search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கல்லூரி"

    • மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.
    • மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:- 2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது.

    இதுவரை நடைபெற்ற கலை மற்றும் வணிகவியல் பிரிவில் மொத்தமாக 326 பேர் சேர்ந்து உள்ளனர்.தொடர்ந்து நேற்று இளநிலை அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதில் இயற்பியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும்,வேதியியல் பாடப்பிரிவில் 27 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், புள்ளியியல் பாடப்பிரிவில்2 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவில் 7 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 14 மாணவர்களும், கணினிஅறிவியல் பாடப்பிரிவில் 47 மாணவர்களும்,தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் மற்றும் பிபிஏ பாடப்பிரிவில் தலா ஒருவரும் ஆக மொத்தம் 110 பேர் சேர்ந்து உள்ளனர்.இன்று அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது.

    பிற்பகல் 2 மணியளவில் தமிழ்இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் தொடர்ந்து ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவு மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ், ஆதார் அட்டை , சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள் , பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம் , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல் , தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு வரவேண்டும்.மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும் இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

    • மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது.
    • ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தமிழரசி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:- 

    திருவெண்ணை நல்லூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது. இதில், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம். தொடர்ந்து, பொது கலந்தாய்வு ஜூன் 5-ந் தேதி கணினி அறிவியல் கணிதம் இயற்பியல் வேதியல் தாவரவியல் விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் இந்த பாடப்பிரிவலுக்கு கட்டணம் 2740 ஆகும்.

    ஜூன் 6-ந் தேதி வணிகவியல் காலை 9.30 மணி அளவில் தொடங்கும் இதற்கு கட்டணம் ரூ.2,720 ஆகும். ஜூன் 7-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்தாய்வு நடைபெறும். இதற்கு கட்டணம் 2.720 ரூபாய் ஆகும். ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் இவற்றின் உண்மைச் சான்றிதழ் உடன் 2 பிரதிகள், ஜெராக்ஸ் 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும்.

    சேர்க்கைக்கான கட்ட ணத்தை அன்றே அலுவ லகத்தில் செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பம் செய்த வர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், www.gasctvn.com என்ற இக்கல்லூரியின் இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் குறுஞ் செய்தி மற்றும் புலனம் (வாட்ஸ் அப்) வழியாக தகவல் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிய கல்லூரியை அணுகலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • 624 மாணவர்கள் இந்த பாடப்பிரிவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்
    • 1-ந்தேதி தமிழ், வரலாறு, பொருளாதாரம் தொடர்பான பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மதிப்பெண் பட்டியல்கள் ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்து கொண்டனர். பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கும், என்ஜினீயரிங் மற்றும் பட்டப்படிப்பிற்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.

    நாகர்கோவில் கோணம் அரசு கலைக்கல்லூரியில் 11 பாடப்பிரிவுகள் உள்ளது. 624 மாணவர்கள் இந்த பாடப்பிரிவில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 21 பேரும் என்.சி.சி. மாணவர்கள் 77 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 16 பேரும், இந்நாள் ராணுவத்தின் வாரிசுகள் 2 பேரும் விளையாட்டு வீரர்கள் 206 பேரும், அந்தமான் நிக்கோபார் பகுதியில் வசிப்பவர்கள் ஒருவரும் விண்ணப்பித்திருந்தனர்.

    இவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு கோணம் அரசு கல்லூரியில் இன்று நடந்தது. கல்லூரி முதல்வர் முன்னிலையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. சிறப்பு கலந்தாய்வுக்கு 350-க்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 50 மாணவ-மாணவிகள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க வந்திருந்தனர்.

    இதில் 16 மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நாளை பிபிஏ, பி.காம், இங்கிலீஷ் பாடப்பிரிவிற்கும், நாளை மறுநாள் அறிவியல் தொடர்பான பாடப்பிரிவிற்கும், 1-ந்தேதி தமிழ், வரலாறு, பொருளாதாரம் தொடர்பான பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    • 864 இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • ஜூன் 12 முதல் 20 வரை இரண்டாம் பொது கலந்தாய்வு நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம் உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தற்போது தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதிகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் இன்று கல்லூரிக்கு அனுப்பப்படுகிறது.தொடர்ந்து 29-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஜூன் 1 முதல் 10 வரை பிற மாணவர்களுக்கான முதல் பொது கலந்தாய்வும், ஜூன் 12 முதல் 20 வரை இரண்டாம் பொது கலந்தாய்வும் நடக்கிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ந்தேதி துவங்குகிறது. 

