என் மலர்
நீங்கள் தேடியது "Athletic competition"
- தேசிய தடகளப் போட்டிக்கு கரூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு செய்யபட்டுள்ளார்
- பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளது
கரூர்:
அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற வுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியில், பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பாக கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் பிரதீப், தொடர் ஓட்டப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தேர்வு செய்யப்பட்ட மாணவரை, கல்லூரி முதல்வர். உட ற்கல்வித்துறை இயக்குநர் உட்பட அனைத்து பேராசிரியர்களும், மாண வர்களும் பாராட்டினர்.
- மாவட்ட அளவில் வெற்றி பெற்று செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
- திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டபள்ளி கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவில் நடைபெ ற்ற தடகளப்போட்டி மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் திட்டச்சேரி அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்து போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று செங்கல்பட்டில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
14 வயதுக்கு உட்பட்ட வலைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும், 17 வயது பெண்கள் பிரிவில் கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும் தடகளப் போட்டியில் ஈட்டு எறிதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், தட்டு எறிதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று ள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ மாண விகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார்.
உடற்கல்வி ஆசிரியர் நிர்மல்ராஜ் வரவேற்றார்.உதவி தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம், உடற்க ல்வி ஆசிரியர் கவிதா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்துக்கொ ண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த போட்டியை திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ஒலிம்பிக் கொடியேற்றினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலகிருஷ்ணன் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார்.
இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த 535 மாணவர்களும், 525 மாணவிகளும் கலந்துகொண்டனர். போட்டிகள் 14, 17, 19 வயதின் அடிப்படையில் நடைபெற்றது. 100 முதல் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.
மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் திருவண்ணாமலையில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
- குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.
- பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு போட்டி கடந்த 17ந் தேதி முதல் நடந்து வருகிறது. குழு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து மாவட்ட தடகள போட்டி நடத்த வேண்டும்.
குறுமைய அளவில் தடகள போட்டி நடத்திய போதும், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்ததால் மாவட்ட தடகள போட்டிக்காக தேதி, நடத்துமிடம் முடிவு செய்வதில் இழுபறி நீடித்தது.பிற போட்டிகள் நடக்குமிடம், நாள் முடிவு செய்யப்பட்ட நிலையில், தடகள போட்டி குறித்து அறிவிப்பு பின்னர் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டது.தீபாவளிக்கு முன்பு 27, 28ந்தேதிகளில் அனைத்து பிரிவினருக்கான மாவட்ட தடகள போட்டிகள் அனுப்பர்பாளையத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பண்டிகை விடுமுறையில் மாணவர்களும் போட்டியில் பங்கேற்க ஆயத்தமாகினர். ஆனால் அறிவித்தப்படி போட்டி நடக்கவில்லை.
இது குறித்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் (பொறுப்பு) முருகேஸ்வரி கூறுகையில், தடகள போட்டி நடத்த தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. 2 நாள் மண்டல மேலாண்மை குழு அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு பணி மேற்கொள்ள உள்ளதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனால், தடகள போட்டி தேதி நவம்பர் முதல் வாரத்துக்கு மாற்றப்பட்டது. நவம்பர் 3, 4-ந் தேதி அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தடகள போட்டி நடத்தப்படும் என்றார்.
- பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழு விளையாட்டுப் போட்டி மற்றும் தடகளப் போட்டிகள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
சேலம்:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழு விளையாட்டுப் போட்டி மற்றும் தடகளப் போட்டிகள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்திய தடகள ஒலிம்பிக் வீரர் ஞானதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 120 பள்ளிகளைச் சேர்ந்த 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
மாணவர்கள் அணி வகுப்பு உடன் போட்டிகள் தொடங்கியது. இதில் ஓட்ட பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடக்கும் மாநில போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டியில் அசத்திய மாணவர்களை படத்தில் காணலாம்.
- பல்வேறு பகுதிகளில் இருந்து 321 பேர் கலந்துகொண்டு உற்சாகமாக போட்டியில் பங்கேற்றனர்.
- மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் செல்லமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், 13&வது ஆண்டு மூத்தோர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 5000 மீ ஓட்ட போட்டிகள், 5 கி.மீ. நடை போட்டி மற்றும் 80, 100, 110, 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தத்தித்தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நேற்று திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 321 பேர் கலந்துகொண்டு உற்சாகமாக போட்டியில் பங்கேற்றனர்.
இதில் திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் சுந்தரராஜன், செயலாளர் சுப்பிரமணியம், விவேகானந்தா சேவா அறக்கட்டளை செயலாளர் ராமசாமி, திருப்பூர் தடகள சங்க தலைவர் சண்முக சுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் விஸ்வநாதன், பொருளாளர் செல்லமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- வருகிற 2-ந் தேதி நடக்கிறது
- 28-ந் தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 14,16,18 மற்றும் 20 வயது பிரிவுகளில் தடகள போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
இதில் வெற்றி பெரும் மாணவ மாணவிகள் வரும் அக்டோபர் 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து பங்கேற்பார்கள்.
