search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டியில்அரசு மாதிரி பள்ளி மாணவிகள் சாதனை
    X

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டியில்அரசு மாதிரி பள்ளி மாணவிகள் சாதனை

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • ஆண், பெண் இரு பாலருக்கும், மாவட்ட அளவில் 42 போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    நாமக்கல்:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    அதில், கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஹாக்கி, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய, 5 பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும், மாவட்ட அளவில் 42 போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    பள்ளி மாணவி யருக்கான போட்டியில், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்றனர். அதில், பிளஸ்-2 மாணவி கீர்த்தனா, உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார். பிளஸ்-1 மாணவி ஸ்ரீசிவநிதி 800 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதலில் முதலிடம், 400 மீ. ஓட்டத்தில் 3-ம் இடம் பிடித்தார்.

    9-ஆம் வகுப்பு மாணவி சந்தியா குண்டு எறியும் போட்டியில் 2-ம் இடம் பெற்றார். மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில், பிளஸ் 2 மாணவி ஷோபனா பிரியா 100 மீ. ஓட்டத்தில் 2-ம் இடம் பிடித்தார்.

    வெற்றி பெற்ற மாணவியருக்கு, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. ராஜேஸ்குமார், கலெக்டர் உமா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். அரசு ஊழியர்களுக்கான போட்டியில், இப்பள்ளி தமிழ் ஆசிரியர் வீரராகவன், நீளம் தாண்டுதலில் 2-ம் இடம், உடற்கல்வி ஆசிரியர் ஜீவா, கையுந்து பந்து குழு போட்டியில் முதலிடம் பெற்றனர்.

    இப்போட்டிகளில் வெற்றிபெற்ற, மோகனூர் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஆசிரியருக்கு, ரூ. 19 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் முதலிடம் பெற்ற மாணவியர், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×