    • 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்கள் உள்ளன.
    • 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம் உட்பட இளநிலையில் மட்டுமே 22 பாடப்பிரிவுகளுக்கு 864 இடங்கள் உள்ளன.சேர்க்கைக்கான பதிவுகளை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். சேர்க்கைக்கான பதிவுக்கு மே 19 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வருகிற 26ம் தேதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து 29-ந் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 30-ந் தேதி முதல் ஜூன் 2-ந் தேதி வரை பிற மாணவர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

    • திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடை பெறுகிறது.
    • விண்ணப்பிக்க வருகிற 19-ந் தேதி கடைசி நாளாகும்

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ராஜா வரதராஜா வெளியிட்டுள்ள செய்த குறிப்பில் கூறியிப்பதாவது:-

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி தற்போது பூதலூரில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்தக் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கை முழுவதுமாக இணைய தளம் வழியில் மட்டுமே நடைபெற உள்ளது.

    தகுதியுள்ள மாணவர்கள் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்குஉரிய இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் மற்றும் தமிழ், பி காம், பிஎஸ்சி கணினி அறிவியல், பி பி ஏ ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.

    விண்ணப்பங்கள் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாள்.

    மேற்கொண்டு விவரங்க ளுக்கு பூதலூரில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகி விவரம் பெற்று க்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அசையும், அசையா சொத்து விபரங்களை முழுமையாக, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர்.
    • 10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற விபரம் கேட்கப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க, கல்லூரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து, அரசு கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:- அசையும், அசையா சொத்து விபரங்களை முழுமையாக, 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர். அதற்கான காரணங்கள் ஏதும் தெளிவாக கூறவில்லை. கருவூலத்துறையில் இதற்கான பிரத்யேக படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அந்தந்த கல்லூரி முதல்வர்கள், மண்டல கல்லரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற விபரம் கேட்கப்பட்டது. அதன் பின் இவ்விபரங்கள் கேட்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு கல்லூரிகளில் மே 9-ந்தேதி முதல் கிடைக்கும்.
    • மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகம் வருகிற மே 1-ந் தேதி தொடங்குகிறது.

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் மே 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் நிலையில் இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள 633 தனியார் கல்லூரிகள் மற்றும் 163 அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.

    • தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் சிவகங்கை அரசு கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்று பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி அரங்கில் தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் தமிழ்க்கனவு நிகழ்ச்சி கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும் எதிர்கால சந்ததியி னர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் சமூக விழிப்புணர்வையும் பொருளாதார முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ் மரபும் அதன் நாகரீகம் குறித்தும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, பண்டைய கால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான அடையாளங்களை வெளிக்கொணர்கின்ற வகையில் தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கு பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி புத்தகமும், தமிழ் பெருமிதம் குறித்த குறிப்பேடும் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு, பண்பாட்டிற்கும், எதிர்காலத்திற்கும் வழிகாட்டிடும் வகையில், அடிப்படையாகத் திகழும் இந்நிகழ்ச்சியின் மூலம் சிறந்த சொற்பொழி வாளர்கள் வாயிலாக எடுத்துரைக்கப்படும் கருத்துக்களை உள்வாங்கி, மாபெரும் தமிழ் கனவினை நனவாக்குகின்ற வகையில் மாணவர்கள் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களை சார்ந்தவர்களும் எடுத்துரைத்து, பயன்பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன், சொற்பொழிவாளர்கள் ராஜா, யாழினி (மருத்துவர்), சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் துரையரசன் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் மன்ற விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார். கணிதத்துறை பேராசிரியர் புஷ்பராணி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி பேராசிரியை ஆனந்த லெட்சுமி கலந்து கொண்டு கணிதத்தின் மூலம் உலகைப் புரிந்து கொள்வது என்ற தலைப்பில் உரை யாற்றினார். விழாவில் கணித மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது.

    கணித மன்ற விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதவியல் துறை மூன்றாமாண்டு மாணவி முத்து சரஸ்வதி நன்றி கூறினார். விழா ஏற்பாடு களை கணிதத் துறை பேராசிரியர்கள் கீதா, தேன்மொழி, பிரேசில், பொன் செல்வகுமாரி, ஸ்டெபி ராஜ வின்செலஸ், ஜாபியா டினோ மெர்ஸி ஆகியோர் செய்திருந்தனர்.

    • தேர்தல் அறிக்கையில் கவுரவ பேராசிரியர்களை பணி நிரந்தம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
    • அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கல்லூரி வளாகம் முன்பு கவுரவ பேராசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கவுரவ பேராசிரியர்களாக குறைந்த சம்பளத்தில் பணிபுரிகிறோம்.

    தேர்தல் அறிக்கையில் கவுரவ பேராசிரியர்களை பணி நிரந்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். மேலும், அடுத்த கட்டமாக வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.
    • சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் : 

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் சுமாா் 11 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களை கொண்ட 10 வகுப்பறைகளும், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பில் சுமாா் 24 ஆயிரம் சதுர அடியில் 5 தளங்களை கொண்ட 18 வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன.முன்னதாக திருப்பூா் சிக்கண்ணா மற்றும் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக்கல்லூரிகளில் நடைபெற்ற திறப்பு விழாவில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    ×