search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கல்லூரி"

    • செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.
    • கல்லூரிகளில் இது போன்ற குறைகளை நீக்க முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் செல்லூர் அரசு கல்லூரி உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் சட்டமன்றத்தில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில்.

    2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது.

    கூட்ட தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் எழுப்பிய கேள்வி பின்வருமாறு,

    பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியாக தொடங்கப்பட்டு, பின்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்ட, நாகப்பட்டினம் செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் மாணவர்கள் பெரும் இன்னலை சந்திக்கிறார்கள்.

    சுற்றுச்சுவர், நடைபாதை, ஆய்வகம், நூலகம், கூட்ட அரங்கம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் ஒரு கட்டிடம் மட்டும் இருக்கிறது, வகுப்பறை நடக்கிறது.

    எனவே அரசு உடனடியாக இதை பரிசீலித்து உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

    அதுபோல அங்கு நிர்வாக செலவுகளுக்கு பல்கலைக்கழகத்தை சார்ந்திருப்பதா அரசை சார்ந்திருப்பதா என்ற குழப்பம் நீண்ட நாட்களாக நீடித்தது.

    நிர்வாக செலவுகளுக்கு போதிய நிதி இல்லாமலும் அவர்கள் திண்டாடக்கூடிய சூழலை காண முடிகிறது.

    அதையும் அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து உரிய தீர்வை தருமா என்று அமைச்சர் அவர்களை அறிய விரும்புகிறேன்.

    இவ்வாறு எம்.எல்.ஏ கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அரசு கலைக் கல்லூரிகளில் இது போன்ற குறைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டுமென்று முதலமைச்சரும் நிதி ஒதுக்கி உள்ளார்.

    எனவே ஆய்வகம், விடுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

    • உடையார்பாளையத்தில் அரசு கல்லூரி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • தேசிய ஓய்வூதியர்கள் தின விழா

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் தேசிய ஓய்வூதியர்கள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நடேசன், சுந்தரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உதவி சித்த மருத்துவ அலுவலர் சையதுகரீம், இந்தியன் வங்கி கிளை மேலாளர் வெங்கடேஷ், நல்லாசிரியர் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நீத்தார் நிதி உதவி திட்ட செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில், ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு கலை கல்லூரியை உடையார்பாளையத்திற்கு மாற்ற வேண்டும். உடையார்பாளையத்தில் இயங்கி வந்த கல்வி மாவட்டத்தை மீண்டும் இங்கு செயல்படுத்த வேண்டும். புதிதாக கால்நடை மருத்துவமனை திறக்கப்படுவதற்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • புள்ளியியல் துறையில் மாணவி தமிழரசி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
    • துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.

    உடுமலை : 

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் 2021-22ம் கல்வியாண்டின் தேர்வு முடிவுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 11 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    அதன்படி இளநிலை பட்ட வகுப்புகளில் புள்ளியில் துறை மாணவி சசிரேகா முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதேபோல மாணவன் பிரவீன் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

    இதுதவிர மின் வணிகவியல் துறையில் பரமேஸ்வரி மூன்றாமிடம், நித்யா ஐந்தாமிடம், பொருளியல் துறையில் செல்வாம்பிகை 7-ம் இடம், சந்தியா 9-ம் இடம் பிடித்துள்ளனர்.தாவரவியல் துறையில் மாணவர் ஹக்கீம் 6-ம் இடம், மாணவி சத்யா 8-ம் இடம் பிடித்துள்ளனர்.

    முதுநிலை பட்ட வகுப்புகளில் சுற்றுலாவியல் துறையில் மாணவி ஹெப்சிபா, புள்ளியியல் துறையில் மாணவி தமிழரசி ஆகியோர் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். வேதியியல் துறையில் மாணவன் முகம்மதுமுஸ்தாக் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    இவர்களை கல்லூரி முதல்வர் கல்யாணி, துறைத்தலைவர்கள் சிவகுமார், மலர்வண்ணன், கோகிலா, பூங்கோதை, உருமாண்டராஜ இளங்கோ, விஜய்ஆனந்த், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர்.

