என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆனைக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கால்நடை மருந்தக கட்டிடத்தை திறந்து வைத்தார்.
ரூ.81 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்தக கட்டிடங்கள்
- விருதுநகர் மாவட்டத்தில் ரூ.81 லட்சம் மதிப்பிலான கால்நடை மருந்தக கட்டிடங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
- அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக் குட்டம் மற்றும் பள்ளப்பட்டி கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்தம் ரூ.81லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருந்தக கட்டி டங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம்தென்ன ரசு மருந்தக கட்டிடங்களை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கடைக்கோடி கிராம பகுதி கள் வரை பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
பொதுவாக நமது பகுதி விவசாய தொழிலேயே நம்பி வாழும் பகுதியாகும்.
அதற்கு இணையாக கால் நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கால்நடை வளர்ப்பவர்களுக்கு உதவி யாக கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் தேவையான திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதுடன் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அதிகளவில் கால்நடைகளை வளர்க்க அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வரு கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் கோவில்ராஜா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்து லட்சுமி, துணைத்தலைவர் விவேகன்ராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






