search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறப்புவிழா"

    • திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் புதிய பிரதான கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    • திருப்பூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உயர்கல்வித்துறை சார்பில் புதிய பிரதான கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    திருப்பூர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் , மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:-

    எல்.ஆர்.ஜி மகளிர் கலைக்கல்லூரியில் சிதலமடைந்துள்ள முதன்மை கட்டிடத்திற்கு மாற்றாக ரூ.10.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பிரதான கட்டிடத்தை முதல் அமைச்சர் திறந்து வைத்தார். இந்த கட்டிடம் பல்வேறு வசதிகளுடன் மூன்று தளங்களாக கட்டப்பட்டுள்ளது.

    இதில் தரைதளத்தில் முதல்வர் அறை, நூலகம், இயற்பியல் ஆய்வகம், இயற்பியல் புத்தக சேமிப்பு அறை, தேர்வு அறை, டிஜிட்டல் அறை, பதிவறை மற்றும் உடற்பயிற்சி அறைகளும், முதல் தளத்தில் ஆசிரியர்கள் அறை, விலங்கியல் அருங்காட்சியம் அறை, 4 வகுப்பறைகள்,4 ஆய்வகங்கள் மற்றும் விலங்கியல் புத்தக சேமிப்பு அறைகளும்,

    இரண்டாம் தளத்தில் ஆசிரியர்கள் அறை, 12 வகுப்பறைகள், கருத்தரங்கு கூடம் மற்றும் புத்தக சேமிப்பு அறைகளும் உள்ளன. மேலும், அனைத்து தளங்களிலும் கழிப்பறை வசதிகள், உடல் திறன் குறைந்தோருக்கான சாய்வுதளம், திறந்தவெளி கலையரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், மழைநீர் சேமிப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இக்கட்டடத்தில் இடம் பெற்றுள்ளன என்றார்.

    திறப்பு விழா நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், 2-ம் மண்டல தலைவர் கோவிந்தராஜ், எல்.ஆர்.ஜி. கல்லூரி முதல்வர் எழிலி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் சக்திவேல், உதவி பொறியாளர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    அவிநாசி:

    அவிநாசியில் அவிநாசியப்பா் உழவா் உற்பத்தி நிறுவனம் திறப்பு விழா, உறுப்பினா் சோ்க்கை முகாம், விவசாய கருத்தரங்கு என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர் கிறிஸ்துராஜ் உழவா் உற்பத்தி நிறுவனத்தை திறந்துவைத்தாா்.

    பின்னா், அவா் பேசியதாவது:- விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தாங்களே சந்தைப்படுத்தும் வகையில் உழவா் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளனா். இம்மையத்தில் தக்காளி, வெங்காயம், வெண்டைகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் நேரடியாக விற்பனை செய்யவுள்ளனா். இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

    இந்த உழவா் உற்பத்தி நிறுவனத்தில் சேரும் உறுப்பினா்களுக்கு காப்பீடு வழங்குவதுடன், கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் 10 சதவீத சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளனா். இதேபோல விவசாயத்துக்கான தேவையான அரசு மானியங்கள், வங்கி உதவிகள் ஆகியவற்றையும் செய்துத் தருகின்றனா் என்றாா்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் மாரியப்பன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) அசோக்குமாா், வேளாண்மை உதவி இயக்குநா் அன்பழகி, மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளா் ரவி, பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளா் பொன்னுக்குட்டி, சின்னேரிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், உழவா் உற்பத்தி நிறுவன உறுப்பினா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா் .

    • அதிக மக்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் பொதுமக்களுக்கு தரமான பால் கிடைக்க ஆவின் பால் நிலையம் தொடங்கப்பட்டது
    • ஆவின் பால் விற்பனை நிலையத்தை ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் ரூ.3 லட்சத்தில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையத்தை ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து ைவத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில் "தாராபுரம் வடக்கு பகுதியில் அதிக மக்கள் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு தனியார் பால் நிறுவனங்களை விட குறைந்த விலையில் பால் மற்றும் பால் பொருட்கள் கலப்படம் இல்லாமல் சுத்தமான முறையில் கிடைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் அதிக மக்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் பொதுமக்களுக்கு தரமான பால் கிடைக்க ஆவின் பால் நிலையம் தொடங்கப்பட்டது என்றார். இதையடுத்து அமைச்சர் அலுவலகத்தில் காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில், மேலாண்மை இயக்குனர் கனகராஜ், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க செயலாளர் ஜெயராமமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ். தனசேகர், மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வராஜ், தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர அவைத்தலைவர் கதிரவன், நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.
    • புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் - பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.4.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜையும், ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி திறப்பு விழாவும் நடைபெற்றது.

