search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகளப் போட்டி"

    • தேசிய தடகளப் போட்டிக்கு கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு செய்யபட்டுள்ளார்
    • பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது

    கரூர்:

    அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற வுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில், பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பாக கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் பிரதீப், தொடர் ஓட்டப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேர்வு செய்யப்பட்ட மாணவரை, கல்லூரி முதல்வர். உட ற்கல்வித்துறை இயக்குநர் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாண வர்களும் பாராட்டினர்.




    • போட்டியில் சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் குழந்தைகளுக்கான தடகள போட்டி நடந்தது.போட்டிகளுக்கு கல்லூரி முதல்வர் கல்யாணி, திருப்பூர் தடகள சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் பங்கேற்றார். இந்த போட்டியில் 27 பள்ளிகள் மற்றும் கிளப்களில் இருந்து சுமார் 500 குழந்தைகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு உடுமலை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை அரசு கலைக் கல்லூரி உடற்கல்வித்துறை, லயன்ஸ் கிளப் ,தேஜஸ் ரோட்டரி இணைந்து செய்திருந்தனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14 -ந் தேதி நடக்கிறது
    • 4 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14 -ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் இணைவழி மூலம் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் கே.எஸ். சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கங்களில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இப்போட்டிகள் 14,16, 18 மற்றும் 20 வயதுடையோர் என 4 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன இதில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் tnathleticassociation.com என்ற இணைய தளம் மூலமாக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் மேலும் இப்போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை செப்டம்பர் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் 33வது தென் மண்டல ஜூனியர் தட கள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கலாம்.

    மேலும் விவரம் அறிய திருப்பத்தூர் மாவட்டம் வீரர் வீராங்கனைகள் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் கே.எஸ்.சிவபிரகாசம் 9944308354 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    • போலீசில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் கிருஷ்ண ரேகா
    • 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்று உள்ளார்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட போலீசில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிபவர் கிருஷ்ண ரேகா. இவர் நெதர்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்றார்.

    இதில் உயரம் தாண்டுத லில் கிருஷ்ணரேகா தங்கப் பதக்கம் வென்றார். இதனை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் செல்போன் மூலம் கிருஷ்ணரேகாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பதக்கம் வென்ற கிருஷ்ண ரேகா ஏற்கனவே 2019-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அளவிலான காவலர் தீயணைப்பு வீரர்கள் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றுள்ளார். மாவட்ட மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×