    • தொட்டியத்தில் அரசு மகளிர் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்
    • தொட்டியத்தை அடுத்த மேலக் காரைக்காட்டில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தொட்டியம் பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசினார்.

    அதன் தொடர்ச்சியாக தொட்டியத்தை அடுத்த மேலக் காரைக்காட்டில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க இடம் ஆய்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன்,

    கல்லூரி கல்வி இணை இயக்குநர் குணசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை சார்பாக துணை இயக்குனர் கார்த்திக் ஆகியோர் கல்லூரி அமைக்க இடம் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலா.ந.திருஞானம், தா.பேட்டை தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாப்பாபட்டி க.பெரியசாமி, தொட்டியம் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணவேணி,

    தொட்டியம் நகர கழக செயலாளர் எம்.ஏ.ஆர்.விஜய்ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.புத்தூர் கோவிந்தராசு, எல்.ஆர்.எஸ். சுப்பிரமணி, கார்த்திகைப்பட்டி லோகநாதன், மேலக் காரைக்காடு திருப்பதி, மனோகரன் மற்றும் தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.
    • மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடுமலை :

    உடுமலை எல்லை மற்றும் பிரிவு ரோடு பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் சுமார் 2600 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். கல்லூரியின் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்டவற்றை நிறைவேற்றித் தருமாறு கல்லூரி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கூறி இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் வகுப்புகளை புறக்கணித்தும் கல்லூரி வளாகத்திற்கு அமர்ந்தும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால் வகுப்புகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மாணவர்கள் தரப்பில் கல்லூரி வளாகத்திற்குள் குடிநீர் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு ஐடி கார்டு வழங்க வேண்டும். அரசு வழங்கும் இலவச பஸ் பாஸ் உடனே வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாணவர்களின் புகார்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    • கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது.
    • கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி எல்லையில் பாரதிதாசன் பல்கலை கழகத்தின் சார்பில், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இக்கல்லூரி ஆரம்பத்தில், நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்தது,

    பின்னர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, கல்லூரிக்கு என்ற தனி இடத்தை தேர்வு செய்து, கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு, கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு, நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, அரசு கல்லூரியாக மாறியது. அரசு கல்லூரியாக மாறிய பின்பு, கல்லூரி கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பிற்கான மின் கட்டண தொகை 17 மாதங்களாக செலுத்தப்படாமல் இருந்தது.

    மின்சார வாரியம், பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் கற்பித்தல் தடை பட்டு விடக்கூடாது என்பதற்காக, மின் இணைப்பை துண்டிக்கப்படாமல் இருந்த நிலையில், கல்லூரி நிர்வாகம், மின்சார வாரியத்திற்கு, ரூபாய் ஓரு லட்சத்து 86 ஆயிரத்து 457 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை வந்தது. மின் கட்டண தொகை அதிகமான நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் நன்னிலம் அலுவலகத்தில் இருந்து மின்சார வாரிய ஊழியர்கள் நன்னிலம் அரசு கல்லூரிக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டித்தனர்.

    இதனால் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் கவுரவ பேராசிரியர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். கல்லூரிக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், காலை நடைபெற்ற வகுப்புகளோடு, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு தரப்பட்ட மின்னிணைப்பு, மின் கட்டண பாக்கியை துண்டிக்கப்பட்டது நன்னிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரசு கல்லூரி மாணவர் சாதனை படைத்தனர்
    • மாநில அளவில் கராத்தே போட்டி

    கரூர்:

    கோவையில் கராத்தே தமிழ்நாடு சங்கம் சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் குணா கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை கல்லூரியின் முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வித்துறை இயக்குநர் ராஜேந்திரன் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் பாராட்டினர்.

    • போட்டியில் சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குழந்தைகளுக்கான தடகள போட்டி நடந்தது.போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் கல்யாணி, திருப்பூர் தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் பங்கேற்றார். இந்த போட்டியில் 27 பள்ளிகள் மற்றும் கிளப்களில் இருந்து சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு உடுமலை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு கலைக் கல்லூரி உடற்கல்வித்துறை, லயன்ஸ் கிளப் ,தேஜஸ் ரோட்டரி இணைந்து செய்திருந்தனர்.

