search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பள்ளி"

    • அரசு பள்ளியில் அறிவியல் நிகழ்ச்சி நடந்தது.
    • முடிவில் ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை கிழக்கு ஒன்றியம் கருப்பாயூரணி எல்.கே.பி.நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் மஞ்சள் பை அறக்கட்டளை சார்பில் 'அறிவியல் களியாட்டம்' என்ற நிகழ்வில் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டுதல் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ராஜ வடிவேல் வரவேற்றார். சென்னையில் இருந்து அறிவியல் ஆசான் அறிவரசன் வருகை புரிந்து செயற்கை ரத்தம் உருவாக்குதல், சினிமாக்களில் புகை உருவாக்கும் விதம், கார்களில் ஏர் பலூன் செயல்படும் விதம், நெருப்பு உருவாதல், பரப்பை பொறுத்து அழுத்தம் எவ்வாறு மாறுகிறது என்ற சோதனை, ஒளி உருவாதல், நுரை உருவாக்கும் சோதனை, புகை உருவாதல் போன்ற பல வகையான சோதனைகளை செய்து காண்பித்து அறிவியல் மனப்பான்மை குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் விஞ்ஞானி ஆக்கம் சங்கர், மஞ்சப்பை அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன், கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகமது கனி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை அருவகம் நன்றி கூறினார்.

    • அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்படி மாணவ-மாணவிகளின் பசியை போக்கும் வகையில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தினமும் மதியம் முட்டை கட்டாயமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகவும் இருந்து வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வாரந்தோறும் 92 ஆயிரம் முட்டைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மொடக்குறிச்சி தாலுகாவில் 126 பள்ளிகளும், கொடுமுடி தாலுகாவில் 90 பள்ளிகளும் வாரந்தோறும் முட்டை பெறுகின்றன.

    இதில் பல பள்ளிகளில் உள்ள மதிய உணவு மையங்களில் உள்ள சமையலர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கடந்த புதன்கிழமை மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகி போய் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பிரச்சனையை எடுத்துக் கூறினர். அதனைத் தொடர்ந்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டன.

    இதனால் கடந்த 3 நாட்களாக மாணவ-மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை. மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள 27 பள்ளிகளில் ஆயிரத்து 348 முட்டைகளும், கொடுமுடி தாலுகாவில் 13 பள்ளிகளில் 767 முட்டைகளும் அழுகிய நிலையில் காணப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. மேலும் இச்சம்பவம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அவரது உத்தரவின் பேரில் முட்டைகளின் மாதிரிகளை துறையினர் சோதனைக்காக எடுத்துச் சென்றனர். பின்னர் முட்டையை சப்ளை செய்த நிறுவனத்திடம் நல்ல முட்டைகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் தலைமை தாங்கினார்.
    • பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார் உட்பட ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், லக்கமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய ஒற்றுமை நாள் விழா நடந்தது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் தலைமை தாங்கினார். மாணவ- மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். உறுதி மொழியின் போது இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேல் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேண நான் இந்த உறுதி மொழியை ஏற்கிறேன், எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் பட்டதாரி ஆசிரியர் அசோக்குமார் உட்பட ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பந்தயத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி வந்தனர்.
    • ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    களியக்காவிளை :

    களியக்காவிளை அருகே மேக்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு குறுக்கு நாட்டு ஓட்டப்பந்தயம் நடந்தது. முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்களுக்கு தனித்தனியாக நடந்த இந்த பந்தயத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடி வந்தனர். முதுநிலை மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தொடங்கி வைத்தார். முதுநிலை மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தை குழித்துறை ஜே.சி.ஐ. தலைவர் பெகின் தொடங்கி வைத்தார்.

    இளநிலை மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை வன்னியூர் ஊராட்சி தலைவி பாப்பா தொடங்கி வைத்தார். இளநிலை மாணவிகளுக்கான ஓட்டப்பந்தயத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெஜி தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜ் மாணவர்களை ஒருங்கிணைத்து ஓட்டப்பந்தய ஏற்பாடுகளை செய்திருந்தார். இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் எஸ்.எம்.சி. தலைவர் மினி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • அரசு பள்ளியில் படித்து பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • பரிசு தொகை வழங்கி பாராட்டினர்.

    மேலூர்

    மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் சார்பாக மேலூர் தாலுகா அரசு பள்ளியில் படித்த 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அரசு பொதுத் தேர்வு எழுதி மேலூர் தாலுகா அளவில் முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மேலூர் டைமன்ட் ஜூப்லி கிளப் வளாகத்தில் நடைபெற்றது. 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர் வில் அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மகள் நிரஞ்சனா மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 487 மதிப்பெண் பெற்று முதலி டம் பெற்றார். அவருக்கு ரூ. 25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகள் சாருமதி மேலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்று 478 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிச்சாமி மகள் பிரிய தர்ஷினி தனியாமங் கலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் பயின்று 473 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கினர். 12-ம் வகுப்பு பொதுத் தேர் வில் வெள்ளலூர் கிராமத் தை சேர்ந்த சேதுராஜன் மகள் முத்து மீனாட்சி மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று 558 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 25,000 பரிசு தொகையை வழங்கி னர்.

