search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் சந்திப்பு"

    • முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர்.
    • பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அரசினர் மேல்நிலைப்பள்ளிமில் 1998-2000 ல் பயின்ற பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவம் பற்றி விளக்கி பேசினர். பின்னர் ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பள்ளி காலங்களில் நடந்த சுவாரசியங்களை பேசி சிரித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் ஆண்டுதோறும் சந்திப்பு நடைபெறுவதாகவும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் அனைவரும் பகிர்ந்து கொள்வதாகவும் மாணவர்கள் தனது நண்பர்களை 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதில் முன்னாள் தலைமை ஆசிரியர் இலட்சுமணபெருமாள், மோகனசுந்தரம், இளவரசன், தேவகி, தமிழரசி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    மாணவர்கள் முன்னதாக தாங்கள் பயின்ற பள்ளிக்கு பழுதான மின்சார ஒயர்களை சரிசெய்தும் 10 மின்விசிறிகள் மற்றும் டூயுப் லைட் வழங்கினார்கள்.

    • சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்
    • ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் கடந்த 1980 முதல் 1989 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரெயில்வே இருபாலர் தமிழ் வழி உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

    34 வருடங்களுக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட நபர்கள் அனைவரும் சந்தித்து தங்கள் சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்.

    ஒவ்வொரு வருடமும் அனைவரும் சந்தித்து அனைவரின் சந்தோஷ- துக்கங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்தனர். இதனை அடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.

    விளையாட்டுகளை விளையாடி மலரும் நினைவுகளால் சந்தோஷத்தை கழித்து விடைபெற்றுச் சென்றனர்.

    • பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
    • ஆசிரியர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம், லாலாபேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1987-ம் ஆண்டில் 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர்கள் சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 'மலரும் நினைவுகள் நண்பர்கள்' என்ற தலைப்பில் சிப்காட்டில் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    முன்னாள் மாணவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அப்போது பள்ளியில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வி.ஆர்.கல்யாணசுந்தரம், தீனதயாளன், அக்பர், பழனி, கல்யாணி, பிரகாசம், உஷா, ஷீபா ஆகியோர் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசினர்.

    பின்னர் முன்னாள் மாணவ அனைவரும் தங்களின் ஆசிரியர்களின் கால்களை விழுந்து வணங்கி ஆசிபெற்றனர்.

    • பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
    • கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தெரிவித்து சிரித்து மகிழ்ந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1991-93 ம் ஆண்டு வரை படித்த பிளஸ் 1 பிளஸ் 2 பள்ளி மாணவர்கள் சுதந்திர தினத்தை முன்னிட்டு பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் ஒருங்கிணைப்பாளர் ந.சபஸ்டின் தலைமையில் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் சந்தித்து அறிமுகத்துடன் முன்னாள் பள்ளியில் நடைபெற்ற சுவாரசியங்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொண்டு ஆசிரியர்களுடன் மாணவர்களுடன் கடந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை தெரிவித்து சிரித்து மகிழ்ந்தனர். பின்னர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இனிப்பு வழங்கி கேக் வெட்டி கொண்டாடினர். இதில் மாணவர்கள் பாலகிருஷ்ணன், சாமிநாதன் வெங்கடேசன், பாபு, ஜெய்கணேஷ், சீனிவாசன்,செந்தில்குமார், ரகுநாத, சுதாகர்,மணிமாறன்,ரமேஷ்,பாஸ்கர, ரகு ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

    • 973-75ம் ஆண்டு பயிற்சி பெற்றவர்கள்
    • வாருங்கள், சந்திப்போம் என்ற பெயரில் நிகழ்ச்சி

    கண்ணமங்கலம்,

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆற்காட்டில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் கடந்த 1973-75ம்ஆண்டு பயிற்சி பெற்றவர்கள் வாருங்கள், சந்திப்போம் என்ற பெயரில் நிகழ்ச்சி சந்தித்தனர்.

    நிகழ்ச்சியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் (ஓய்வு) குணசேகரன் தலைமை தாங்கினார்.

    காமக்கூர் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். பெரணமல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (ஓய்வு) வையாபுரி வரவேற்று பேசினார்.

    இதில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி பெற்று, தற்போது பணியிலிருப்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு தற்பொழுது குடும்ப நிலவரம் உள்பட பல்வேறு விவரங்கள் குறித்து பலரும் நினைவுகளை பேசினர்.

    முடிவில் படவேடு பள்ளி தலைமை ஆசிரியர் ஓய்வு நன்றி கூறினார்.

    • அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வியல் துறை மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • கடந்த கால பசுமையான நிகழ்வுகளையும் மேலும் தற்போது தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட வியல் துறை மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது இதற்கு கல்லூரி செயலாளர் அருட்சகோதரி ஏசு தங்கம் தலைமை தாங்கினார். முதல்வர் சவரிராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் திருமால் வரவேற்று பேசினார். இதில் கடந்த 1995-1998 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற அனைத்து துறை மாணவர்களும் கலந்து கொண்டு கடந்த கால பசுமையான நிகழ்வுகளையும் மேலும் தற்போது தாங்கள் உயர்ந்த நிலையில் இருப்பதையும் எடுத்துக் கூறினர்.