    • 211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.
    • 3-ம் கட்ட கலந்தாய்வில் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம்.

    காங்கயம் :

    காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 22ந் தேதி நடக்கிறது. கல்லூரியில் உள்ள 340 இடங்களில் 211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.

    3-ம் கட்டமாக வரும் 22-ந் தேதி நடக்கும் கலந்தாய்வில் இனசுழற்சி அடிப்படையில் மட்டுமே 'சீட்' நிரப்பப்படுகிறது. தொடர்ந்து, 26ந் தேதி நடக்கும் 3-ம் கட்ட கலந்தாய்வில், விண்ணப்பம் உள்ள மற்றும் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம். காலி இடங்களை பொறுத்தும் மதிப்பெண் அடிப்படையிலும் அனைவருக்கும் சேர்க்கை வழங்கப்படும். திருப்பூர் மற்றும் பிற மாவட்ட மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என முதல்வர் நசீம் ஜான் தெரிவித்தார்.

    • புத்தக திருவிழா கல்லூரியில் நடந்தது.
    • கல்லூரி வளாகத்தில் 76 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    ஊட்டி,

    கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தலின் படி, 75-வது சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில்‌ 7 நாட்கள்‌ கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி கடந்த 11-ந் தேதி முதல்‌ நேற்று வரை 7 நாட்கள்‌ தினமும்‌ காலை 9 மணியளவில்‌ கல்லூரி முதல்வர் எபனேசர்‌ (பொறுப்பு) தேசியக்கொடியை ஏற்றினார். கடந்த 11-ந் தேதி போதை விழிப்புணர்வு பேரணி‌, 13-ந் தேதி தேசியக்கொடி பேரணி, பேச்சு, நடனம், மாறுவேட போட்டிகள் நடைபெற்றது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், ஜான்சி ராணி உள்பட பல்வேறு வேடங்களில் தோன்றி மாணவர்கள் அசத்தினர். தொடர்ந்து கடைசி நாளான நேற்று 76-வது சுதந்திர தினம் தொடங்கி உள்ளதை குறிக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் 76 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் தாவரவியல் துறை சார்பில், புத்தக திருவிழா கல்லூரியில் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு புத்தகங்களை வாங்கி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ரவி செய்திருந்தார்.

    • போதை பொருட்களால் வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.
    • பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கலைக் கல்லூரி நிர்வாகம், ரோட்டரி பல்லடம் ரெயின்போ சங்கம், ஆகியவை இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது. பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திர குமார் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கமலம் வரவேற்றார்.

    கருத்தரங்கில், பல்லடம் எஸ்.வி.கிளினிக் தலைமை டாக்டர் பாலமுரளி கலந்துகொண்டு பேசுகையில்,போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும், வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும். எனவே போதை பொருட்களை தவிர்த்து விடுங்கள்,மேலும் உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள், போதை பழக்கத்தில் இருந்தால், அவரை திருத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், போதை பொருட்கள் பயன்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்' என ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

    • 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது.
    • முதல் நாளன்று சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2022-23ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. இளநிலை பாடப்பிரிவுகளில் 864 இடங்கள் உள்ள நிலையில் முதல் நாளன்று சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது.

    இதற்கான கலந்தாய்வு வாயிலாக 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 12 விளையாட்டுத்துறையைச்சேர்ந்த மாணவர்கள், ஒரு தேசிய மாணவர் படையைச்சேர்ந்த மாணவர் என, மொத்தம் 18 பேர் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். மாணவர்கள் தங்கள் தரவரிசையை அறிந்து கொள்ள, கல்லூரி இணையதளத்தை பார்வையிடலாம்.அதேபோல, தகுதியான மாணவர்களுக்கு சேர்க்கை கலந்தாய்வுக்கு உரிய குறுஞ்செய்தி அவரவர் மொபைல் போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த தகவலை, கல்லூரி முதல்வர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

    ×