    விழாவில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலந்து கொண்டு கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை செய்தும், புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும் திறந்து வைத்தார்.

    இதில் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள், ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் எஸ்.எம்.பழனிச்சாமி, முன்னாள் சேர்மன் தங்கராஜ், கொண்டத்துக்காளியம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யம் மகராஜ்,வார்டு உறுப்பினர்கள் யுவராஜ்,முருகேஷ், குமார், ராசப்பன் மற்றும் அங்கன்வாடி ஆசிரியைகள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மூன்று அடுக்கு கட்டிடத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியாளர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது.

     தாராபுரம், ஜூன்.30-

    தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட வசந்தம் நகரில் ரூ.2 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் புதிய கட்டிடம் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.வேளாண்மை உதவி இயக்குநர் கே.லீலாவதி அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வேளாண்மை விரிவாக்க உதவி அலுவலர்கள், தோட்டகலை உதவி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மூன்று அடுக்கு கட்டிடத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியாளர் துறை ஆகிய அலுவலகங்கள் ஒன்றிணைந்து செயல்பட உள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் ரூ.81 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்தக கட்டிடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
    • அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக் குட்டம் மற்றும் பள்ளப்பட்டி கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்தம் ரூ.81லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம்தென்ன ரசு மருந்தக கட்டிடங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கடைக்கோடி கிராம பகுதி கள் வரை பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பொதுவாக நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும்.

    அதற்கு இணையாக கால் நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவி யாக கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் கால்நடைகளை வளர்க்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வரு கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்து லட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் கேப்பர்மலையில் உள்ள அரசு நெஞ்சக காசநோய் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது,
    • விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலையில் உள்ள அரசு நெஞ்சக காசநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக என்.எல்.சி. சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் ரூ.83 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 40 படுக்கைகளுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். என்.எல்.சி. தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி முன்னிலை வகித்தார். விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, மேலாண்மை குழந்தை வளர்ப்பு கையேட்டினை வெளியிட்டார். மேலும் கர்ப்பினி தாய்மார்களுக்கு கையேட்டினை வழங்கி பேசினார்.

    விழாவில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, பொது சுகாதாரம் துணை இயக்குனர் டாக்டர் மீரா, என்.எல்.சி. இயக்குனர் (மனிதவளம்) சமீர் ஸ்வரூப், துணை இயக்குநர் (காசநோய் பணிகள்) டாக்டர் கருணாகரன் , டாக்டர் சிவபிரகாசம், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் திறப்புவிழா நடந்தது.
    • இந்த மையத்தில் 7 நாட்களுக்கு இலவச ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

    மதுரை

    மதுரை விரகனூரில் அப்பலோ டயக்னாஸ்டிக்ஸ் ரத்த பரிசோதனை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. டாக்டர் ஏ. ஜே. பாலாஜி ஏற்பாட்டில் நடைபெற்ற ரத்த பரிசோதனை மைய திறப்பு விழாவில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கலந்துகொண்டு பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ரத்த பரிசோதனை ஆய்வகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட எம். ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மதுரை மாவட்ட வக்கீல் சங்க தலைவர் மோகன் குமார், திருச்சி எம்.எஸ்.ஆர். ராஜேந்திரன், அரசு வழக்கறி ஞர்கள் கோட்டைச்சாமி, தீபக் மற்றும் முக்கிய பிர முகர்கள் டாக்டர்கள் திர ளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் விரகனூர் ஜெயச்சந்திரன், அமுதா சாமுண்டீஸ்வரி மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    இந்த ரத்த பரிசோதனை மையத்தில் வருகிற 23- தேதி வரை 7 நாட்களுக்கு இலவசமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமாறு ரத்த பரிசோதனை நிலைய பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    • முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.
    • சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் : 

    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆகியவற்றில் கூடுதல் வகுப்பறைகளை திறந்துவைத்தாா்.

