search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலுவலகம்"

    • முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், தனித்தனி கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது.
    • தரை தளத்தில் 9 கடைகள், பயண அலுவலகம் மற்றும் ஆண், பெண் கழிவறைகள் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 41 லட்சம் மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து விட்டன.

    இந்த நிலையில் இன்று மதியம் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேரில் சென்று ஆம்னி பஸ் நிலையத்தை பார்வை யிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-தஞ்சையில் ஆம்னி பஸ்கள் இதற்கு முன்னர் பழைய பஸ் நிலையம் அருகே ஆங்காங்கே நின்று கொண்டிருந்தது. இதனால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

    இதனை ஒழுங்குப்படுத்தி ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பஸ் நிலையம் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கி முடிவடைந்து விட்டன.

    5400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பஸ் நிலையத்தில் 26 பஸ்களை நிறுத்தி வைக்கலாம். தரை தளத்தில் 9 கடைகள், பயண அலுவலகம் மற்றும் ஆண், பெண் கழிவறைகள் உள்ளன.

    முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், தனித்தனி கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது. நான்கு சக்கர இலகு ரக வாகனங்கள், தானியங்கி மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என முன்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சுற்றி வர தார் சாலையும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆம்னி பஸ் நிலையத்தால் பயணிகள் மிகவும் பயனடைவர். விரைவில் ஆம்னி பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது போது துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், 51-வது வார்டு தி.மு.க. செயலாளர் ராஜகுமார், மாவட்ட பிரதிநிதி உதேக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்தஞ்சையில் ஆம்னி பஸ் நிலையத்தை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அருகில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் உள்ளனர்.

    • இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அரும நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் அருமநல்லூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கும் சேலம் கருப்பூரை சேர்ந்த சக்தி (வயது 34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது கணவருக்கு வேறு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் என்னையும், என் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதைத்தொடர்ந்து அவரும் சேலத்தை சேர்ந்த சுகன்யா (34) என்ற பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டது. அவருடன் தற்பொழுது குடும்பம் நடத்தி வருகிறார். தற்பொழுது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

    இது தொடர்பாக நாகர்கோ வில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி நிறுவனத்தலைவர் நரையூர் ஏ.ஆர்.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பகுஜன் சமாஜ் கட்சி நகர தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மக்கள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்டம் மற்றும் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு சேர்க்கும் தமிழக அரசின் முடிவை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி நிறுவனத தலைவர் நரையூர் ஏ.ஆர்.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பொய் சொல்லல சுபாஷ், இந்திய குடியரசு கட்சி பொருளாளர் சேகர், சமத்துவ மக்கள் விடுதலைப் கட்சி தலைவர் தீபன், விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் பகுஜன் சமாஜ் கட்சி பாண்டியன், பஞ்சு வர்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சி நகர தலைவர் அய்யப்பன நன்றி கூறினார்.

    • ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
    • முடிவில் ஊராட்சி செயலர் சரண்ராஜ் நன்றி கூறினார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரை ஊராட்சியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.

    அரசு தலைமை கொறடா கோவி.செழியன், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினைரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிரெத்தினம் வடக்கு ஒன்றிய செயலாளர் முரசு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஒன்றிய பெருந்தலைவர் வைஜெயந்தி மாலா உட்பட கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஊராட்சி செயலர் சரண்ராஜ் நன்றி கூறினார்.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    சேலம்:

    சமூகவிரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ், முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் செல்வம் மாவட்ட பொருளாளர் ஆனந்த் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • கூடுதல் மாவட்டக்கல்வி அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்
    • ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்தனர்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    கடந்த காலங்களில் பள்ளி கல்வித்துறையில் இடைநிலைக்கல்விக்கு ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி என கல்வி மாவட்ட அலுவலகங்களும், தொடக்கக்கல்விக்கு ராமநாதபுரம் முழுவதும் ஒரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவல கமும் செயல்பட்டு வந்தன.

    இவைகளை முழுமையாக கண்காணிக்க மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலகம் செயல் பட்டு வந்தது.

    கடந்த ஆட்சியில், தொடக்கக்கல்வித்துறை யில் உள்ள பள்ளிகளை கண்காணித்து ஆய்வு செய்து வந்த மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தை ரத்து செய்து விட்டு, மாவட்ட நிர்வாகத் தில் தனித்தனியாக இயங்கி வந்த பள்ளிக்கல்வி (இடை நிலைக்கல்வி)பள்ளிகள் மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் உள்ள பள்ளி களை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்து, 2 அலகுகளையும் மாவட்டக் கல்வி அலுவலர் நிர்வாகம் செய்வார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக கல்வித்துறை பல குளறுபடிகளுடன் இயங்கி வந்தது.

    பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் உள்ள பள்ளிகளை ஒரே ஆளுகையின்கீழ் கொண்டு வந்ததால் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்வதில் சிரமத்தை எதிர்க்கொண்டனர். மேலும் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பலன்கள் மிகவும் தாமதமாகவே கிடைத்தன. மாணவர்க ளுக்கு வழங்கவேண்டிய அரசு நலத்திட்டங்களில் மிகுந்த தொய்வும் ஏற் பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 200 க்கும் மேற்பட்ட உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின் றன. சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரி யர்கள் பணியாற்றி வருகி றார்கள்.

