search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில்   மாணவ மாணவிகளுக்கு தடகள போட்டி
    X

    சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டியில் அசத்திய மாணவர்களை படத்தில் காணலாம்.  

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு தடகள போட்டி

    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழு விளையாட்டுப் போட்டி மற்றும் தடகளப் போட்டிகள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் சேலம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குழு விளையாட்டுப் போட்டி மற்றும் தடகளப் போட்டிகள், சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இந்திய தடகள ஒலிம்பிக் வீரர் ஞானதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    இந்த போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என 120 பள்ளிகளைச் சேர்ந்த 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

    மாணவர்கள் அணி வகுப்பு உடன் போட்டிகள் தொடங்கியது. இதில் ஓட்ட பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடக்கும் மாநில போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

    சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டியில் அசத்திய மாணவர்களை படத்தில் காணலாம்.

    Next Story
    ×