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பில் சுமாா் 11 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களை கொண்ட 10 வகுப்பறைகளும், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.3 கோடியே 74 லட்சம் மதிப்பில் சுமாா் 24 ஆயிரம் சதுர அடியில் 5 தளங்களை கொண்ட 18 வகுப்பறைகள் திறந்துவைக்கப்பட்டன.முன்னதாக திருப்பூா் சிக்கண்ணா மற்றும் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக்கல்லூரிகளில் நடைபெற்ற திறப்பு விழாவில் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ் பங்கேற்று வகுப்பறைகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    • திருப்பத்தூர் அருேக நடுவிக்கோட்டையில் நடந்த வி.எஸ்.எம். திருமண மகால் திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
    • சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனர் சேதுகுமணன் பங்கேற்றார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் கண்டர மாணிக்கம் அருகே உள்ள நடுவிக்கோட்டையில் உள்ள மேலையூர் கிராமத்தில் ஆ.று.வீரய்யா சேர்வை சவுந்தரம்மாள் (வி.எஸ்.எம்.) திருமண மஹால் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

    விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக 'கல்வி தந்தை' என போற்றப்படும் சேதுபாஸ்கரா கல்வி குழும நிறுவனரான சேது குமணன் பங்கேற்று வி.எஸ்.எம். திருமண மகாலை திறந்து வைத்தார். இதில் பொறியாளர் ராஜா, காளிமுத்து, ஜெயக்குமார், கவுதமன், ஊராட்சி மன்ற தலைவர் வசந்தா சோமன் மற்றும் பல்வேறு கட்சியை சார்ந்த அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கி யஸ்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முன்னதா விழாவில் பங்கேற்ற சேதுகுமணன் சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    • விளை பொருள்களை நியாயமான விலைக்கு விற்று பயன்பெறலாம்.
    • குன்னத்தூா், தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தன.

    குன்னத்தூர் :

    குன்னத்தூரில் ரூ.3.75 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

    இதைத் தொடா்ந்து, குன்னத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தாா். இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று பேசியதாவது: - தமிழக முதல்வரால் திறக்கப்பட்டுள்ள இந்த விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தங்களுடைய விளை பொருள்களை இடைத்தரகா்களின் குறுக்கீடு இன்றி நியாயமான விலைக்கு விற்று பயன்பெறலாம். விலை வீழ்ச்சி காலங்களில் விளைபொருள்களை கிடங்கில் இருப்புவைத்து பொருளீட்டு கடன் பெறலாம். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குன்னத்தூா், தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மட்டுமே வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தன.தற்போது குன்னத்தூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சொந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.அதிலும் சேமிப்பு கிடங்கு, பரிவா்த்தனை கூடம், உலா்களம், அலுவலக கட்டடம், சுகாதார வசதி, சுற்றுச்சுவா் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்துள்ளாா் என்றாா்.

    இதைத்தொடா்ந்து, 2 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மானிய விலையில் மின்கல ெதளிப்பான்கள், ரூ. 6 ஆயிரம் மதிப்பில் விதை, உரங்கள் உள்ளிட்டவைகளை அமைச்சா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மகாதேவன், வேளாண் இணை இயக்குநா் சின்னச்சாமி, வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சண்முக சுந்தரம், திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலைச் செயலாளா் பாலசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • கோதாண்டராமபுரத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
    • ஊராட்சி தலைவர் பிரேமராதா ஜெயம் தலைமை தாங்கி குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு மடத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோதாண்டராமபுரத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பிரேமராதா ஜெயம் தலைமை தாங்கி குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் வார்டு உறுப்பினர் கண்ணன் மற்றும் வெங்கடேஷ், முருகன், சாத்தாகன்னி, கன்னிகா, சித்ரா, காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×