

ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதல் - அைமச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நேற்று ராணிப்பேட்டை பள்ளி மைதானத்தில் நடைப்பெற்றது.
போட்டியை மாவட்ட அளவிலான தடகள போட்டியினை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 100மீ, 200மீ, 400மீ ஓட்டத்தினை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், நகரமன்ற நகரமன்ற தலைவர்கள் ஹரிணி (வாலாஜா) அமீன் (மேல்விஷாரம்) துணை தலைவர் ரமேஷ்கர்ணா, நகர செயலாளர்கள் பூங்காவனம், தில்லை, நகரமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல்லா, வினோத், குமார், உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.