    அனைத்து பள்ளிக ளையும் ஆய்வு செய்ய ராமநாதபுரத்தை மையமாக வைத்து அரசாணை 151 ன்படி ஓரே ஒரு மாவட்டக் கல்வி அலுவலகம் மட்டுமே ஏற்படுத்தப் பட்டுள்ளதால் நிர்வாகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    கூடுதல் மாவட்ட கல்வி அலுவலகம்

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்பு இருந்தது போல் இடை நிலைக்கல்விக்கு பரமக்கு டியை மையமாக வைத்து கூடுதல் மாவட்ட க்கல்வி அலுவலகத்தை ஏற்படுத்தி வருகிற கல்வி ஆண்டு முதல் செயல்பட ஏதுவாக கூடுதல் மாவட்ட கல்வி அலுவ லகத்தை உருவாக்கித் தருமாறு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இச்சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    நாமக்கல்:

    கொல்லிமலையில் உள்ள, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், கொல்லிமலை சேளூர்நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில், குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    தொடர்ந்து சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் தங்களது ரேசன் கார்டுகளை திருப்பி அளிக்க முற்பட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கொல்லிமலைப் பகுதியில் சாலைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையேற்று மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர். 

    • குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
    • மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்–ப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அவினாசி, பல்லடம், உடுமலை, தாராபுரம், காங்கயம் ஆகிய 5 உட்கோட்டங்களிலும் காவல்துறை மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம் புதன்கிழமைதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து குற்ற வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உடனிருந்தார். இந்த மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாமில் 22 மனுக்கள் மற்றும் உட்கோட்டங்களில் நடத்தப்பட்ட முகாமில் 15 மனுக்கள் என மொத்தம் 37 மனுக்கள் விசாரிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி அமைய அனைவரும் அணிதிரள்வோம்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) திருப்பூர் மாவட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் தலைமை யேற்று ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    மாவட்ட அவைத்தலைவர் வெங்கிடுபதி, மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர் ஜவகர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தளி மாரிமுத்து, நகர துணை செயலாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மாவட்ட செயலாளர் டி.டி.காமராஜ் கூறுகையில் "முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சி தலைவி ஜெயலலிதா காட்டிய வழியில் அ.தி.மு.க.வை ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான முறையில் வழிநடத்தி செல்வோம். மீண்டும்அ.தி.மு.க.ஆட்சி அமைய அனைவரும் அணிதிரள்வோம்.இதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். விழாவில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சுஜித்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், நகர பொருளாளர் நாகேஸ்வரன், தாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தாராபுரம் மேற்கு செயலாளர் மனோகர், நகர அம்மா பேரவை மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அலுவலகத்திலுள்ள கோப்புகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் உள்ள சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு நாகப்பட்டினம் சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு இணை கமிஷனர் செந்தில் நாதன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக துணை சூப்பிரண்டு இன்னாசி ஆரோக்கியராஜ் அனை வரையும்வரவேற்றார்.

    கட்டிடத்தை திருச்சி மண்டல சுங்க இலாகா ஆணையர் அனில் திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து சுங்க இலாகா ஆணையர் அனில் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    பின்னர், அலுவலகம் உள்ளே சென்று அங்கிருந்தகோப்பு களை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

    இதில் சுங்க இலாகா அதிகாரிகள், அலுவலர்கள், பணியா ளர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காணொலி வாயிலாக மண்டல அலுவலகத்தை துவக்கி வைக்கிறார்.
    • குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனாளி, தொழிலாளர் பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம் பகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம் இயங்குகிறது. தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் திருப்பூரில் பி.எப்., மண்டல அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.தற்போது திருப்பூர் - பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரே, சிறிய வாடகை கட்டிடத்தில் மாவட்ட பி.எப்., அலுவலகம் செயல்ப டுகிறது. மண்டல அலுவலக த்தை செயல்படுத்து வதற்காக வேறு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து பி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:-

    தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருப்பூரில் மண்டல பி.எப்., அலுவலகம் அமைக்க ப்படுகிறது. தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளை திருப்பூர் மண்டலத்துடன் சேர்க்க கருத்துரு அனுப்பப்பட்டிருந்தது. வரும் 27ல், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காணொலி வாயிலாக மண்டல அலுவலகத்தை துவக்கி வைக்கிறார். அப்போது, மண்டலத்துடன் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள் விபரம் வெளியிடப்படும்.மண்டல அலுவலகம் அமைவதன் வாயிலாக, தொழில் நிறுவனங்களின் கணக்குகள் திருப்பூரிலேயே நிர்வகிக்கப்படும். கடன் வழங்கல், ஓய்வூதியம் வழங்கல் பணிகளும் இங்கிருந்தே மேற்கொ ள்ளப்படும்.குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனாளி. தொழிலாளர் பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு உத்தரவு
    • உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டம் குறையும்

    திருச்சி,

    திருச்சி மேற்கு தாலுகாவில் திருச்சி கோர்ட் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் இணை எண் 1 மற்றும் 3, உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் இணை எண் 1 மற்றும் உறையூர் சார்பதிவகங்களில் அதிக அளவில் ஆவணங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனால், இங்கு ஆவணங்களை பதிவு செய்வதால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. மக்கள் எளிதாக ஆவண பதிவு மேற்கொள்ளும் வகையில் இந்த அலுவலகங்களில் இருந்து சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக தில்லை நகரில் சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.இந்நிலையில் தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை, திருச்சி பதிவி மாவட்டத்தில் தில்லைநகர் பகுதியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் தொடங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக நிர்வாக அனுமதி, வழங்கி அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்து அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி அரசாணை பிறப்பித்து உள்ளார்.புதிதாக அமைக்கப்படும் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு சார் பதிவாளர், 2 உதவியாளர் மற்றும் தலா ஒரு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவற்றோடு புதிய அலுவலகத்திற்கு வாடகை, அலுவலக தளவாடப் பொருட்கள், கணினி சாதனங்கள் வாங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோர்ட் அருகில் உள்ள இணை எண் 1 மற்றும் உறையூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இனி மக்கள் கூட்டம் சற்று குறையும் .


    ×