search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கான"

    • நாளை தொடக்கம்
    • 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைச்செயல்பாடுகள், உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர கூடிய வகையில் கலைத்திரு விழா போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பா டுகள் வழி வகுக்கிறது.

    2023-24-ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் 10.10.2023 முதல் 14.10.2023 வரையில் நடைபெற்றது. வட்டார அளவில் இப் போட்டிகள் கடந்த 18.10.2023 தொடங்கியது. மாவட்ட அளவில் கலை திருவிழா போட்டிகள் நாளை (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையிலும், மாநில அளவில் 21.11.2023 முதல் 24.11.2023 வரையிலும் நடைபெற உள்ளது. கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாகர்கோவில் அனந்த நாடார்குடி புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடை பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடக்க விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

    வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ ருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்விருதுகள் 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாண வர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.
    • இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஒன்றிய அரசின் நிதி உதவியில் 2005-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இனிவரும் ஆண்டுகளில் இத்திட்டத்தை மாநில அரசு ஏற்று நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பள்ளியில் இடைநின்ற மாணவ, மாணவிகளுக்கான இச்சிறப்பு பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயின்றவர்கள் முறைசார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு 10-ம்வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தொடர்கல்வி பயில்வதை இத்திட்ட பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.

    தொடர்ச்சியாக தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்றவற்றில் உயர்கல்வி பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.500 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இத்தொகை இருமடங்காக உயர்த்தப்பட்டு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமாக நடப்பாண்டில் உயர்த்தி மாநில அரசின் தொழிலாளர் மற்றும் திறன்வளர்ப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

    ஆகவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உயர்கல்வி ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

    தற்போது பயிலும் கல்லூரி முதல்வரின் அத்தாட்சி சான்று, 10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், வங்கிக்கணக்குப்புத்தக நகல், 2 புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை திட்ட இயக்குநர், குழந்தைத் தொழிலாளர் திட்டம் , 6-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு என்னும் முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் வழியாக விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • ஈரோடு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான வரும் 15 மற்றும் 17-ந் தேதி பேச்சு போட்டிகள் நடக்கிறது.
    • மாணவர்கள் பேச்சு போட்டி களுக்கான விண்ணப்ப படிவங்களை பள்ளித் தலைமையாசிரியர்- கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

    ஈரோடு:

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க பட உள்ளன.

    இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான வரும் 15 மற்றும் 17-ந் தேதி பேச்சு போட்டிகள் நடக்கிறது.

    பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மதியம் 3 மணிக்கும் நடக்கிறது.

    மாணவர்கள் பேச்சு போட்டி களுக்கான விண்ணப்ப படிவங்களை பள்ளித் தலைமையாசிரியர்- கல்லூரி முதல்வரிடம் இருந்து பெற்று கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பங்களை முதல்வர்- தலைமை யாசிரியர் கையெழுத்து பெற்று, போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும்.

    மாவட்ட அளவில் பள்ளி- கல்லூரி போட்டி யில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு முதல் பரிசாக ரூ.5ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், வழங்கப்படும்.

    மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடந்த பேச்சு போட்டியில் மட்டும் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு ரூ.2 ஆயிரம சிறப்புப் பரிசுத் தொகை வழங்க ப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள்ளார்.

    • தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
    • ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    பேரறிஞர் அண்ணா அவர்களால் தாய்த்தமிழ் நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ம் நாள் இனிய தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

    இதன்படி வருகின்ற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி (புதன்கிழமை) கலைமகள் கல்வி நிலையத்தில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

    போட்டிக்கள் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் தந்தைபெரியார், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நடைெபறுகிறது.

    இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×