    கருங்காலக்குடியை சேர்ந்த காதர் பாட்சா மகன் முகமது பாரூக் கருங்காலக் குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பயின்று 557 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 20 ஆயிரம் பரிசு தொகையும், அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த திருப் பதி மகள் மகாலட்சுமி உறங் கான்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் பயின்று 556 மதிப்பெண் பெற்றதற் காக ரூ. 15 ஆயிரம் பரிசு தொகை வழங்கி பாராட்டி னர்.

    இந்த நிகழ்ச்சியில் டை மண்ட் ஜூப்லி கிளப் தலை வர் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேச பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவி, சேது பாண்டி, மகாராஜன், இப்ரா ஹிம் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.

    • ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர்.
    • விசாரிக்கப்படும் என கல்விஅலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பெரும்பாறை அருகே உள்ள பண்ணைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவர்கள் 2 கோஷ்டியாக பிரிந்து தகராறு செய்தனர். இதில் இருதரப்பு மாணவர்களும் மதுபோதையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பள்ளி வளாகத்திலேயே சுற்றி திரிந்தனர்.

    இதைபார்த்த ஒரு ஆசிரியர் மாணவர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் ஆசிரியரையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதுகுறித்து ஆசிரியர் தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என ஆசிரியரிடம் முறையிட்டதால் அவர் புகாரை வாபஸ் பெற்றார்.

    இருப்பினும் போலீசார் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களை எச்சரித்து விடுவித்தனர். இதுகுறித்து விசாரிக்கப்படும் என கல்விஅலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாளை தொடக்கம்
    • 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைச்செயல்பாடுகள், உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர கூடிய வகையில் கலைத்திரு விழா போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பா டுகள் வழி வகுக்கிறது.

    2023-24-ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் 10.10.2023 முதல் 14.10.2023 வரையில் நடைபெற்றது. வட்டார அளவில் இப் போட்டிகள் கடந்த 18.10.2023 தொடங்கியது. மாவட்ட அளவில் கலை திருவிழா போட்டிகள் நாளை (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையிலும், மாநில அளவில் 21.11.2023 முதல் 24.11.2023 வரையிலும் நடைபெற உள்ளது. கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாகர்கோவில் அனந்த நாடார்குடி புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடை பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடக்க விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

    வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ ருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்விருதுகள் 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாண வர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.
    • விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.

    போரூர்:

    விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகளின் கல்வியை இந்த நாளில் தொடங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் "வித்யாரம்பம்" நிகழ்ச்சி இன்று பல்வேறு இடங்களில் விமரிசையாக நடைபெற்றது.

    கோடம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக குவிந்து இருந்தனர். முன்னதாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இருந்தது. 2 ½ வயது முதல் 3½வயது வரை உள்ள மழலை குழந்தைககள் பெற்றோரின் மடியில் அமரவைக்கப்பட்டு நெல் மற்றும் அரிசியில் "அ" எழுத்தை எழுதி கல்வியை தொடங்கினர். மேலும் குழந்தைகளின் நாக்கில் தங்க மோதிரத்தாலும் எழுதப்பட்டது. வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக அய்யப்பன் கோவிலில் ஏராளமானோர் திரண்டு இருந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    வடபழனி கோவிலில் காலை 7.30மணிக்கு தொடங்கிய வித்யாரம்பம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்றனர். விஜயதசமியையொட்டி இன்று அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது.

    திருவள்ளூர் ஜெயா நகரில் உள்ள ஸ்ரீ மகாவல்லப கணபதி கோவிலில் வித்யா ரம்பம் நிகழ்ச்சிக்கு அதிகாலை முதலே ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். அரிசியில் தங்களது குழந்தைகளின் கையை பிடித்து அ,ஆ,இ,ஈ., போன்ற தமிழ் எழுத்துகளை எழுத வைத்தனர்.

    இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் மற்றும் தனியார் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது

    • கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது
    • ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 740 மாண வர்கள் பயின்று வருகின்ற னர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை மாணவர்கள் 2 பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகினர்.

    இந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர்.

    தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் உள்ளிட்டோர் முன்னி லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    • உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு
    • வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி

    வாழப்பாடி:

    பள்ளி குழந்தைகளிடையே சரிவிகித ஊட்டச்சத்து உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.

    பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா தேவி, மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து சரிவிகித சத்துணவு, சுகாதாரம் மற்றும் ரத்த சோகை தவிர்ப்பு இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர். நிறைவாக, அங்கன்வாடி பணியாளர் வசந்தி நன்றி கூறினார்.

    • முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர்.
    • பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அரசினர் மேல்நிலைப்பள்ளிமில் 1998-2000 ல் பயின்ற பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர். பின்னர் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பள்ளி காலங்களில் நடந்த சுவாரசியங்களை பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் ஆண்டுதோறும் சந்திப்பு நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அனைவரும் பகிர்ந்து கொள்வதாகவும் மாணவர்கள் தனது நண்பர்களை 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதில் முன்னாள் தலைமை ஆசிரியர் இலட்சுமணபெருமாள், மோகனசுந்தரம், இளவரசன், தேவகி, தமிழரசி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    மாணவர்கள் முன்னதாக தாங்கள் பயின்ற பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.

    • உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அரசு உதவிபெறும் பள்ளி அலுவலர்கள் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலாளர் அருள் டெல்லஸ், மாநில தலைவர் ஜான்சன், மாநில பொருளாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அரசாணை 238-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உதவியாளர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ×