search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி
    X

    வாழப்பாடி அரசு பெண்கள் பள்ளியில் நடைபெற்ற அடுப்பில்லா சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்த விழாக்குழுவினர்.

    அரசுப்பள்ளி மாணவிகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி

    • உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு
    • வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி

    வாழப்பாடி:

    பள்ளி குழந்தைகளிடையே சரிவிகித ஊட்டச்சத்து உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.

    பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா தேவி, மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து சரிவிகித சத்துணவு, சுகாதாரம் மற்றும் ரத்த சோகை தவிர்ப்பு இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர். நிறைவாக, அங்கன்வாடி பணியாளர் வசந்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×