எனவே தங்கள் பள்ளி, கல்லூரியில் பயிலும் தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களில் பயிற்சி பெறும் இளம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைக்குமாறு மாவட்ட தடகள சங்க செயலாளர் எம்.சிவப்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் சரியான வயது சான்றிதழ் உடன் தங்களது உடற்கல்வி ஆசிரியர் உடன் வரும் 28-ந்் தேதிக்குள் தனி தகவல் படிவமும், பள்ளி கல்லூரிக்கான படிவத்தையும் பூர்த்தி செய்து ஜோலார்பேட்டை யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எந்த வித நுழைவு கட்டணமும் இன்றி இலவசமாக தங்களது வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும் அல்லது tdaa635601@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு போட்டியில் பங்கு பெரும் விளையாட்டு வீரர்களின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
அக்டோபர் மாதம் 2-ந்் தேதி அன்று காலை 7 மணி முதல் மாணவ மாணவிகளுக்ன போட்டிகள் நடத்தப்படும் இப் போட்டியில் பங்கு பெரும் வீரர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, வயது சான்றிதழ் மற்றும் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அனைத்தையும் கொண்டு வர வேண்டும் ஒருவர் 2 போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
ஒரே பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
வரும் 28-ந் தேதிக்கு பிறகு வரும் வருகை படிவங்கள் எதுவும் ஏற்கப்பட மாட்டாது. மேலும் தகவலுக்கு மாவட்ட தடகளப் சங்கம் செயலாளர் 9443966011 என்ற தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
- கோத்தகிரி ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
- 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
அரவேணு -
நீலகிரி, கொடைக்கானல் மண்டலத்திற்கு உட்பட்ட ஆங்கிலப் பள்ளிகளுக்கு இடையேயான 70-வது ஆண்டு வருடாந்திர தடகள போட்டிகள் ஊட்டியில் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
மொத்தம் 31 பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி பிரிகேடியர் அனுராக் பரத்வாஜ் தொடங்கி வைத்தார். ஆங்கில பள்ளிகளின் சங்கத் தலைவர் சரவணசந்தர் முன்னிலை வகித்தார். தடகள போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 192.5 புள்ளிகளை பெற்ற கோத்தகிரி ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
இதேபோல் பெண்கள் பிரிவில் ஜூட்ஸ் பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். மேலும் ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் 11, 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலிடம், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 2-ம் இடம், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
இதுமட்டுமின்றி தனிநபர் சம்பியன் ஷிப் விருதுகளை ஆண்கள் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சர்வேஸ், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் சவன் எஸ் ரெஜிநால்ட் ஆகியோரும், பெண்கள் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஹர்ஷநேத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கரீஷ்மா ஆகிய ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
மண்டல அளவிலான போட்டியில் சாதனைப் படைத்த ஜூட்ஸ் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்கள் பிரபு, வனஜா சேகர் ஆகியோரை, பள்ளி தாளாளர் தன்ராஜன், செயல் இயக்குநர் டாக்டர் சம்ஜித் தனராஜன், பள்ளி முதல்வர் சரோ தன்ராஜன் ஆகியோர் பாராட்டி ஊக்குவித்தனர்.
- 10, 12, 14 வயது பிரிவினருக்கு போட்டிகள் நடந்தது
- வெற்றி பெற்றவர்களுக்கு அறக்கட்டளை நிர்வாகிகள் பதக்கங்களை வழங்கினர்.
வேலூர்:
காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தடகள போட்டி இன்று நடந்தது.
தடகள அறக்கட்டளை சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் 10,12, 14 வயது பிரிவினருக்கு போட்டிகள் நடந்தது.
இதில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு 60 மீட்டர் ஓட்டப்போட்டியும், 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 80 மீட்டர் ஓட்ட போட்டியும், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 100 மீட்டர் ஓட்ட போட்டி, உயரம் தாண்டுதல், குண்டு எரிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
10 வயது குட்பட்டவர்களுக்கான 60 மீட்டர் ஓட்ட போட்டியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவி மஹதி தங்கப்பதக்கமும், மேல் மாயிலை சேர்ந்த தனியார் பள்ளி மாணவி ஹரிணி வெள்ளி பதக்கமும் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தடகள அறக்கட்டளை நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், யுவராஜ் ஆகியோர் பதக்கங்களை வழங்கினர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14 -ந் தேதி நடக்கிறது
- 4 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற 14 -ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் இணைவழி மூலம் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் கே.எஸ். சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் வருகிற 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கங்களில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகள் 14,16, 18 மற்றும் 20 வயதுடையோர் என 4 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன இதில் பங்கேற்க விரும்பும் விளையாட்டு வீரர்கள் tnathleticassociation.com என்ற இணைய தளம் மூலமாக தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் மேலும் இப்போட்டி மூலம் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை செப்டம்பர் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் நடைபெறும் 33வது தென் மண்டல ஜூனியர் தட கள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
மேலும் விவரம் அறிய திருப்பத்தூர் மாவட்டம் வீரர் வீராங்கனைகள் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் கே.எஸ்.சிவபிரகாசம் 9944308354 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.