search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student meeting"

    • கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
    • தொழில் துறைகளில் முன்னேறியுள்ளதையும், அதற்கு தங்களுடைய தொழிற்கல்வி உதவியதையும் எடுத்துரைத்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடந்த

    1999-2003-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முஹம்மது ஷெரிப் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பலதுறைகளில் சிறந்து விளங்குவதையும், தொழில் துறைகளில் முன்னேறியுள்ளதையும், அதற்கு தங்களுடைய தொழிற்கல்வி உதவியதையும் எடுத்துரைத்தனர்.

    மேலும் நாம் வெற்றியடைய வேண்டுமெனில் ஒரு குறிக்கோளை வகுத்து கொண்டு அதில் வெற்றியடைய வேண்டுமென்ற சிந்தனையுடனும், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடனும் செயல்பட்டால் நாம் எண்ணிய வெற்றியை அடைய முடியும் என்றும் கூறினர். மேலும் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆவண செய்வதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.

    கீழக்கரைமுஹம்மதுசதக்பொறியியல்கல்லூரியின்

    1999-2003-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் முன்னாள் மாணவர்கள் 35 பேர் அவர்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சேக் யூசுப், பாலசுப்பிரமணியன், முன்னாள் மாணவர் அப்துல் பாஷித் ஆகியோர் செய்திருந்தனர்.

    • நண்பர்களை பார்த்து கைகொடுத்து அன்பை வெளிப்படுத்தினர்.
    • நிலையான இடத்தில் இருப்பதற்கு ஆசிரியர்களே காரணம் என நெகிழ்ச்சி

    அரக்கோணம்:

    அரக்கோணம் சிஎஸ்ஐ,தூய அந்திரேயர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 89-92 ஆம் ஆண்டு படித்த பள்ளி மாணவ மாணவிகள் முனீர் அஹமத், செழியன், ராஜேஷ் ஆகியோர் ஒருங்கிணைப்பில் 32 ஆண்டுகளுக்குப்பின் சந்திப்பு நடைபெற்றது.

    இந்த நெகிழ்ச்சியான சந்திப்பில் பிரிந்து சென்ற மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து தங்கள் பள்ளி அனுபவங்களையும் ஆசிரியர்களின் பெருமைகளையும் பாராட்டி பள்ளி பருவ கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் மூலம் 32 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தனது நண்பர்களை பார்த்து கைகொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினர்.

    பழைய ஆசிரிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து அவர்களின் பெருமைகளை பாராட்டி தன் வாழ்நாளில் தாங்கள் ஒரு நிலையான இடத்தில் இருப்பதற்கு ஆசிரியர்களே காரணம் என நெகிழ்ந்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர்.

    ×