search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கேப்பர்மலையில் உள்ள காசநோய்                  மருத்துவமனையில் புதிய கட்டிடம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
    X

    கடலூர் கேப்பர்மலையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

    கடலூர் கேப்பர்மலையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் புதிய கட்டிடம்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

    • கடலூர் கேப்பர்மலையில் உள்ள அரசு நெஞ்சக காசநோய் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது,
    • விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலையில் உள்ள அரசு நெஞ்சக காசநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக என்.எல்.சி. சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் ரூ.83 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 40 படுக்கைகளுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். என்.எல்.சி. தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி முன்னிலை வகித்தார். விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, மேலாண்மை குழந்தை வளர்ப்பு கையேட்டினை வெளியிட்டார். மேலும் கர்ப்பினி தாய்மார்களுக்கு கையேட்டினை வழங்கி பேசினார்.

    விழாவில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, பொது சுகாதாரம் துணை இயக்குனர் டாக்டர் மீரா, என்.எல்.சி. இயக்குனர் (மனிதவளம்) சமீர் ஸ்வரூப், துணை இயக்குநர் (காசநோய் பணிகள்) டாக்டர் கருணாகரன் , டாக்டர் சிவபிரகாசம், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், காசிராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×