: இந்தியா மோதும் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம்- பாகிஸ்தான் யோசனை

    • ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுத்துள்ளது. இதனால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கூறியது.

    இவ்விவகாரம் தொடர்பாக நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டத்தில் முடிவு எதுவும் செய்யப்படவில்லை. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.

    ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக உள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணி மோதும் போட்டிகளை மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் அந்த போட்டியையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இடம் மாற்றம் குறித்து அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×