    இதில் முன்னாள் முதல்வர் சுந்தர மூர்த்தி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் மிக சிறப்பாக செய்தார்.

    • ராஜபாளையம் அன்னப்ப ராஜா பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • கூட்டத்தில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நி லைப்பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம் பள்ளி செயலர் என்.ஆர். கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடைபெற்றது. முதல் நாள் கூட்டத்தை என்.ஏ.ராமச்சந்திர ராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். 1964-ம் ஆண்டில் பள்ளியில் முதன்முதலில் சேர்ந்த மாணவர் முகுந்தராம்ராஜா வரவேற்று பேசினார்.

    தலைமையாசிரியர் ரமேஷ், முன்னாள் மாணவர் சங்க செயலர் சஞ்சய் குமார்ராஜா, என்.ஏ.ராமச்சந்திரராஜா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முனைவர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் மாணவர்களான சேலம் பெரியார் பல்க லைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்து செழியன், ஐதராபாத் அட்வான்ஸ்டு சிஸ்டம் லேபரட்டிரியின் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ராமகுரு, நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீனிவாசன், கோவை அர்ஜூன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் டிரஸ்டி மற்றும் செயலர் சுரேஷ்குமார், மகேந்திரகிரி இஸ்ரோ விஞ்ஞானி மணிகண்டன் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களிடம் சமூக அக்கறைமிக்க வினாக்கள் கேட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.

    கூட்டத்தில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் மகேஸ் நன்றி கூறினார். கூட்ட ஏற்பா டுகளை முன்னாள் மாணவர் சங்கத்தின் தொடர்பு அலுவலர் இளைய பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • காளீஸ்வரி மேலாண்மை கல்லூரியில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை பிரிவில் கோப்பையையும் வென்றன.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி "SKIMT MAGNATE 2023"-ஐ ஏற்பாடு செய்தது. இது மாணவர்கள் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறை யில் பங்கேற்கும் வகையில் கலப்பின முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    கல்லூரிச்செயலர் செல்வராஜன் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல சி.ஐ.ஐ. தலைவரும், பெனின்சுலார் ஏற்றுமதி நிறுவனத்தின் நிர்வா கப்பங்காளருமான ஜெய்சிங்வேர்கர் தொடங்கி வைத்தார்.

    அவர் பேசுகையில், இன்று உலகம் பல நிலைத்தன்மை சிக்கல்களை எதிர்கொள்கிறது. நிலை யற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை, சிக்கலான தன்மை, தெளிவின்மை ஆகியவற்றின் கருத்தை விரிவுப டுத்தினார்.

    பங்கேற்பாளர்கள் மாற்றத்தை தழுவவும், நிச்சயமற்ற தன்மையை கண்காணிக்கவும், தெளிவாக தொடர்பு கொள்ளவும், சிக்கலான தன்மையைக் கடக்கமற்றும் தெளிவற்ற தகவலை புரிந்து கொள்ள சோதனைகளை செய்யவும்அறிவுறுத்தினார்.

    வணிக வினாடி-வினா, வணிகத்திட்டம், சிறந்த மேலாளர், கார்ப்பரேட் நடை, விளம்பரச்செயல், காகிதவிளக்கக்காட்சி மற்றும் சுவரொட்டி தயாரித்தல் ேபான்றவை நடந்தன.

    14 கல்லூரிகளை சேர்ந்த 249 மாணவ-மாணவிகள் பங்கேற்ற இந்த சந்திப்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதுநிலைப் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பை யையும், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி இளங்கலை பிரிவில் கோப்பையையும் வென்றன.

    • கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • தொழில் துறைகளில் முன்னேறியுள்ளதையும், அதற்கு தங்களுடைய தொழிற்கல்வி உதவியதையும் எடுத்துரைத்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடந்த

    1999-2003-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முஹம்மது ஷெரிப் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பலதுறைகளில் சிறந்து விளங்குவதையும், தொழில் துறைகளில் முன்னேறியுள்ளதையும், அதற்கு தங்களுடைய தொழிற்கல்வி உதவியதையும் எடுத்துரைத்தனர்.

    மேலும் நாம் வெற்றியடைய வேண்டுமெனில் ஒரு குறிக்கோளை வகுத்து கொண்டு அதில் வெற்றியடைய வேண்டுமென்ற சிந்தனையுடனும், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடனும் செயல்பட்டால் நாம் எண்ணிய வெற்றியை அடைய முடியும் என்றும் கூறினர். மேலும் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆவண செய்வதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.

    கீழக்கரைமுஹம்மதுசதக்பொறியியல்கல்லூரியின்

    1999-2003-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் முன்னாள் மாணவர்கள் 35 பேர் அவர்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சேக் யூசுப், பாலசுப்பிரமணியன், முன்னாள் மாணவர் அப்துல் பாஷித் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×