நாகர்கோவிலில் மாநில அளவிலான 63-வது சுரங்க பாதுகாப்பு வார விழா

பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.மேலாண்மை இயக்குநர் டி.சிங் தலைமை தாங்கினார்.
நாகர்கோவிலில் மாநில அளவிலான 63-வது  சுரங்க பாதுகாப்பு வார விழா
Published on

மணவாளக்குறிச்சி:

தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐ.ஆர்.இ.எல். நிறுவனமும் இணைந்து நெல்லை மண்டலம் மற்றும் தமிழ்நாடு மாநில அளவிலான 63-வது சுரங்க பாதுகாப்பு வார நிறைவு விழா நாகர்கோவிலில் நடத்தியது. ஐ.ஆர்.இ.எல். நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.சிங் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக சுரங்க பாதுகாப்பு பொது இயக்குநர் பிரபாத் குமார், கவுரவ விருந்தினராக தென்மண்டல சுரங்க பாதுகாப்பு துணை பொது இயக்குநர் தேவ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். நிறுவன ஆலை தலைவர் செல்வராஜன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்க செயலாளர் மற்றும் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்டின் முதுநிலை பொது மேலாளர் (சுரங்கம்) ஜி.ஆர். மகேஷ் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்க அறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுரங்க பாதுகாப்பு சங்க தலைவர் மற்றும் தி ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன முதுநிலை துணைத்தலைவர் (ஒர்க்ஸ்) மதுசூதன் குல்கரணி, சென்னை மண்டல சுரங்க பாதுகாப்பு இயக்குநர் டி.ஆர்.கண்ணன், தென்மண்டல சுரங்க பாதுகாப்பு துணை பொது இயக்குநர் தேவ்குமார் ஆகியோர் பேசினர்.

ஐ.ஆர்.இ.எல். துணை பொதுமேலாளர் (சுரங்கம்) ஜெயசந்த் நன்றி கூறினார். டிரேட் டெஸ்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு சுரங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், ஐ.ஆர்.இ.எல். பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com