search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அளவிலான"

    • கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
    • பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    நாகர்கோவில்:

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 8-வது மேலாண்மை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் மரியவில்லியம் தலைமை தாங்கினார். மாணவி சகாய ரினோஷா வரவேற்றார். விழாவின் அமைப்பு செயலாளர் பேராசிரியை பமிமா விழாவிற்கான அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.

    கல்லூரி பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்தி பேசினார். பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.

    விழாவில் மாணவர்களுக்கான சிறந்த மேலாளர் போட்டி, படத்தொகுப்பு போட்டி, வினாடி-வினா, மவுன மொழி நாடகம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இணை ஒருங்கிணைப்பா ளர் மாணவர் சேக் சித்தா அர்ஷக் நன்றி கூறினார்.

    விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் வணிக மேலாண்மை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான மாநில அளவி லான விளையாட்டு போட்டி
    • சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது

    நாகர்கோவில் : விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள மகளிர் விளையாட்டு விடுதி மாணவி ருத்ரா ஸ்ரீ வட்டு எறிதல் போட்டியில் தங்கப்பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.

    மாணவி கயாஸ்மி உயரம் தாண்டுதலில் வெண்கலப்ப தக்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்றார். மாணவி கயல்விழி ஜனனி 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்க லப்பதக்கம் வென்றுள்ளார். மாணவிகள் ரோஸ்லின், அஸ்மிதா, வசந்தி, கயல்விழி ஜனனி ஆகியோர் 4 x 400 தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்கள். மாநில அள விலான போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவிகளை குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜேஷ் பாராட்டினார்.

    • நாளை தொடக்கம்
    • 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைச்செயல்பாடுகள், உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர கூடிய வகையில் கலைத்திரு விழா போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள இச்செயல்பா டுகள் வழி வகுக்கிறது.

    2023-24-ம் ஆண்டிற்கான கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் 10.10.2023 முதல் 14.10.2023 வரையில் நடைபெற்றது. வட்டார அளவில் இப் போட்டிகள் கடந்த 18.10.2023 தொடங்கியது. மாவட்ட அளவில் கலை திருவிழா போட்டிகள் நாளை (26-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையிலும், மாநில அளவில் 21.11.2023 முதல் 24.11.2023 வரையிலும் நடைபெற உள்ளது. கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு 3 பிரிவுகளில் நடைபெறுகிறது. மாவட்ட அளவிலான போட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நாகர்கோவில் அனந்த நாடார்குடி புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடை பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி தொடக்க விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் கலந்து கொள்கிறார்கள்.

    வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளில் அதிக போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ ருக்கு கலையரசன் விருதும், மாணவிக்கு கலையரசி விருதும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்விருதுகள் 3 பிரிவு களிலும் தனித்தனியே வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநில அளவில் வெற்றி பெறும் மாண வர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
    • மேலாண்மை இயக்குநர் டி.சிங் தலைமை தாங்கினார்.

    மணவாளக்குறிச்சி:

    தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனமும் இணைந்து நெல்லை மண்டலம் மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான 63-வது சுரங்க பாதுகாப்பு வார நிறைவு விழா நாகர்கோவிலில் நடத்தியது. ஐ.ஆர்.இ.எல். நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.சிங் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக சுரங்க பாதுகாப்பு பொது இயக்குநர் பிரபாத் குமார், கவுரவ விருந்தினராக தென்மண்டல சுரங்க பாதுகாப்பு துணை பொது இயக்குநர் தேவ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். நிறுவன ஆலை தலைவர் செல்வராஜன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்க செயலாளர் மற்றும் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்டின் முதுநிலை பொது மேலாளர் (சுரங்கம்) ஜி.ஆர். மகேஷ் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்க அறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்க தலைவர் மற்றும் தி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன முதுநிலை துணைத்தலைவர் (ஒர்க்ஸ்) மதுசூதன் குல்கரணி, சென்னை மண்டல சுரங்க பாதுகாப்பு இயக்குநர் டி.ஆர்.கண்ணன், தென்மண்டல சுரங்க பாதுகாப்பு துணை பொது இயக்குநர் தேவ்குமார் ஆகியோர் பேசினர்.

    ஐ.ஆர்.இ.எல். துணை பொதுமேலாளர் (சுரங்கம்) ஜெயசந்த் நன்றி கூறினார். டிரேட் டெஸ்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு சுரங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், ஐ.ஆர்.இ.எல். பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தலைமை தாங்கினார். குமுதா பள்ளியின் செயலாளர் டாக்டர். அரவிந்தன், துணை செயலாளர் டாக்டர்.மாலினி, இணை தாளாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் 4 மண்டல ங்களில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் ஒவ்வொரு மண்டலத்திலும் 8 மாவட்ட அணிகள் பங்குகொண்டு லீக் மற்றும் நாக்அவுட் முறையில் விளையாடினர். கைப்பந்து போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளை தேர்வு செய்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இப்போட்டிக்காக அரியலூர், நாகர்கோயில், வேலூர், ஈரோடு மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தருமபுரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குமுதா பள்ளியில் முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் தமிழ்நாடு கைப்பந்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.
    • இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.

    தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தால் நடத்தப்படும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து சீனியர் (ஆண்கள்) சேம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடு, கோவை, தர்மபுரி, கரூர், நீலகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர் .

    ஈரோடு மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பரிந்துரைப்படி குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் அரவிந்தன், பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணைமுதல்வர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் செய்து வருகின்றனர்.

    இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.

    ×